செரி பெர்தானா
Appearance
செரி பெர்தானா Seri Perdana | |
---|---|
செரி பெர்தானா நுழைவாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
நகரம் | புத்ராஜெயா |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 2°57′6.1″N 101°41′23.1″E / 2.951694°N 101.689750°E |
தற்போதைய குடியிருப்பாளர் | அன்வர் இப்ராகிம், மலேசியப் பிரதமர் |
கட்டுமான ஆரம்பம் | 1997 |
நிறைவுற்றது | 1999 |
செலவு | RM 24.17 மில்லியன் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அளவு | 42.5 ஏக்கர்கள் (17.2 ha) |
வலைதளம் | |
www |
செரி பெர்தானா (மலாய்; ஆங்கிலம்: Seri Perdana) என்பது புத்ராஜெயாகூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள மலேசியப் பிரதமரின் அரசு மாளிகையாகும். செரி பெர்தானா மாளிகை, புத்ராஜெயா ஏரிக்கரையில் அமைந்துள்ளது.[1]
இந்த மாளிகை, தற்போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களின் அரசு இல்லமாக விளங்குகிறது.
வரலாறு
[தொகு]இந்த மாளிகையின் கட்டுமானம் 1997-இல் தொடங்கி 1999-இல் நிறைவடைந்தது. இந்த மாளிகை பெர்தானா புத்ராவின் கட்டிடக் கலையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த மாளிகையில் முதலில் வசித்தவர் மகாதீர் முகமது. அதைத் தொடர்ந்து அப்துல்லா அகமத் படாவி, நஜீப் ரசாக் வசித்தனர்.[2]
நஜீப் ரசாக்கிற்கு அடுத்து மகாதீர் முகமது இரண்டு முறை வசித்துள்ளார். அவருக்கு அடுத்து முகிதீன் யாசின், இசுமாயில் சப்ரி யாகோப் ஆகியோர் வசித்தனர். தற்போது, அன்வார் இப்ராகிம் அவர்களின் அரசு இல்லமாக உள்ளது.
கட்டிடப் பகுதிகள்
[தொகு]- சிறப்பு விருந்தினர் மண்டபம்
- கூட்ட மன்றம்
- தொழுகைக் கூடம்
- விருந்து மண்டபம்
- பிரதமரின் பிரதான வசிப்பிடம்
- நிர்வாக அலுவலகம்
- பணியாளர்களின் குடியிருப்புகள்
- தெற்கு தோட்டம்
- வடக்கு தோட்டம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Seri Perdana Complex is the official residence of the Prime Minister of Malaysia". Pejabat Perdana Menteri, Blok Utama, Bangunan Perdana Putra, Pusat Pentadbiran Kerajaan Persekutuan, 62502 Putrajaya, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.
- ↑ "Kompleks Seri Perdana - Perbadanan Putrajaya". www.ppj.gov.my. பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.