ஐயா,
தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. நான் இவ்வருடம் ஜூலை 1 முதல் இயந்திரப் பொறியியல் குறித்த கட்டுரைகளை எழுத முடிவு செய்துள்ளேன் (இடைப்பட்ட காலகட்டத்தில், பட்டியல் தயார் செய்து வைக்கிறேன்). அச்சமயம் உங்களின் உதவியை நாடுகிறேன். இலக்கு: 100 கட்டுரைகள். --பயனர்:செல்வசிவகுருநாதன் எம்உரையாடுக
ஓ! தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார்! உங்கள் மறுமொழி உவகை ஊட்டுகின்றது. நீர்நிலைகள், விலங்குகள், என்று நீங்கள் பங்களித்தக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவு வரும்! :) --செல்வா15:51, 30 சனவரி 2012 (UTC)[பதிலளி]
இந்தியாவில், நானறிந்தவரை, மாணவர்களிடம் ஒப்பிக்கும் "பண்பாடும்", அல்லது நினைவில் இருந்து படித்தவாறே எழுதத்தெரியவேண்டிய திறமுமே பெரிதும் ஊக்குவிக்கப் படுகின்றது, மலிந்தும் இருக்கின்றது (சில விதிவிலக்குகள் இருக்கலாம்). தானாக சிந்திக்கும் திறனும், தானாகக் கருத்துகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தறிந்து, கூர்மையாகத் துருவி அறியும் திறனும், கையால் செய்துபார்த்து அறியும்திறனும், வினையாண்மையும் போதுமான அளவு மாணவர்களிடையே ஊக்குவித்து வளரச் செய்யவில்லை. ஆங்கிலவழிக் கல்வி மிகப்பெரும்பாலாருக்கு பெரும் தடையாக இருக்கின்றது (ஏன், என்ன, எதற்காக, எப்படி, இப்படியா, அப்படியா என்று இயல்பாய்த் தன் மொழியில் சரளமாக சிந்தித்து அறிய இயலாமல் இருக்கின்றது. ஒரு 2-5% மாணவர்களுக்கு இது அவ்வளவு பெரிய இடையூறாக இல்லாமல் இருக்கலாம் (குடும்பச்சூழலால்). மேலோட்டமான கல்வி எது, உயிர்ப்புடன் உள்ளியங்கு-ஆழ்கல்வி (passive and active learning and education) எது என்பன பற்றி நாம் பெரிதும் கவலைப் படுவதில்லை. நமக்காக, நம் உயர்வுக்காக நம் முறைகள் இருக்கின்றன என்று உணர்ந்து, வேண்டியவாறு அறிவான, அறமான முறையிலே மாற்றியோ திருத்தியோ அமைத்துக்கொள்ளலாம் என்னும் விழிப்புணர்வு பெற்றவர்களாக இல்லை. பல வகைகளிலும் தாழ்வுமனப்பான்மை ஊட்டப்பட்டும், மேற்கை அல்லது "வெளிநாடுகளை" மேலோட்டமாக பின்பற்றுவதுமே ("aping te west" என்று சிலர் சொல்வர்) பெரிதென்றே "பண்பாடும்" வளர்க்கப்படுகின்றது. ஐன்சுட்டீனோடு தொடர்பில் இருந்த பெரும்புகழ் பெற்ற சத்யேந்திரநாத் போசு, சர் சி.வி. இராமனோடு அரும் அறிவியல் ஆக்கம் செய்த கே.எசு. கிருட்டிணன் போன்றவர்கள் தாய்மொழிக்கல்வியை பெரிதும் போற்றினர். (இவை எல்லாம் என் தனிப்பட்டக் கருத்துகள்தாம், ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தரமான அறிவுக் கட்டுரைகள் எழுதி உதவலாம்)--செல்வா00:22, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஐயா, பயனர்வெளி குறித்து எனக்கு தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி. பொறுமையாய் சொல்லித்தரும் உங்களைப் போன்றவர்கள், விக்கிக்குப் பலம்! விக்கிப்பீடியாவில் ஏராளமான உபகரணக்கருவிகள் இருப்பது கண்டு பெரிதும் மகிழ்கிறேன். இதுவே நமது பலம்! மென்பொருள் ரீதியாக பங்களிக்கும் வித்தகர்களுக்கும் என் தலைதாழ் வணக்கங்கள்!--பயனர்:செல்வசிவகுருநாதன் எம்உரையாடுக
செல்வா, சில கட்டுரைகளில் தரக் கண்காணிப்பு குறித்து வார்ப்புரு இட்டு வருகிறீர்கள். என்ன அடிப்படையில் இத்தகைய கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள், எப்படி இவற்றின் தரத்தைக் கண்காணிப்பது என்பது குறித்து விளக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி 10:37, 4 பெப்ரவரி 2012 (UTC)
இரவி, நாம் "50,000" கட்டுரைகளை எட்டும் பொழுது, ஆங்கில விக்கியில் இருப்பது போல் ஏறத்தாழ ஆயிரத்துக்கு ஒரு கட்டுரை, சிறப்புக் கட்டுரை என்பது போல் இல்லாவிட்டாலும், குறைந்தது நூற்றில் ஒரு கட்டுரையாவது நான் "மிக நல்ல கட்டுரையாக" நாம் அடையாளப்படுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன். இதே போலவே முன்பும் தொடங்கினோம். அதனை இப்பொழுது சற்று முழுமையாகச் செய்து, குறைந்தது ஒரு 500 கட்டுரைகள் மிக நல்ல கட்டுரைகளாகவும், ஒரு 50-100 கட்டுரைகள் சிறந்த, எழுத்துக்காட்டுக் கட்டுரைகளாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். கட்டுரைகளின் தரத்தை மதிப்பிட்டு, அவற்றில் இருக்கும் குறைகளைத் தீர்க்க முயன்று, "மிக நல்ல" அல்லது "சிறந்த" கட்டுரைகளாகத் தேர்ந்தெடுத்தால், அவை நமக்கு வழிகாட்டியாகவும், நம் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் நல்ல கட்டுரைகள் என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பிறரிடம் சுட்டிக்காட்டவும் முடியும். "சிறப்புக்" கட்டுரைகளாக தேர்வு பெறாவிட்டாலும், நாம் "மிக நல்ல அலல்து நல்ல" கட்டுரைகள் என்னும் தரத்தை 10,000-20,000 கட்டுரைகள் எட்டும் படி உயர்த்த வேண்டும். இவை 1/2 பக்க கட்டுரையாகக்கூட இருக்கலாம். கருத்துப்பிழை