உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா

ஆள்கூறுகள்: 2°57′48.95″N 101°41′40.82″E / 2.9635972°N 101.6946722°E / 2.9635972; 101.6946722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா
Putrajaya Wetlands Park
Taman Wetlands Putrajaya
Map
அமைவிடம் புத்ராஜெயா  மலேசியா
ஆள்கூறு2°57′48.95″N 101°41′40.82″E / 2.9635972°N 101.6946722°E / 2.9635972; 101.6946722
பரப்பளவு138 எக்டர்
உருவாக்கம்1998–2002
உரிமையாளர்புத்ராஜெயா நகராட்சி
இயக்குபவர்Kompleks Perbadanan Putrajaya 24, Persiaran Perdana, Presint 3, 62675 Putrajaya
புத்ராஜெயா நகராட்சி
வாகன நிறுத்தம்வாகன நிறுத்துமிடம் உள்ளது

புத்ராஜெயா ஈரநிலப் பூங்கா (ஆங்கிலம்: Putrajaya Wetlands Park; மலாய் மொழி: Taman Wetlands Putrajaya; சீனம்: 布城湿地公园) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள செயற்கைப் பூங்காவாகும். வெப்ப மண்டலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய நன்னீர் ஈரநிலப் பூங்கா என அறியப்படுகிறது.[1][2]

மலேசியாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் ஈரநிலம் இதுவாகும். புத்ராஜெயாவின் ஈரநில சூழலுக்கான நுழைவாயிலாக இந்தப் பூங்கா செயல்படுகிறது.[3]

பொது

[தொகு]

புத்ராஜெயா ஏரி மற்றும் புத்ராஜெயா ஈரநிலப் பூங்காவின் கட்டுமானம் 1998-இல் தொடங்கப்பட்டு 2002-இல் நிறைவடைந்தது. புத்ராஜெயா ஈரநில மீன் வளர்ப்புக் குளங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட சதுப்பு நில தாவரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

மேலும், உயிரியல் அடிப்படையில் மாறுபட்டச் சூழலை உருவாக்க ஈரநிலச் செல்களுக்கு 24 வகையான உள்நாட்டு மீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[4]

புலம்பெயரும் பறவைகள்

[தொகு]

ஈரநிலப் பூங்கா ஒரு வனவிலங்கு காப்பகமாகவும் செயல்படுகிறது; மற்றும் பறவைகள் கண்காணிப்புத் தளமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 100 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

அவற்றில் பல வகையான உள்ளூர் சதுப்பு நிலப் பறவைகளுக்கும் இந்தப் பூங்கா காப்பமாமாகத் திகழ்கிறது. சின்னக் கொக்குகள், சிறிய பச்சை நாரைகள் மற்றும் செங்குருகுகள் உட்பட நீர்ப் பறவைகள் மற்றும் வட அரைக்கோளத்தில் இருந்து புலம்பெயர்ந்த பறவைகள் அங்கு காணப்படுகின்றன.

பறவை நோக்குதலில் ஆர்வம் உடையவர்களுக்கு இந்தப் பூங்கா ஒரு சொர்க்கபுரி என்றும் சொல்லப்படுகிறது.[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wetland Park is the largest man-made freshwater wetland in Malaysia and Tropics". www.ppj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  2. Environmental Bioengineering: Volume 11. Humana Press. 25 June 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781603270311. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  3. "Putrajaya Lake and Wetland". Smart Putrajaya. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  4. "Putrajaya Wetlands Park serves as the gateway to Putrajaya's wetland environment". www.malaysia.travel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  5. Activities, Filed under (19 October 2020). "Taman Wetland Putrajaya is a premier eco-tourism park and an oasis of tranquility filled with wondrous flora, fauna and natural wildlife". Visit Selangor. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]