உள்ளடக்கத்துக்குச் செல்

ரேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தன்னார்வ படைத் துறை
Malaysia Volunteers Corps Department
Jabatan Sukarelawan Malaysia

ரேலா / RELA

புத்ராஜெயாவில் ரேலா தலைமையகம்
குடிப்படை மேலோட்டம்
அமைப்புமார்ச்சு 25, 1948; 76 ஆண்டுகள் முன்னர் (1948-03-25)
முன்னிருந்த அமைப்புகள்
  • உள்ளூர் காவலர் குழு
    (Pasukan Kawalan Tempatan)
  • மலேசிய மக்கள் தொண்டர் சங்கம்
    (Ikatan Relawan Rakyat Malaysia)
  • மலேசிய தன்னார்வப் படை
    (Pasukan Sukarelawan Malaysia)
கலைப்பு1 சூலை1959 (மீண்டும் 1969)
வகைஅரசு
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்மத்திய அரசு நிர்வாக மையம் 62546
புத்ராஜெயா  மலேசியா
குறிக்கோள்உண்மையாக சேவை செய்தல்
(To serve faithfully)
(Setia Berbakti)
பணியாட்கள்3,060,807 (2024)[1]
அமைச்சர்
குடிப்படை தலைமைகள்
  • யகாயா சுலைமான், ரேலா தலைமை ஆணையர்
வலைத்தளம்www.rela.gov.my
புத்ராஜெயாவில் ஒரு ரேலா படைவீரர்.

மலேசிய தன்னார்வ படைத் துறை அல்லது ரேலா; (மலாய்: Jabatan Sukarelawan Malaysia (RELA); ஆங்கிலம்: Malaysia Volunteers Corps Department) என்பது மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் உள்ள மலேசிய துணை இராணுவப் படைத்துறை ஆகும்.[2]

இந்தப் படைத்துறை, மலேசிய நாட்டிற்குள் வரும் எதிரிகளைக் எதிர்கொள்ளும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் தன்னார்வலர் பாதுகாப்புப் படையைக் கொண்ட ஓர் அமைப்பு.

வரலாறு

[தொகு]

சூலை 3, 1972-இல், அவசரகால சட்டம் 1964 (Emergency Act 1964); தேவையான ஒழுங்குமுறைகள் சட்டம் 1966 (Necessary Powers Act 1966) ஆகிய சட்டங்களின் கீழ்; மலேசிய தன்னார்வ படைத் துறை (Association of People's Volunteers) நிறுவப்பட்டது. மலேசிய தன்னார்வ படைத் துறையின் அடித்தளம் 1948-ஆம் ஆண்டு கிராமக் கட்டுப்பாட்டு அமைப்பு (Village Control Organization or Home Guard) அல்லது வீட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு முந்தையது.

மலாயா கூட்டமைப்பு அமைவிற்குப் பின்னர் மலாயா அவசரகால நிலை ஏற்பட்டது. அப்போது ஊர்க்காவல் படை (Home Guard) உருவாக்கப்பட்டது. மலேசிய தன்னார்வ படைத் துறை; மலாயா ஊர்க்காவல் படை விதிமுறைகள் 1950 மற்றும் 1951-இன் (Home Guard Regulations 1950 & 1951) அதிகார வரம்பிற்கு உட்பட்டது.

மலாயா அவசரகால நிலை

[தொகு]

இதற்கிடையில், மலாயா அவசரகால நிலையின் தொடக்கத்தில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்குதல்கள் அதிகமாக பரவியதால், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஊர்க்காவல் படையில் சேரந்தனர். மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்கள் குறைந்ததைத் தொடர்ந்து 1 சூலை 1959 அன்று ஊர்க்காவல் படை கலைக்கப்பட்டது.

1964 செப்டம்பரில் இந்தோனேசியா-மலேசியா மோதல் ஏற்பட்டபோது, ​​அரசாங்கம் ஓர் அமைதிக் காப்பு படையை (Vigilante Corps) நிறுவியது. அதன் பின்னர் நாட்டில் அமைதி நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 25 பிப்ரவரி 1967 அன்று, அமைதிக் காப்பு படையை கலைக்க மலேசிய அமைச்சரவை முடிவு செய்தது.

மேலும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.rela.gov.my/?page_id=1824
  2. "My RELA". My Rela. 2017-11-13. Archived from the original on 2018-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-11-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேலா&oldid=4107651" இலிருந்து மீள்விக்கப்பட்டது