இல்லாமல், எழுத்துப்பிழைகள் இல்லாமல், நல்ல தமிழில் எழுதப்பட்டு, எடுப்பான ஓரிரு படங்களுடனாவது, ஓரளவுக்குத் தகவல் முழுமை பெற்றதாக உள்ளதாக கட்டுரைகளாக இருக்க வேண்டும். ஆங்கில விக்கியில் உள்ள சிறப்புக்கட்டுரை அளவீடுகள், பரிந்துரையை நாம் பின்பற்றியோ, நமக்குத்தக்கவாறு மாற்றியோ பயன்படுத்தலாம். --செல்வா 17:56, 4 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா, 50000 கட்டுரைகளை எட்டும் பொழுது தரத்திலும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அளவிட வேண்டும் என்ற தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். இது குறித்த முந்தைய உரையாடலையும் படித்துப் பார்த்தேன். //ஒரு இலட்சம் கட்டுரை எண்ணிக்கை அல்லது ஆண்டு 2010 அல்லது குறைந்தது 100 முனைப்புடைய பங்களிப்பாளர்கள் என்றவற்றில் ஏதேனும் ஒன்றை அடையும் போது தர ஆய்வு வேலைகளை செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து// என்று 2007ஆம் ஆண்டு சொல்லி இருக்கிறேன். 2010 தாண்டி 2012 வந்து விட்டோம் :) பேச்சுப் பக்கங்களில் வார்ப்புருவை மட்டும் இட்டு வருவதால் அடுத்து என்ன செய்வது என்று சற்று குழப்பமாக இருந்தது. மற்ற பல பயனர்களுக்கும் இப்படித் தோன்றி இருக்கலாம். எனவே, அடுத்து வார்ப்புருக்களை இடத் தொடங்கும் முன், இதனை முறையான திட்டமாக முன்வைத்து, முறைமைகளை வகுத்துச் செய்வோம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
500 நல்ல கட்டுரைகள் இலக்கு குறித்து: குறுந்தட்டுத் திட்டத்தில் 200 கட்டுரைகள் உள்ளன. அதில் இடம்பெறாத முதற்பக்கக் கட்டுரைகள் இன்னும் 200+ உள்ளன. இன்னும் எவ்வளவோ கட்டுரைகளை முதற்பக்கத்தில் இடம்பெறக்கூடிய தகுதியுடன் உள்ளன. ஆயினும், இக்கட்டுரைகள் அனைத்துமே இன்னும் பல மேம்பாடுகள் செய்யக்கூடிய நிலையிலேயே உள்ளன. எனவே, நல்ல கட்டுரைகளை இனங்காணும் பணியை முதற்பக்கக் கட்டுரைகளில் இருந்து தொடங்கலாம்.--இரவி 21:28, 4 பெப்ரவரி 2012 (UTC).
இரவி, இனி பேச்சுப் பக்கத்தில் {{தக}} என்னும் வார்ப்புருவை இட வேண்டாம் எனில், இடவில்லை. அப்படி கட்டுரைகளைத் தொகுத்து வந்தால் எவை எவை பின்னர் கணிக்க வேண்டும், எவ்வெவ் கோணங்களில் தரம் அறிய வேண்டும், எவ்வெவ் துறைகளச் சேர்ந்தவை அவை என்று சட்டென்று அப்பகுப்புக்குள் சென்று பார்த்தால் தெரியும், நீங்கள் மேலே குறித்த என்னும் உரையாடலில் அன்று நான் குறிப்பிட்ட அத்தனையும் இன்றும் உண்மை என்றே உணர்கின்றேன். //பேச்சுப் பக்கங்களில் வார்ப்புருவை மட்டும் இட்டு வருவதால் அடுத்து என்ன செய்வது என்று சற்று குழப்பமாக இருந்தது// - நாம் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தக்கூடிய கட்டுரைகள் என்று பரிந்துரைசெய்து வரிசை வைத்திருக்கின்றோம் அல்லவா, அதுபோலவே பின்னரோ, அல்லது எப்பொழுது இயலுமோ அப்பொழுது இக்கட்டுரைகள் தரம் பிரிக்கப்பட வேண்டியவை என்று அறியவும் அறிவிக்கவும் இவற்றை இடுகின்றேன். விக்கிப்பீடியாவில் எப்பொழுது வேண்டுமாலும், ஒரு கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க யாரும் வேண்டலாம். அதே போல ஒரு கட்டுரையை "மிக நல்ல கட்டுரை" (ஆங்கில விக்கியில் Good articles) என்று தேர்வு செய்யவும் யாரும் எப்பொழுதும் வேண்டலாம். ஆங்கில விக்கியில் 13,943 கட்டுரைகள் "Good article" ("GA") தகுதியைப் பெற்றுள்ளன. சிறப்புக் கட்டுரை அல்லது "Featured Article" தகுதியை 3,465 கட்டுரைகள் பெற்றுள்ள. இவை தவிர Vital articles என்றும் பற்பல விதங்களிலே அலசியும் ஆவணப்படுத்தியும் வைத்துள்ளனர். நம்மிடையே போதுமான பேர் இல்லை என்பதை நான் மிக நன்றாகவே அறிவேன், ஆனால் முதல்கட்டமாகத் தரம் அலசப்பட வேண்டிய கட்டுரைகள் என்னென்ன என்று அறிவதற்காகவே அந்த வார்ப்புருவை இட்டுவருகின்றேன். பிறகு அவற்றில் இருந்து சிலவற்றை சிறப்புக் கட்டுரையாகவோ, மிகநல்ல கட்டுரையாகவோ (ஆங்கில விக்கியில் "GA") ஆகவோ முறைப்படி முன்மொழிந்து காலக்கெடு கொடுத்து அலசி தேர்வு செய்யலாம். இவ்வார்ப்புருக்கள் இடுவதால் தீங்கில்லை என்று நினைக்கின்றேன். வேண்டும் எனில் அவ்வார்ப்புருவிலேயே" பின்னர் சிறப்புக்கட்டுரையாகவோ, மிக நல்ல கட்டுரையாகவோ தேர்வு செய்யப் பரிந்துரைக்கூடிய கட்டுரைகளுள் ஒன்று" என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் வார்ப்புரு இட வேண்டாம் எனில் இடவில்லை. இப்பொழுது நாம் முதற்பக்கக் கட்டுரையாக தேர்வு செய்வது என் கணிப்பில் முறைவகுத்துச் செய்வதன்று (தரம் பற்றிய அலசல்களோ, தகுதி பற்றிய அலசல்களோ ஏதும் முறையாகச் செய்யாமல், ஏதோ ஓரளவுக்கு நல்ல கட்டுரையாக நம்மில் பராமரிக்கும் சிலர் தனிப்பட்ட முறையில் தானாகத் நினைத்துத் தேர்ந்து இடுவன. சில ஊக்கத்துக்காகவும், சில தலைப்பின் முக்கியத்துக்காகவும் என்று சில காரணங்களுக்காகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.).
