உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ரா பாலம்

ஆள்கூறுகள்: 2°55′57″N 101°41′25″E / 2.932583°N 101.690242°E / 2.932583; 101.690242
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ரா பாலம்
Jambatan Putra
Putra Bridge
Putra Bridge
புத்ரா பாலம்
போக்குவரத்து மோட்டார் வாகனங்கள், மிதிவண்டிகள்; பாதசாரிகள்
தாண்டுவது புத்ராஜெயா ஏரி
இடம் புத்ராஜெயா பெர்தானா சுற்று, புத்ராஜெயா
பராமரிப்பு புத்ராஜெயா நகராட்சி
வடிவமைப்பாளர் புத்ராஜெயா நகராட்சி
வடிவமைப்பு வில்வளைவு
மொத்த நீளம் 435 மீ
அதிகூடிய அகல்வு 435 மீ
கட்டியவர் புத்ராஜெயா நகராட்சி
திறப்பு நாள் 1999
அமைவு 2°55′57″N 101°41′25″E / 2.932583°N 101.690242°E / 2.932583; 101.690242

புத்ரா பாலம் (ஆங்கிலம்: Putra Bridge; மலாய் மொழி: Jambatan Putra; சீனம்: 布特拉桥) என்பது மலேசியா, புத்ராஜெயாவில் உள்ள முக்கியமான பாலம் ஆகும். 435 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலம் ஈரான், இசுபகான் மாநகரில் உள்ள காஜு பாலத்தைப் போன்று வடிவம் கொண்டது. புத்ராஜெயாவில் சில பெரிய பாலங்கள் உள்ளன. அவற்றில் இந்தப் பாலமும் ஒன்றாகும். அந்தப் பாலங்களைப் புகைப்படம் எடுக்க வெகு தொலவில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.[1]

இந்தப் பாலம் மத்திய அரசு நிர்வாக வளாகத்தை (Government Precinct) கலப்பு வளர்ச்சி வளாகத்துடன் (Mixed Development Precinct) இணைக்கிறது. மற்றும் புத்ரா சதுக்கத்தின்; மரங்கள் நிறைந்த அகன்ற பாதைப் பகுதியுடன் (Boulevard) இணைக்கிறது. இது 1997-இல் கட்டப்பட்டது.[2]

பொது

[தொகு]

இது இரண்டு அடுக்கு பாலமாகும். பாலத்தின் மேல் அடுக்கில் சாலைகள் உள்ளன; கீழ் அடுக்கில் திட்டமிட்ட ஒற்றைத் தண்டவாளப் பாதை அமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[3]

பாலத்தின் மேல் நிலைப் பகுதி, மரங்கள் நிறைந்த அகன்ற பாதைப் பகுதியாக அமைக்கப்பட்டு உள்ளது. பெரிய மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்தப் பாலம்; மோட்டார் வாகனங்கள், ஒற்றைத் தண்டவாளப் பாதை மற்றும் பயணிகள் நடைபாதைகளையும் வழங்குகிறது. புத்ரா பாலம் புத்ராஜெயாவில் உள்ள பாலங்களில் மிக நீளமானது.[4]

புத்ராஜெயாவின் சிறப்புக் கூறாக விளங்கும் இந்தப் பால்ம், புத்ரா பெரும் தீவில் (Core Island) உள்ள வளாகம் 1 (Precinct 1) மற்றும் வளாகம் 2 (Precinct 2) ஆகியவற்றுக்கு இணைப்பை வழங்குகிறது. அதன் முக்கியப் பாலந்தாங்கு தூண்களில் மலேசிய உணவுகளை வழங்கும் உணவகங்களும் உள்ளன.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BridgThere are some great bridges in Putrajaya and people come from miles around to photograph them". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  2. "Putra Bridge is the main bridge in Putrajaya Spanning 435 metres, it connects Precinct 1 (Government Precinct) and Precinct 2 (Mixed Development Precinct). Its design is inspired by Iran's historical Khaju Bridge". www.ppj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  3. "Putra Bridge - This two tiered bridge has been built in such a way that the upper deck forms the roadway and the lower deck forms a path for the monorail system". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  4. "Putra Bridge is the longest and the most important bridge in Putrajaya; said to be inspired by the Khaju Bridge in Isfahan, in Iran, has intricate geometric designs spread over the columns covering large wall areas which are typical of Safavid design style". abckualalumpur.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ரா_பாலம்&oldid=4097649" இலிருந்து மீள்விக்கப்பட்டது