பாயா பெசார் மக்களவைத் தொகுதி
பாயா பெசார் (P084) மலேசிய மக்களவைத் தொகுதி பகாங் | |
---|---|
Paya Besar (P084) Federal Constituency in Pahang | |
பாயா பெசார் மக்களவைத் தொகுதி (P084 Paya Besar) | |
மாவட்டம் | குவாந்தான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 79,744 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பாயா பெசார் |
முக்கிய நகரங்கள் | குவாந்தான், பாயா பெசார் |
பரப்பளவு | 2,218 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமது சகார் அப்துல்லா (Mohd Shahar Abdullah) |
மக்கள் தொகை | 128,041 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பாயா பெசார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Paya Besar; ஆங்கிலம்: Paya Besar Federal Constituency; சீனம்: 巴耶勿刹国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P084) ஆகும்.[5]
பாயா பெசார் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து பாயா பெசார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
குவாந்தான் மாவட்டம்
[தொகு]குவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
முதலாம் நூற்றாண்டில் சித்து அரசு (ஆங்கிலம்: Chih-Tu அல்லது Chihtu; மலாய்: Tanah Merah) எனும் பேரரசின் ஒரு பகுதியாகக் குவாந்தான் மாவட்டம் இருந்தது. 'சிது' என்றால் 'சிகப்பு மண்' (Red Earth Kingdom) என்று பொருள்.[7][8] 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா சுல்தானக அரசாலும் ஆளப்பட்டது.
பாயா பெசார் மக்களவைத் தொகுதி
[தொகு]பாயா பெசார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1994-ஆம் ஆண்டில் பாயா பெசார் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது மக்களவை | P079 | 1995–1999 | சித்தி சகாரா சுலைமான் (Siti Zaharah Sulaiman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P084 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | அப்துல் மனான் இசுமாயில் (Abdul Manan Ismail) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
2018 | காலி | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | முகமது சகார் அப்துல்லா (Mohd Shahar Abdullah) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பாயா பெசார் தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமது சகார் அப்துல்லா (Mohd Shahar Abdullah) | பாரிசான் நேசனல் | 26,899 | 43.40 | 0.24 | |
அயிரோசரி ரோசுலான் (Aireroshairi Roslan) | பெரிக்காத்தான் நேசனல் | 25,582 | 41.27 | 41.27 | |
அகமது அசாம் முகமது சாலே (Ahmad Azam Mohd Salleh) | பாக்காத்தான் அரப்பான் | 9,192 | 14.83 | 11.87 ▼ | |
ரோசுமினாகர் முகமது அமீன் (Rosminahar Mohd Amin) | தாயக இயக்கம் | 310 | 0.50 | 0.50 | |
மொத்தம் | 61,983 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 61,983 | 98.75 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 785 | 1.25 | |||
மொத்த வாக்குகள் | 79,744 | – | |||
பதிவான வாக்குகள் | 62,768 | 2.80 ▼ | |||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-0279-1.
- ↑ Geoff Wade (2007). Southeast Asia-China interactions: reprint of articles from the Journal of the Malaysian Branch, Royal Asiatic Society. Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-9948-38-2.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.