ஒகாரிக திச்சன்
Appearance
ஒகாரிக்க திச்சன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | 215 - 237 |
முன்னிருந்தவர் | முதலாம் சிறிநாகன் |
அபய நாகன் | |
அரச குலம் | முதலாம் இலம்பகர்ண வம்சம் |
தந்தை | முதலாம் சிறிநாகன் |
ஒகாரிக திச்சன் (பொ.பி. 215 - 237) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் பத்தாமானவன். இவனது தந்தையான முதலாம் சிறிநாகன் (பொ.பி. 196 - 215) முதலாம் லம்பகர்ண அரசர் வம்சத்துள் ஒன்பதாமானவன். இவன் சட்டவியலை (ஒகாரிகவியல்) நன்கு பயின்றதனால் ஒகாரிக திச்சன் என்றழைக்கப்பட்டான். இவனது ஆட்சியில் இலங்கையில் மகாயான பௌத்தம் நுழையத் தொடங்கியது. அதற்கு முன்பே அங்கு தேரவாத பௌத்தம் இருந்ததனால் அதைச் சேர்ந்த இவன் தன் அமைச்சரான கபிலன் என்பவனைக் கொண்டு மகாயான பௌத்தம் இலங்கையில் பரவுவதைத் தடுத்தான்.
மூலநூல்
[தொகு]- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.