--செல்வா 01:51, 5 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா, வார்ப்புரு இட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவில்லாமல் இருந்தது. அதனால் தான் கேட்டேன். நீங்கள் மேலே விளக்கியவாறு, வார்ப்புருவிலோ திட்டப்பக்கத்திலோ சற்று தெளிவுபடுத்திவிட்டு வார்ப்புருக்கள் இடுவதைத் தொடர்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உண்மையில், எந்தெந்தக் கட்டுரைகளில் இவற்றை இடலாம் என ஏதேனும் வரையறை வகுக்க முடிந்தால், நானும் உதவுகிறேன். நன்றி--இரவி 07:43, 5 பெப்ரவரி 2012 (UTC)
உங்களின் இந்த வாழ்த்தை இப்பொழுது தான் பார்த்தேன். மிக்க நன்றி! பி.கு: பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட்டால் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும், பயனர் பக்கத்தில் இட்டால் இதைப் போல் காணப்படாமலிருக்க வாய்ப்புண்டு. ஸ்ரீகாந்த் 08:44, 6 பெப்ரவரி 2012 (UTC)
நீங்கள் எழுதி வரும் தேற்றங்கள் மிக அருமையாக உள்ளன. Profvk, Boordadleyp, உங்கள் முயற்சியில் தமிழ் விக்கிப்பீடியாவில் உயிரியலுக்கு அடுத்து கணிதக் கட்டுரைகள் சிறப்பாக உருவாகி வருகின்றன. பாராட்டுகள்--இரவி 09:48, 9 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி இரவி! மாணவர்களுக்குப் பயன்படக்கூடும் என்றே குறுங்கட்டுரைகள் சிலவற்றை மொழி பெயர்த்தேன். --செல்வா 13:18, 9 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா, பகுப்புகளை வழிமாற்றம் செய்வதில்லை. பழைய பகுப்பில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் தனித்தனியே புதிய பகுப்புக்கு மாற்றி பழைய பகுப்பை நீக்க வேண்டும். நினைப்பூட்டலுக்காகவே.--Kanags\உரையாடுக 06:40, 17 பெப்ரவரி 2012 (UTC)
இரவி, மின்னாற்றல் என்பதும் மின்சக்தி, மின்சாரம் என்பதும் எல்லாமே ஒன்று தான் (நன்றி-செல்வா). en:Electricity. ஆனால், நேற்றுத் தான் மின்சாரம் பற்றிய கட்டுரை கூட முழுமையாகத் த.வியில் இல்லை என்று கண்டேன். ஆச்சரியமாக இருந்தது. முதலில் அதனை மேம்படுத்த வேண்டும். --இரா. செல்வராசு 00:49, 21 பெப்ரவரி 2012 (UTC)
இரவி, செல்வராசு, மிக்க நன்றி. நான் விரைவில் இக்கட்டுரையை (மின்னாற்றல், நிலைமின்னாற்றல்) பற்றி எழுதுகின்றேன். இதற்குத் தேவையான இழப்புறா விசை ("காப்புவிசை" conservative force) போன்ற பிற துணைக்கட்டுரைகளையும் எழுதவேண்டும். விரைவில் தொடங்குகின்றேன். இப்பொழுதுதான் பிற பல துறைகளிலும் பங்களிக்க நல்ல விக்கிப்பீடியர்கள் உள்ளனரே. --செல்வா 03:17, 21 பெப்ரவரி 2012 (UTC)
த. வி. யில் இன்னும் பல அடிப்படைத் தலைப்புகள் இல்லை. அல்லது குறுங்கட்டுரையாகவே உள்ளன. இவை குறித்த பரிந்துரைகளைத் தந்தால் இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரையாக மேம்படுத்த முயலலாம். பொதுவான தலைப்புகளை விட துறை சார் கட்டுரைகளை மேம்படுத்த பயனர்களிடையே கூடுதல் ஆர்வம் உள்ளதாகத் தோன்றுகிறது.--இரவி 07:17, 21 பெப்ரவரி 2012 (UTC)
ஆங்கில எழுத்துவரிசையில், ஆங்கில எழுத்துகளின் தனிப்பெயர்கள்
ஆங்கில எழுத்துகளை, அவற்றின் "பெயர்" சுட்டி வாயால் சொல்லும்பொழுது ஆங்கிலத்தில் A, Bee, Cee, Dee என்பது போல் ஒலிக்கின்றார்கள் அல்லவா, அதில் அவர்கள் பல்வகைப்பட்ட சிறுகுழு சீர்மைகளே கொண்டிருக்கின்றார்கள். காட்டாக. அமெரிக்கர்கள் z என்பதைச் zee என்று காட்டுவது ஒரு சீர்மை கருதியே. அது போல் நாமும் ஆங்கில ஒலிப்பை அவர்கள் சொல்வது போலவே சொல்லிக்கொடுத்தாலும், தமிழ்-வழி எழுதி ஆங்கிலம் எழுத்துகளின் ஒலித்தன்மையைக் காட்ட (ஏ, இபீ, இசீ, இடீ என்பது போலும் சொல்லலாம்; இப்படி செய்ய வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை, செய்தால் B, D, G, J, S முதலானவற்றை எளிதாகச் சுட்டலாம் என்பதற்காகச் சொல்கிறேன்.) . ஆங்கில வழக்கில் உள்ளது போல பல சிறுகுழு சீர்மை இல்லாமல் பெருமளவும் சீர்மையுடன் தமிழில் கற்கும்பொழுது கற்கலாம். அமெரிக்கர்கள் zee என்று எழுதி ஓரிடத்தில் சீர்மையைக் கூட்டியுள்ளனர்.
