உள்ளடக்கத்துக்குச் செல்

ரெம்பாவ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெம்பாவ் (P131)
மலேசிய மக்களவைத் தொகுதி
நெகிரி செம்பிலான்
Rembau (P131)
Federal Constituency in Negeri Sembilan
ரெம்பாவ் மக்களவைத் தொகுதி
(P131 Rembau)
மாவட்டம்ரெம்பாவ் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை133,515 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிரெம்பாவ் தொகுதி
முக்கிய நகரங்கள்ரெம்பாவ், செம்போங், கோத்தா
பரப்பளவு635 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமட் அசன்
(Mohamad Hasan)
மக்கள் தொகை210,209[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

ரெம்பாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rembau; ஆங்கிலம்: Rembau Federal Constituency; சீனம்: 林茂国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P131) ஆகும்.[5]

ரெம்பாவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து ரெம்பாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

ரெம்பாவ் மாவட்டம்

[தொகு]

ரெம்பாவ் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். ரெம்பாவ் மாவட்டத்தின் முக்கிய நகரம் ரெம்பாவ் நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 95 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும் ரெம்பாவ் நகரம் அமைந்து உள்ளது.

ரெம்பாவ் ஆளுநர் இன்று வரையிலும் பழைய மினாங்கபாவு முறையில் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப் படுகிறார். ரெம்பாவ் மாவட்டத் தலைவர் பெங்குலு என்று முன்பு அழைக்கப் பட்டார். தற்போது யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் (Yang Teramat Mulia Undang Luak Rembau) என்று அழைக்கப் படுகிறார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மன்னர் யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar of Negeri Sembilan). நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் என்பவரும் ஒருவராவார்.

ரெம்பாவ் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் ரெம்பாவ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (73.6%)
  சீனர் (8.8%)
  இதர இனத்தவர் (1.7%)
ரெம்பாவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
2003-ஆம் ஆண்டில் ரெம்பாவ் தொகுதி உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P131 2004–2008 பிர்தாவுஸ் முகமட் ரோம் அருண்
(Firdaus Muhammad Rom Harun)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 கைரி ஜமாலுதீன்
(Khairy Jamaluddin)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் முகமட் அசன்
(Mohamad Hasan)

ரெம்பாவ் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
முகமட் அசன்
(Mohamad Hasan)
பாரிசான் நேசனல்53,07548.500.37
சுபித்திரி ஜோகா
(Jufitri Joha)
பாக்காத்தான் அரப்பான்33,17830.3212.05
முகமட் நசுரி முகமட் யூனுஸ்
(Mohd Nazree Mohd Yunus)
பெரிக்காத்தான் நேசனல்21,87519.9919.99 Increase
தினகரன் சுப்ரமணியம்
(Tinagaram Subramaniam)
மலேசிய சமூகக் கட்சி7790.710.71 Increase
ரம்லி அவலுதீன்
(Ramly Awalludin)
தாயக இயக்கம்5290.480.48 Increase
மொத்தம்1,09,436100.00
செல்லுபடியான வாக்குகள்1,09,43698.96
செல்லாத/வெற்று வாக்குகள்1,1501.04
மொத்த வாக்குகள்1,10,586100.00
பதிவான வாக்குகள்1,33,55581.943.29
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]