உள்ளடக்கத்துக்குச் செல்

லிப்பிஸ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிப்பிஸ் (P079)
மலேசிய மக்களவைத் தொகுதி
பகாங்
Lipis (P079)
Federal Constituency in Pahang
லிப்பிஸ் மக்களவைத் தொகுதி
(P079 Lipis)
மாவட்டம்லிப்பிஸ் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை47,124 (2022)[1]
வாக்காளர் தொகுதிலிப்பிஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா லிப்பிஸ்
பரப்பளவு3,004 ச.கி.மீ[2]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அப்துல் ரகுமான் முகமது
(Abdul Rahman Mohamad)
மக்கள் தொகை67,853 (2020) [3]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]




2022-இல் லிப்பிஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[4]

  மலாயர் (30.9%)
  சீனர் (27.0%)
  இதர இனத்தவர் (30.0%)

லிப்பிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lipis; ஆங்கிலம்: Lipis Federal Constituency; சீனம்: 立卑国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், லிப்பிஸ் மாவட்டத்தில் (Lipis District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P079) ஆகும்.[5]

லிப்பிஸ் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து லிப்பிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

லிப்பிஸ் மாவட்டம்

[தொகு]

லிப்பிஸ் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா லிப்பிஸ். பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது.

பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து 235 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் உள்ளது.

கோலா லிப்பிஸ்

[தொகு]

லிப்பிஸ் மாவட்டத்திற்கு மேற்கில் கேமரன் மலை, கிழக்கில் ஜெராண்டுட்; வடக்கில் ரவுப் ஆகிய நகரங்கள் உள்ளன. அத்துடன் கிழக்கில் பேராக் மாநிலம்; வடக்கில் கிளாந்தான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

கோலா லிப்பிஸ் நகரம் 1898-ஆம் ஆண்டில் இருந்து 1955-ஆம் ஆண்டு வரை 57 ஆண்டுகளுக்கு பகாங் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் குவாந்தான் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஈயம், தங்கம் போன்ற கனிமங்கள் மற்றும் காட்டுப் பொருட்களின் விளைச்சல்களுக்கு லிப்பிஸ் மாவட்டம் பெயர் பெற்றது.

லிப்பிஸ் மக்களவைத் தொகுதி

[தொகு]
லிப்பிஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் லிப்பிஸ் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P064 1959–1962 முகமது சூலோங் முகமது அலி
(Mohamed Sulong Mohd Ali)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1962–1963 அப்துல் ரசாக் உசின்
(Abdul Razak Hussin)
மலேசிய மக்களவை
1-ஆவது மலேசிய மக்களவை P064 1963–1964 அப்துல் ரசாக் உசின்
(Abdul Razak Hussin)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[7]
3-ஆவது மக்களவை P064 1971–1972 அப்துல் ரசாக் உசின்
(Abdul Razak Hussin)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1972–1973 கசாலி சாபி
(Ghazali Shafie)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மக்களவை P065 1974–1978
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P072 1986–1990 வாங் சூன் விங்
(Wang Choon Wing)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
8-ஆவது மக்களவை 1990–1995 சான் கோங் சோய்
(Chan Kong Choy)
9-ஆவது மக்களவை P075 1995–1997 அபு தராரி ஒசுமான்
(Abu Dahari Osman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
1997–1999 அமிஅம்சா அகமது
(Amihamzah Ahmad)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P079 2004–2008 முகமது சாரும் ஒசுமான்
(Mohamad Shahrum Osman)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 அப்துல் ரகுமான் முகமது
(Abdul Rahman Mohamad)
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

லிப்பிஸ் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாரிசான் நேசனல் அப்துல் ரகுமான் முகமது
(Abdul Rahman Mohamad)
17,672 49.29% 0.53%
பெரிக்காத்தான் நேசனல் முகமது சாரும் ஒசுமான்
(Mohamad Shahrum Osman)
11,554 32.22% 32.22% Increase
பாக்காத்தான் அரப்பான் தெங்கு சுல்புரி சா ராஜா புஜி
(Tengku Zulpuri Shah Raja Puji)
6,366 17.75% 8.68%
தாயக இயக்கம் அயிசாதுன் அபு பக்கர்
(Aishaton Abu Bakar)
263 0.76% 0.76% Increase
செல்லுபடி வாக்குகள் (Valid) 35,855 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 388
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 100
வாக்களித்தவர்கள் (Turnout) 36,343 76.09% 5.13 %
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 47,124
பெரும்பான்மை (Majority) 6,118 17.07% 6.31%
பாரிசான் நேசனல் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  4. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  8. "Pahang GE 2022 Results". Star Media Group Berhad. பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]