ஆனால், இது வாசகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. வாசகர்களுக்கு இலகுவாகவே தமிழ் விக்கிப்பீடியா அமைய வேண்டுமென விரும்புகிறேன். --மதனாஹரன் 05:25, 20 பெப்ரவரி 2012 (UTC)
மதன், மாற்றுவதற்காகச் சொல்லவில்லை. எதையும் மாற்றவேண்டாம். ஆங்கில எழுத்துகளின் பெயர்களில் இல்லாத சீர்மையையும், அமெரிக்கர்கள் zee என்று ஓரெழுத்துக்குச் சீர்மை கூட்டியதையும், குறிப்பிட விரும்பினேன். ஒரு மொழியை (ஆங்கிலம்/பிரான்சியம்/...) அறியாதவர்கள் தங்கள் மொழியின் வாயிலாக அம்மொழியின் எழுத்தொலிகளைப் படிக்க/அறிய/கற்றுக்கொள்ள, தங்கள் மொழியில் அவ்வொலி (இருந்தால்) எங்கு வழங்குகின்றது என்று சுட்டியும், எடுத்துக்காட்டாகத் தந்தும், தங்கள் மொழியில் தருதல் எல்லா மொழிகளிலும் நிகழ்வது. எடுத்துக்காட்டாக இடாய்ச்சு மொழியில் (செருமன் மொழி) z என்றால் அதன் ஒலிப்பு cats என்பதில் வரும் -ts என்று சொல்லித்தருவார்கள் (ஆங்கிலேயர்கள்). பிரான்சிய மொழியில் வரும் j -வின் ஒலிப்பு ஒருவகையான ழகரம் (முற்றிலுமாகத் தமிழ் ழகரமே அல்ல, ஆனால் அதை ஒட்டிய ஓர் ஒலிப்பு), இதனை ஆங்கிலேயர்கள் measure என்பதில் வரும் s என்பதுபோல என்று சுட்டிக் காட்டுவர். அதுபோல தமிழில் B D ஆகிய ஒலிகளைத் தமிழில் குறிக்க கபம், கம்பம், இன்பம் போன்ற எழுத்துகளில் வரும் ப போன்ற ஒலிப்பு என்றும், D என்பதன் ஒலிப்பு, படம், குடம், என்பதில் வரும் ட போன்ற ஒலிப்பு, என்றும் சொல்லித்தருகின்றோம். அதே போல B என்பது இபீ, D என்பது இடீ என்பது போன்று ஒலிப்பைக் காட்டும் எழுதொலிப்பெயர்களாகச் சுட்டலாம் என்னும் கருத்தைத்தான் பகிர்ந்தேன். தமிழ்விக்கிப்பீடியாவில் மாற்றுவதற்காகச் சொல்லவில்லை.
↑Especially in American English, the el is not often pronounced in informal speech. (Merriam Webster's Collegiate Dictionary, 10th ed). Common colloquial pronunciations are /ˈdʌbəjuː/, /ˈdʌbəjə/, and /ˈdʌbjə/, as in the nickname "Dubya", especially in terms like www.
சுந்தர், நீங்கள் மேலே சுட்டிய கலையரசியின் பக்கத்திலேயே இட்டிருக்கின்றேன். அதன் ஒரு படியைப் பேச்சு:பிடரிக்கோடன் என்னும் கட்டுரையின் உரையாடல் பக்கத்திலும் சேர்த்திருக்கின்றேன்.--செல்வா 17:52, 23 பெப்ரவரி 2012 (UTC)
வணக்கம் ஐயா, சிறப்பு:Contributions/182.156.107.75 இந்த பயனரை சிறிது காலம் தடை செய்தீர்கள் எனில் நன்று.. ஏனெனில் தொடர்ந்து ஒலிக்கோப்புகளை சேர்த்து வருகிறார்.. ஏற்கனவே ஆலமரத்தடியில் சேர்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது தங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.
