மலேசிய குடிமை தற்காப்பு துறை
Appearance
Angkatan Pertahanan Awam Malaysia MCDF APM | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1939 |
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | Angkatan Pertahanan Awam Malaysia Jalan Maktab Perguruan Islam, Sungai Merab, 43000 Kajang, சிலாங்கூர் |
குறிக்கோள் | Readiness, Speed, Integrity |
மூல நிறுவனம் | மலேசியப் பிரதமர் துறை |
வலைத்தளம் |
மலேசிய குடிமை தற்காப்பு துறை (மலாய்: Angkatan Pertahanan Awam Malaysia (JPJ); ஆங்கிலம்: Malaysia Civil Defence Force); என்பது மலேசியப் பிரதமர் துறையின் (Malaysian Prime Minister's Department) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[1]
முன்பு குடிமை தற்காப்பு துறை (Jabatan Pertahanan Awam 3) (JPA3) அல்லது மீட்பு 991 (Rescue 991) என அறியப்பட்டது. பின்னர் 31 ஆகத்து 2016 வரையில், மலேசிய தற்காப்பு துறை (Jabatan Pertahanan Awam Malaysia) (JPAM) என்றும்; மேலும் அண்மையில் மலேசிய குடிமை தற்காப்பு துறை (Angkatan Pertahanan Malaysia) (APM) என்றும் அறியப்படுகிறது.
வரலாறு
[தொகு]மலேசிய விடுதலைக்கு முன்
[தொகு]- 1939 - மலேசியாவில் குடிமைத் தற்காப்பு நடவடிக்கைகள் பிரித்தானிய அரசால் தொடங்கப் பட்டன. அதன் பின்னர், இந்தத் துறைக்கு, பாதுகாப்பு அவசர ஒழுங்குமுறைச் சட்டம் அத்தியாயம் 4-இன் கீழ் (Passive Defence Emergency Regulation Enactment under Chapter 4); இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.[2]
- 1951 - குடிமை தற்காப்பு சட்டம் 1951 (The Civil Defence Ordinance 1951) ஒரு சட்டமாக இயற்றப்பட்டது. மலாயா அவசரகால நிலையின் (Malayan Emergency) அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் குடிமை பாதுகாப்பு ஒரு தேசியப் பாதுகாப்பு துறையாக மாற்றப்பட்டது.[3]
- 1952 - குடிமை பாதுகாப்பு துறை (Civil Defence Department) மார்ச் 24 அன்று நிறுவப்பட்டது.[3]
மலேசிய விடுதலைக்கு பின்
[தொகு]- 1957 - குடிமை தற்காப்பு சட்டம் 1951 (The Civil Defence Ordinance 1951) மலாயாவின் சுதந்திரத்திற்குப் பிறகு குடிமை பாதுகாப்புச் சட்டம் 1951 (சட்டம் 221) (Civil Defence Act 1951 Act 221) என மாற்றப்பட்டது
- 1958 - மலேசிய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் படி (Ninth Schedule Federal Constitution); தேசிய பாதுகாப்பு அமைப்பில் குடிமை பாதுகாப்புத் துறை ஒரு நிரந்தரமான துறையாக மாறியது.
- 1964 - இந்தோனேசியா - மலேசியா மோதலை (அமைச்சரவை அறிக்கை எண். 302/314/64 - Cabinet Paper No. 302/314/64) தொடர்ந்து சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் வரை குடிமைத் தற்காப்பு விரிவுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் சிங்கப்பூர் தன் சொந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையை (SCDF) உருவாக்கிக் கொண்டது.
- 1965 - உறுப்பினர் எண்ணிக்கை 37 கிளைகளுடன் 36,000 உறுப்பினர்களாக அதிகரித்தது. அந்த நேரத்தில் புதிய தளவாடப் பொருள்களுடன்; அமைதி மற்றும் போர் ஆகிய இரண்டிலும் நாடு தழுவிய அளவில் குடிமை பாதுகாப்புத் துறை பயன்படுத்தப்பட்டது.
- 1970 - கோலாலம்பூர் வெள்ளத்தால் (1971 Kuala Lumpur floods); 1952-ஆம் ஆண்டு தேசிய சேவைச் சட்ட விதிகளின்படி (National Service Act 1952); குடிமை பாதுகாப்புத் துறையின் பணியாளர்கள் நாடு முழுவதும் பணியில் அமர்த்தப் பட்டனர்.
- 1972 - 1951-ஆம் ஆண்டு குடிமை தற்காப்புச் சட்டம் (Civil Defence Act 1951); போர்க் காலத்தில் பேரிடர் நிவாரணச் சேவைகளைச் செய்வதற்கு (Wartime Duties) அந்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
- 1993 - உலு கிள்ளான் (Hulu Kelang) பகுதியில் இருந்த அய்லேண்டு கோபுரம் சரிந்து விழுந்தது (Highland Towers collapse). இந்த நிகழ்வில் மலேசிய குடிமை தற்காப்பு துறை போற்றுதலுக்குரிய சேவைகளைச் செய்தது; பலராலும் அறியப்பட்டது. இதன் பின்னர் அந்தத் துறை நவீன மயமாக்கலையும் தொடங்கியது.
அமைப்பு
[தொகு]- 890,000 தன்னார்வலர்கள் (Volunteers)
- 1,520,000 தயார் நிலையாளர்கள் (Reservists)
- 142,000 மாணவர் படையினர் (Cadets)
- 19 மாநிலத் தளங்கள் (State Commands)
- 55 செயல் பிரிவுகள் (Active Units)
- 99 மாவட்டப் படைகள் (District Commands)
- 55 குடிமை பாதுகாப்பு பிரிவுகள் (Civil Defense Units)
- மலேசிய குடிமை தற்காப்பு கல்விக் கழகம் (Civil Defence Academy)
- 3 குடிமை பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயிற்சிப் பள்ளிகள் (Civil Defence Officer Cadet Schools)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Malaysia Civil Defence Force (Malay: Angkatan Pertahanan Awam Malaysia) or popularly known as APM or MCDF (formerly JPAM and JPA3) is the civil defence services agency in Malaysia". Apollo.io. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-22. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
- ↑ 3.0 3.1 "The Malaysian National Defense Force (JPAM) is currently amending the Civil Defense Act 1951 or Act 221 to be improved in line with the current situation and development". APM: Malaysia Civil Defence Department. 17 June 2015. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
மேலும் காண்க
[தொகு]- 1971 கோலாலம்பூர் வெள்ளம்
- இந்தோனேசியா - மலேசியா மோதல்
- மலேசிய அரசியலமைப்பு
- சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை