உள்ளடக்கத்துக்குச் செல்

போர்டிக்சன் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்டிக்சன் (P132)
மலேசிய மக்களவைத் தொகுதி
நெகிரி செம்பிலான்
Port Dickson (P132)
Federal Constituency in Negeri Sembilan
போர்டிக்சன் மக்களவைத் தொகுதி
(P132 Port Dickson)
மாவட்டம்போர்டிக்சன் மாவட்டம்
அலோர் காஜா மாவட்டம் (தஞ்சோங் துவான்)
வாக்காளர்களின் எண்ணிக்கை109,818 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிபோர்டிக்சன் தொகுதி
முக்கிய நகரங்கள்போர்டிக்சன், லுக்குட், சிலியாவ், ரந்தாவ்
பரப்பளவு571 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
நீக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்அமினுடின் அருண்
(Aminuddin Harun)
மக்கள் தொகை128,954[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

போர்டிக்சன் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Port Dickson; ஆங்கிலம்: Port Dickson Federal Constituency; சீனம்: 波德申国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் மாவட்டம்; மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டம் (தஞ்சோங் துவான்) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P132) ஆகும்.[5]

போர்டிக்சன் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 1974-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து போர்டிக்சன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பொது

[தொகு]

போர்டிக்சன் மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் மாவட்டம்; மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டம் (தஞ்சோங் துவான்) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். மலேசியாவின் இரண்டு மாநிலங்களில் ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள ஒரே தொகுதி இதுவே ஆகும்.

போர்டிக்சன் நகரம் மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாகும். கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது.

கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகள் மூலமாக எளிதில் அடையக் கூடிய இடத்தில் அமைந்து உள்ளது. 10 மைல் நீளத்திற்கு அமைதியான கடற்கரைகள் நீண்டுள்ளன. நெகிரி செம்பிலானில் ஒரே கடற்கரை மாவட்டம் ஆகும்.

போர்டிக்சன் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் போர்டிக்சன் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (44.2%)
  சீனர் (31.4%)
  இதர இனத்தவர் (3.3%)
போர்டிக்சன் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் ரெம்பாவ் - தம்பின் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P082 1959–1963 மகிமா சிங்
(Mahima Singh)
மலேசிய கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
மலேசிய மக்களவை
1-ஆவது மலேசிய மக்களவை P082 1963–1964 மகிமா சிங்
(Mahima Singh)
மலேசிய கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8]
3-ஆவது மக்களவை P082 1971–1974 சூரியன் அர்ஜுனன்
(Soorian Arjunan)
ஜனநாயக செயல் கட்சி
தெலுக் கெமாங் தொகுதி உருவாக்கப்பட்டது
போர்டிக்சன் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
14-ஆவது மக்களவை P132 2018 டேனியல் பாலகோபால் அப்துல்லா
(Danyal Balagopal Abdullah)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
2018–2022 அன்வார் இப்ராகிம்
(Anwar Ibrahim)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் அமினுடின் அருண்
(Aminuddin Harun)

போர்டிக்சன் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அமினுடின் அருண்
(Aminuddin Harun)
பாக்காத்தான் அரப்பான்42,01352.4018.92
பா. கமலநாதன்
(P. Kamalanathan)
பாரிசான் நேசனல்18,41222.967.23
ரபி முசுதபா
(Rafei Mustapha)
பெரிக்காத்தான் நேசனல்18,23522.7422.74
அகமட் இடாம் அகமட் நசுரி
(Ahmad Idham Ahmad Nazri)
தாயக இயக்கம்1,0841.351.35
அப்துல் ராணி குலுப் அப்துல்லா
(Abdul Rani Kulup Abdullah)
சுயேச்சை4410.550.55
மொத்தம்80,185100.00
செல்லுபடியான வாக்குகள்80,18598.46
செல்லாத/வெற்று வாக்குகள்1,2511.54
மொத்த வாக்குகள்81,436100.00
பதிவான வாக்குகள்/வருகை1,04,45078.0019.40
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-20.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]