பி.கு.: தங்கள் திருத்தங்களை சமீபத்தில் பார்த்ததால் தாங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள் என நினைத்து கேட்கிறேன் நன்றி--shanmugam 16:49, 25 பெப்ரவரி 2012 (UTC)
தடை செய்திருக்கின்றேன். மீண்டும் இது போல செய்தால் இன்னும் நீட்டிப்பு தந்து தடுக்கலாம். அதையும் மீறினால் காலவரையின்றியும் தடுக்கலாம். தெரிவித்தமைக்கு நன்றி.--செல்வா 17:15, 25 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி ஐயா--shanmugam 17:16, 25 பெப்ரவரி 2012 (UTC)
செல்வா என்றே தயங்காமல் அழையுங்கள். இங்கு நாம் யாரையும் ஐயா என்றோ, அக்கா, ஐயை என்றோ அழைப்பதில்லை, எனவே தயங்காமல் செல்வா என்றே அழையுங்கள். நன்றி.--செல்வா 17:20, 25 பெப்ரவரி 2012 (UTC)
என்ன இருந்தாலும் தாங்கள் பேராசிரியர் அல்லவா.. அதனால் தான்.. இனி செல்வா எனவே அழைக்க முயற்சிக்கிறேன்...--shanmugam 17:23, 25 பெப்ரவரி 2012 (UTC)
ஆம், ஆனால் அது என் பல்கலையில், இங்கு நான் ஓர் உடன்பங்களிப்பாளன். நன்றி. (அருள்கூர்ந்து முயல்கிறேன் என்று சொல்லுங்கள்; முயற்சி என்பது பெயர்ச்சொல். தளர்ச்சிக்கிறேன், வளர்ச்சிக்கிறேன், உணர்ச்சிக்கிறேன் என்று நாம் சொல்வதில்லை அல்லவா, அது போன்றே முயற்சிக்கிறேன் என்றும் சொல்லுதல் கூடாது. ஆனாலும் பலரும் தவறாகப் பயன்படுத்தும் ஒன்று. நாம் அசெத (அடிகக்டி செய்யும் தவறு) என்று ஒரு பட்டியல் உருவாக்கலாம். நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைத்து இதனைக் கூறுகின்றேன். )--செல்வா 17:33, 25 பெப்ரவரி 2012 (UTC)
கண்டிப்பாக தவறாக நினைக்க மாட்டேன்..பயனர் பேச்சு:Daniel pandian இங்கு தாங்கள் கூறியிருந்ததை எதேட்ச்சையாக படித்த பிறகு இப்போதுதான் திருத்தலாம் என வந்தேன்.. அதற்குள் தாங்களே கூறிவிட்டீர்கள்... நன்றி.. இனி முயல்கிறேன் என கூற முயல்கிறேன் :):):)--shanmugam 03:04, 26 பெப்ரவரி 2012 (UTC)
I found atleast 4-5 tamil Wikipedians showed interest in the Medicne project. In that case can we start a wiki project page in Tamil wikipedia for this, and slowly start this project to keep the interested people together. I am ready to provide alltype of external support if community is interested in this project. Please let me know so that we can proceed. --Shiju Alex (WMF) 17:59, 25 பெப்ரவரி 2012 (UTC)
Hi Shiju, thanks for your support! Already a small beginning is made, see விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம் (A Wiki project on medicine). It is an important initiative and as many of us as possible would participate. There is general interest for this topic and I believe we have a critical mass of doctors and health professionals as well in Tamil Wikipedia. --செல்வா 18:21, 25 பெப்ரவரி 2012 (UTC)
பதக்கம் வழங்குதல் குறித்தும், நிருவாகிகளின் பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்தும் எனக்கு நன்கு தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! நான் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்தபடி... பொறுமையாய் சொல்லித்தரும் உங்களைப் போன்றவர்கள், விக்கிக்குப் பலம்! எனது சந்தேகங்களை கேட்க நான் இங்கு தயங்குவதேயில்லை!
எனது முதல் 'பதக்கம் வழங்குதலை' செய்துவிட்டேன். அந்த பாக்கியசாலி: சண்முகம்!
--மா. செல்வசிவகுருநாதன் 18:35, 25 பெப்ரவரி 2012 (UTC)
கலைச் சொல் ஒத்தாசைப் பக்கத்தில் கொந்தர்கள் மற்றும் கொந்துதல் பற்றிய சொற்களுக்கும் தமிழ்ச் சொற்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் 03:44, 26 பெப்ரவரி 2012 (UTC)
சில பரிந்துரைகள் தந்துள்ளேன். பொருந்துமா எனப் பார்க்க வேண்டுகிறேன். ஆங்கில விக்கிப்பீடியா, அர்பன் அகராதி போன்றவற்றின் துணையுடன் தெளிவுபடுத்திக்கொண்டே பரிந்துரைகள் தந்துள்ளேன். இது தனித்துறை, அதற்கென தனிக்கலைச்சொல் குழூஉக்குறிகள் இருக்கும். அச்செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்போரே இவற்றின் பொருத்தம் பொருத்தம் இன்மை பற்றி அறிந்துரைக்க முடியும். நான் கொந்துநர் அல்லன், அவர்கள் மொழிகளை மிகக் குறைவாகவே, மிகவும் மேலோட்டமாகவே அறிவேன். எனவே பொருந்துமா பொருந்தாதா என்பதைப் பற்றி நீங்கள் உரையாடித்தான் தேர்வு செய்ய இயலும். பொற்கொல்லர், கணிதவியலர் என்று ஒவ்வொரு துறைஞர்களும் தங்களுக்கென தனிச்சூழல், தனிவட்டாரச் சொற்கள் வைத்திருப்பார்கள் அலல்து உருவாகி வளரும். அதுபோலவே கொந்துநர் வட்டமும். மிகத் திருக்கான, மிக மிடுக்கான தமிழ்ச்சொற்கள் ஆக்கலாம், அவை துறை செயற்பாட்டின் வீச்சையும் குறிக்கலாம், ஆனால் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும். சூழலின்றி வெறும் சொற்களாக ஆக்குவதில் பயன் இல்லை. எடுத்துக்காட்டாக, இச்சொற்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிதேனும் விரித்து எழுதினால் (அதன் வரலாறு, பயன்பாடு, அது பற்றிய அறிவுத்திரட்சி) அங்கே அச்சொற்களின் பொருத்தம் ஓரளவுக்கு நன்றாக உணரும்படியாக இருக்கும். உங்கள் ஆர்வத்துறைகளின் நீங்கள் இப்படி ஆக்க முன்வருவது கண்டு மிக மகிழ்கின்றேன். நல்வாழ்த்துகள்--செல்வா 16:26, 26 பெப்ரவரி 2012 (UTC)
