உள்ளடக்கத்துக்குச் செல்

வசபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசபன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகி.பி.67 – கி.பி.111
முன்னிருந்தவர்சுபகராஜன்
வங்கனசிக திச்சன்
மனைவி
  • பொத்த
அரச குலம்முதலாம் இலம்பகர்ண வம்சம்
இறப்புகி.பி. 111

வசபன் என்பவன் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையில் பெரிய அளவில் நீர்ப்பாசனத்திற்காக குளங்களை ஏற்படுத்திய அரசர்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறான்.[1] நீர்ப்பாசன வளர்ச்சிக்கு மட்டுமன்றி பௌத்த சமயத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ளான். சுபகராஜனைக் கொன்றதன் பின்னர் ஆட்சியேறிய இவன் இலங்கை வராலாற்றிலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினான். அதாவது ஒரு புதிய வம்சம் ஆட்சிக்கு வந்தது.

சிறு பராயம்

[தொகு]

இலம்பகர்ண வம்சத்தைக் சேர்ந்தவன். இலங்கையில் வட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த தனது மாமனாரின் கீழ் வசபன் வேலை செய்து வந்தான். இக்காலத்தின் சுபகராஜ மன்னனே நாட்டை ஆண்டு வந்தான். சுபகராஜனை "வசபன்" எனும் பெயர் கொண்டவன் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றுவான் என சோதிடம் பார்பவர்கள் கூறினர். இதன் பொருட்டு "வசபன்" எனும் பெயர் கொண்ட அனைவரையும் கொன்றுவிடுமாறு மன்னன் உத்தரவிட்டான். எனினும் வசபனின் மாமனார் அவனை இரகசியமாக தனது இராணுவப்படையில் சேர்த்துக்கொண்டான். மாமனாரது மனைவியான பொத்த, சுபகராஜனின் கட்டளை பற்றி எடுத்துக்கூறி கவனமாக மறைந்துவாழுமாறு அறிவுரையும் கூறினாள். [2]

இராணுவத்தில் சேர்ந்துகொண்ட வசபன் வளர்ச்சிகண்டு மன்னன் மீது படையெடுப்பு மேற்கொண்டான். இப்படையெடுப்பினால் தனது மாமனையும் சுபகராஜனையும் கொன்று கி.பி. 67 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான். தான் இறக்கும் வரையிலும் (கி.பி. 111) 44 ஆண்டுகளாக வசபன் ஆட்சியில் இருந்தான். [2] இவனிலிருந்து புதிதாக முதலாம் லம்பகர்ண வம்சம் (66–436) ஆரம்பமானது. [3]

சேவைகள்

[தொகு]

இவர் மகாவிலச்சிய, ஏரு, மாகம் வாவி, நோச்சிபொத்தன, கிரிவட்டுன போன்ற 11 குளங்களையும் எலகரக்கால்வாய் உட்பட 12 கால்வாய்களையும் அமைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவற்றில் முக்கியமானது எலகரக் கால்வாய் ஆகும், ஏனினில் இதன் நீளம் 30 மைல்கள் (48 கி.மீ) ஆகும். அம்பன் எனும் ஆற்றில் அணை ஒன்றைக் கட்டியதன் மூலம் இக்கால்வாய் உருவாக்கப்பட்டது. இக்கால்வாய் வேளாண்மை செய்வதற்கான நீரைப்கஞணணபெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது. இப்படியான பல குளங்களையும் கால்வாய்களையும் வசபன் கட்டியமையால் இவன் பாரிய நீர்வடிகால் தொகுதி ஒன்றை நாட்டினில் அமைத்ததாகக் கூறப்படுகின்றது. [1]

பௌத்த மதத்திற்காகவும் வசபன் சேவையாற்றியுள்ளான். வட்டதாகே, தூபாராமய போன்றவற்றை புனர் நிர்மாணம் செய்துள்ளான்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Siriweera, W. I. (2004). History of Sri Lanka. Dayawansa Jayakodi & Company. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-551-257-4.
  2. 2.0 2.1 Wijesooriya, S. (2006). A Concise Sinhala Mahavamsa. Participatory Development Forum. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9140-31-0.
  3. Nicholas, C. W.; Paranavitana, S. (1961). A Concise History of Ceylon. Colombo University Press. p. 77.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
வசபன்
பிறப்பு: ? ? இறப்பு: ? கி.பி. 111
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
67–கி.பி. 111
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசபன்&oldid=4086915" இலிருந்து மீள்விக்கப்பட்டது