போதேந்திர சரஸ்வதியின் சமாதி
காஞ்சி மடத்தின் 59வது சங்கராச்சாரியார் போதேந்திர சரசுவதியின் சமாதி, இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் நகரில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான இந்து சமய புனித யாத்திரை தலமாகும்.
வரலாறு
[தொகு]17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சி மடத்தின் மடாதிபதியான போதேந்திர சரசுவதி, காவிரி படுகையில் அலைந்து திரிந்த போது கோவிந்தபுரத்தை அடைந்தார். அவர் அந்த இடத்தின் அழகால் கவரப்பட்டு, அந்த இடத்திலேயே (சமாதி அல்லது) முக்தி அடைய முடிவு செய்தார். [1]
1692 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் (செப்டம்பர்-அக்டோபர்) ஒரு நாள் காலை, போதேந்திர சரஸ்வதி யோக நிலையில் அமர்ந்து ஜீவ சமாதி அடைந்தார். [1] அவர் பிரஜோத்பத்தி (கி.பி. 1692) சுழற்சி வருடத்தின் ப்ரோஷ்டபாத மாதம் பௌர்ணமி நாளில் கோவிந்தபுரத்தில் விதேஹ முக்தி அடைந்தார்.
போதேந்திர சரசுவதி சுவாமிகள்
[தொகு]ஸ்ரீ போதேந்திராள் என்ற ஸ்ரீ பகவான்நாம போதேந்திர சரசுவதி சுவாமிகள் காஞ்சியில் உள்ள மாண்டன மிஸ்ர அக்ரகாரத்தில் கேசவ பாண்டுரங்கரின் மகனாகப் பிறந்தார். ஸ்ரீ போதேந்திராவின் முந்தைய பெயர் புருஷோத்தமன்.
இந்த கலியுகத்தில் பக்தியின் பலனை முக்திக்கான வழிமுறையாக வலியுறுத்தியவர் ஸ்ரீ போதேந்திராள். எனவே ஸ்ரீ போதேந்திராள் நாம சித்தாந்தத்தை மேற்கொண்டார்.
திருவிசைநல்லூரைச் சேர்ந்த ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் மற்றும் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் ஆகியோரால் ஸ்ரீ போதேந்திராளின் நாம சித்தாந்தப் பணி சமமான வீரியத்துடன் பின்பற்றப்பட்டது. தென்னிந்தியாவில் இந்து சமூகத்தின் சமய வாழ்வில் பஜனை சம்பிரதாயத்தின் ஒரு நிறுவனமாக பரிணாம வளர்ச்சிக்கு ஸ்ரீ போதேந்திராளின் நாம சித்தாந்தம்தான் காரணம்.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், போதேந்திராவின் சீடர்களால், ஒரு சமாதி கட்டப்பட்டது. அவரது சமாதியில் ஆண்டுதோறும் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.