White Hat Hacker என்பதற்குக் குறும்பர் என்று கலைச் சொல் உள்ளது. அதனைப் பயன்படுத்துகின்றேன். Password Cracking என்பதற்கும் கடவுச் சொல் உடைத்தல் என்பதைப் பயன்படுத்துகின்றேன். Packet Sniffer என்பது இணையத்தில் பரிமாறப்படும் பொட்டலங்களைக் கவர்ந்து தகவல்களைத் திருடும் மென்பொருள் ஆகும். ஆகவே, அதனைப் பொதி முகர்வர் என அழைக்கலாம். கலைச் சொற்களைப் பரிந்துரைத்தமைக்குத் தங்களுக்கு நன்றிகள். கொந்தர் என்ற கட்டுரையைப் பார்க்கவும். --மதனாஹரன் 13:22, 27 பெப்ரவரி 2012 (UTC)
எனக்கு இந்தி தெரியாது செல்வா :).. இவற்றை மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றி.. நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளான லக்னௌ, மீரட் போன்றவற்றை வழிமாற்றாக கொடுத்துவிடுகிறேன்....--shanmugam (பேச்சு) 03:08, 2 மார்ச் 2012 (UTC)
நன்று சண்முகம். மீரட் என்பதை அவர்கள் मेरठ இது மேரட்2 என்கிறார்கள் (ஆனால் நமக்குப் பழக்கமான மீரட்டு என்றேகூடச் சொல்லலாம், ஏனெனில், உள்வாங்கும் ஒவ்வொரு மொழியும் தங்கள் மொழியில் எப்படி வழங்க வேண்டும் என்பது உள்வாங்கும் மொழியின் உரிமை இது உள்வாங்கும் மொழியின் தன்மை இலக்கணம், மரபு சார்ந்து அமையும். இதனால்தான் London என்பதை மிக அருகே இருக்கும் பிரான்சு நாடு, எசுப்பானியா, போர்த்துகல் போன்றவை Londres என்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அதே உரோமன் எழுத்தைத்தான் பயன்படுத்துகின்றார்கள்! நாம் இலண்டன் என்கிறோம்.). --செல்வா (பேச்சு) 03:31, 2 மார்ச் 2012 (UTC)
சரி செல்வா. மேற்கூறியவாரே செய்கிறேன்..நன்றி--shanmugam (பேச்சு) 03:40, 2 மார்ச் 2012 (UTC)
கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தில் நான் கேட்டுள்ள சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 07:18, 4 மார்ச் 2012 (UTC)
மதன், பரிந்துரைகள் தந்துள்ளேன். பார்க்கவும். --செல்வா (பேச்சு) 19:47, 7 மார்ச் 2012 (UTC)
செல்வா, வணக்கம்!
நான் துவக்கிய தொடர்கதை எனும் கட்டுரையில் எந்த ஆங்கிலக் கட்டுரைக்கு இணைப்பு கொடுப்பது என்பது தெரியவில்லை. உரியதை இணைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். (செய்தி சம்பந்தப்பட்ட ஆங்கில சஞ்சிகைகள் தவிர மற்ற பொழுதுபோக்கு சஞ்சிகைகளை இதுகாறும் படித்ததில்லை என்பதால் தொடர்கதைக்கு இணையான ஆங்கிலச் சொல் எனக்குத் தெரியவில்லை!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:57, 8 மார்ச் 2012 (UTC)
தங்கள் வாழ்த்துகளுக்கும் உற்சாகமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி.
தங்களின் கலைத் திறமை கண்டு மகிழ்வுற்றேன். கிளிமஞ்சாரோ மலை உச்சி வரை சென்ற நீங்கள் இன்னும் பல சாதிக்க என் வாழ்த்துகள். --Anton (பேச்சு) 18:01, 10 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி அன்டொன்! :) --செல்வா (பேச்சு) 18:45, 10 மார்ச் 2012 (UTC)
செல்வா, ஆலமரத்தடியிலும் பேச்சுப் பக்கத்திலும் தங்கள் வாழ்த்தைக் கண்டு மகிழ்ந்தேன். ஒரு திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்களிப்பவர்கள் தொடர்ந்து உடன் பங்களிப்பது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான விசயம் தான். தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பன்முகப் பங்களிப்பு நல்கும் உங்களைப் போன்ற சான்றோருடன் இணைந்து பங்களிப்பது இன்னும் பெரு மகிழ்ச்சி. நன்றி--இரவி (பேச்சு) 10:00, 14 மார்ச் 2012 (UTC)
வணக்கம் செல்வா சிறப்பு:Contributions/Ar.vijayan இவர் பலமுறை மீண்டும் மீண்டும் கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை சேர்த்துவருகிறார்.. பார்த்து தேவையான நடவடிக்கை எடுக்கவும்.. நன்றி --shanmugam (பேச்சு) 16:46, 14 மார்ச் 2012 (UTC)
இப்பொழுது தற்காலிகமாக 1 கிழமைக்குத் தடை செய்திருக்கின்றேன். ஒரு குறிப்பை அவர் பேச்சுப்பக்கத்திலும் இட்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி! --செல்வா (பேச்சு) 17:24, 14 மார்ச் 2012 (UTC)
செல்வா, நேரம் கிடைக்கும்போது ஊர்வன கட்டுரையில் உள்ள அறிவியல் வகைப்பாட்டைத் தமிழில் தந்தால் பேருதவியாக இருக்கும். ஊர்வனவற்றுக்கான விக்கித்திட்டம் ஒன்றைத் தொடங்க விரும்புகிறேன். அதற்கு முன்னர் சில கட்டுரைகளை எழுதிப் பார்க்க வேண்டும். -- சுந்தர்\பேச்சு 17:24, 22 மார்ச் 2012 (UTC)
சுந்தர், காலத்தாழ்வுக்கு மன்னிக்கவும். வேறு யாரும் செய்திருக்கவில்லை எனில் நான் இவற்றுக்கான சொற்களைப் பரிந்துரைக்க முயல்வேன்.--செல்வா (பேச்சு) 16:47, 9 ஏப்ரல் 2012 (UTC)
ச. வெ. இராமன் அவர்களுடைய புதல்வரும் ஒரு புகழ்பெற்ற அறிவியலாளர் என்பதை இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை. கட்டுரை தொடங்கியதற்கு நன்றி, செல்வா. --சிவக்குமார்\பேச்சு 20:46, 9 ஏப்ரல் 2012 (UTC)
நானும் இன்றுதான் அறிந்துகொன்டேன் சிவக்குமார்! ஒரிசா பாலு என்னும் நண்பர் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் இந்து நாளிதழ் ஆங்கில விக்கியைப் பார்த்தேன். பின்னரே அறிந்துகொன்டேன்! இந்து நாளிதழில் வந்த கட்டுரை --செல்வா (பேச்சு) 20:52, 9 ஏப்ரல் 2012 (UTC)
ஓ, அப்படியா! இந்தி, மலையாள விக்கிகளில் ஓராண்டிற்கு முன்னரே இக்கட்டுரை தொடங்கப்பட்டிருக்கிறது! --சிவக்குமார்\பேச்சு 21:08, 9 ஏப்ரல் 2012 (UTC)
சிறீக்காந்தின் நிருவாக வாக்கெடுப்பின் மீதான உரையாடல்
செல்வா, நிருவாக வாக்கெடுப்பில் நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு சிறீக்காந்த் மறுமொழி அளித்துள்ளார். அங்கு உங்கள் பதிலைச் சேர்த்து உரையாடலை நிறைவுக்குக் கொண்டு வருவீர்கள் என்றால் வாக்கெடுப்பு முடிவைச் செயற்படுத்தலாம். நன்றி--இரவி (பேச்சு) 06:23, 26 மே 2012 (UTC)[பதிலளி]
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நன்றிகள் பல. உங்களைப் போன்ற கலைத்துறையை அனுபவிப்பவர்களின் பாராட்டுக்கள் இரட்டிப்பான மகிழ்ச்சியும் உற்சாகமும் தரவல்லன! உங்கள் வார்த்தைகள் கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளைத்தான் நினைவூட்டின. தன்னை நோக்கி வீசப்படும் வெள்ளிக் காசுகளைவிட, கரவோசையைத்தான் ஒரு (கவிஞன்) கலைஞன் நேசிப்பான். --Anton (பேச்சு) 17:35, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]
சித்தன்னவாசல், குடுமியான்மலை ஆகிய இரண்டும் என் ஊரில் இருந்து மிதிவண்டியில் செல்லும் தொலைவில் இருந்தும் இத்தனை நாள் பார்த்திருக்கவில்லை :( தங்கள் ஓவியத்தைக் கண்டபின், இம்முறை ஊருக்குச் சென்ற போது நானும் அப்பாவும் சென்று பார்த்து வந்தோம். அவரும் இத்தனை நாள் பார்த்திருக்கவில்லை ! சித்தனவாசல் கோயில் சுவரில் தங்கள் ஒளிப்படத்தில் உள்ள ஓவியத்தைத் தேடிப் பார்த்த போது மனம் நொந்து போனது :( இது போல் இன்னும் எத்தனை கலைச்செல்வங்கள் அழிந்து போயுள்ளனவோ தெரியவில்லை. --இரவி (பேச்சு) 06:25, 22 சூன் 2012 (UTC)[பதிலளி]
ஆம் இரவி!! நீங்கள் சென்று பார்த்தமைக்கும், உங்கள் தந்தையாரையும் அழைத்துச்சென்று பார்த்தமைக்கு மிக்க நன்றி. நம்மக்கள் இவற்றைப் பார்த்து தக்கவாறு போற்றிப் பாதுகாக்கவேண்டும்! மண்டபத்தின் உள்ளே மேல்தளத்தில் உள்ள படத்தின் பழைய ஒளிப்படம் (இலலிதகலா அக்காடெமி படம்) என்னிடம் ஒன்று உள்ளது. அதனை ஒப்பிடும்பொழுது இப்பொழுது அங்குள்ள படத்தின் நிலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஆனால் பழுதடைந்த அந்தப் படத்தைக்கூட எடுக்க அனுமதிக்கவில்லை!! ஒருவன் நீர்நிலையில் தாமரை மொட்டுகளைத் திரட்டும்படியாக இருக்கும் படம். உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி (சில நாட்களாக இப்பக்கம் வரவில்லை. காலத்தாழ்ச்சியான மறுமொழிக்கு மன்னிக்கவும்).--செல்வா (பேச்சு) 18:07, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள். நாசுகா கோடுகள் கட்டுரையில் காட்டப்பட்டுள ஒரு குரங்கின் படமே 400 சதுர கிமீட்டர்கள் பரப்பளவு கொண்டதா? அல்ல்து அதைப்போல் பல சின்ன சின்ன ஒவியங்கள் 400 சகிமீ பரப்பள்வில் இடம்பெற்றுளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:37, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
நாசுகா கோடுகள் என்பதில் குரங்கு மட்டுமல்ல பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இவை இயற்கையிலேயே உள்ளவையா அல்லது வேற்று கிரகவாசிகளுக்கு அடையாளம் காட்டுவதற்காக மனிதர்களால் உருவாக்கப்படவையா என்ற சர்ச்சை இன்னும் உள்ளது. சிறிய ஓவியமல்ல அவை. 400 சதுர கி. மீ. பரப்பளவில் உள்ள மிகப்பெரிய ஓவியங்கள் அவை. மேலிருந்து விமானம் வாயிலாக பார்த்தால் மட்டுமே அதன் உருவம் தெரியும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:04, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
ஒரு படமே 400-500 சதுர கி.மீ பரப்பு கொண்டதன்று. அத்தகைய பெரிய பரப்பில் இடம் விட்டு பல இடங்களில் பல மணற் கோட்டோவியங்கள் உள்ளன. இவற்றை நான் நேரில் சிறிய வானூர்தியில் (வேறு மீகாமன் ஓட்ட) சென்று பார்த்திருக்கின்றேன். மிகவும் வியப்பூட்டும் மிகப்பெரிய படங்கள். தரைமட்டத்தில் இருந்து பார்த்தால் தெரியாது. உயரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். எப்படி வரைந்தார்கள், எப்படி இப்படி ஏறத்தாழ 1400-2000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கின்றன என்பதெல்லாம் பெரு வியப்பாக இருக்கின்றது. பிறகு எழுதுகின்றேன்..--செல்வா (பேச்சு) 14:32, 14 சூன் 2012 (UTC)[பதிலளி]
தொகுத்துத் தருகின்றேன்.. கட்டுரை ஆக்கியதற்கு மிக்க நன்றி! இவருடைய உரோமன் எழுத்துத் தொகுப்பில் இருந்த இலக்கியங்களை நான் பல முறை தேடி வேண்டியவற்றைப் பெற்றுப் பயன் அடைந்திருக்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:33, 14 சூன் 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:58, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]
பொதுவாக அனைத்து அடிப்படைத் துகிள்களுக்கும் திணிவு இல்லை என்று கூறப்படுகிறது? துகிள்களின் திணிவு higgs புலத்தினூடான இடைவினையால் உருவாவதாகக் கூறப்படுகிறது. இதை எவ்வாறு விளங்கிக் கொள்வது? தயந்து எளிமையாக விளக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:46, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
எங்கு அப்படிப் படித்தீர்கள். ஒளியன் (ஃபோட்டான்), குளுவான் (ஒட்டினி) போன்றவைக்குத்தான் நிறை (திணிவு) கிடையாது, மற்றவைக்கு உண்டே! நுண்நொதுமி (நியூட்ரினோவுக்குகூட) மிகச்சிறிதளவு உண்டு. இங்கே பாருங்கள். எலக்ட்ரான் வோல்ட்டு என்பது நிறையை/திணிவைக் குறிக்க உள்ளது பாருங்கள்.--செல்வா (பேச்சு) 01:55, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
"The standard model describes everything we know about the smallest building blocks of nature yet observed. It's the most accurate theory ever developed, in any field. And without the Higgs, it doesn't make much sense. Based purely on first principles, elementary particles should be massless. Some, like photons, do have zero mass; yet others are surprisingly heavy. Enter the Higgs, which would—in theory—interact with these latter particles to make the difference." [1]
--Natkeeran (பேச்சு) 01:57, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
நற்கீரன், அவர்கள் கூறும் நிறையில்லா அடிப்படைத் துகள்கள் கருத்தியலானவை. இகிசின் புலம் (இகிசின் புலம்மாறா அல்லது அளவுசீர் குவாண்டம் புலக்கொள்கை) முதலியன சிக்கலானவை. சுருக்கமாகக் கூறுவது கடினம். எனக்கும் சரிவரத் தெரியாது. நோபல் பரிசு பெற்ற பிராங்க்கு வில்ச்செக்கு (Frank Wilczek) முன்பு வாட்டர்லூவில் பெரிமீட்டர் இன்சிட்டியூட்டில் நிறையின் தோற்றம் (origin of mass) பற்றி மிக அருமையான ஒரு சொற்பொழிவு ஆற்றினார் (நான் அப்பொழுது கேட்டிருக்கின்றேன்). அது நிகழ்படமாகக் கூட கிடைக்கும். அவர் மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இங்கே இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். இவற்றை முழுவதுமாகத் தமிழாக்க முடியும். இந்த 12 பக்கக் கட்டுரையைப் படித்துப்பாருங்கள். --செல்வா (பேச்சு) 02:27, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி. த.விக்கியில் அடிப்படைத் துகிள்கள், அடிப்படை விசைகள், அவையோடு தொடைபுடைய இயற்பியல் விளைவுகள், அண்டத்தின் பற்றிய கட்டுரைகள் இன்னும் இல்லை. தற்போதிய கண்டு பிடிப்போடு இக் கட்டுரைகள் தொடர்பான ஆர்வம் கூடலாம். நேரம் இருக்கும் போது இவற்றை விரிவாக்க வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:41, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
செய்ய முயல்கிறேன். மிகச்சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில். பொருள்கள் அணுக்களால் ஆனவை. பொருளின் நிறை என்று நாம் கணக்கிடுவது, அணுக்களில்தானே இருக்க முடியும். அணுக்கள் நேர்மின்னி, நொதுமி, எதிர்மின்னி ஆகிய பழங்கால அடிப்படைத் துகள்களால் ஆனவை. ஆனால் எதிர்மின்னியின் நிறை மிகச்சிறியது (நேர்மின்னியின் நிறையில் 1840 பங்கு சிறியது). எனவே அணுவின் நிறை முழுவதும் ஏறத்தாழ அணுக்கருவில் உள்ளது. இந்த அணுக்கருவில் உள்ள நேர்மின்னி நொதுமிகள் குவார்க்குகளால் ஆனவை. ஆகவே நாம் அணுவின் நிறை முழுவதும் குவார்க்கில்தான் இருக்கும் என்று நினைப்போம். ஆனால் குவார்க்குகளின் நிறை மிகச்சிறியது (மூன்று குவார்க்குகளும் சேர்ந்தே நேர்மின்னியின் நிறையில் ஏறத்தாழ 2% மட்டுமே). மீதம் உள்ள 98% நிறை எங்கு இருந்து வருகின்றது என்பது வியப்பான செய்தி. நேர்மின்னி, நொதுமி முதலானவை அமைதியாய் அணுக்கருவில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கவில்லை :) அவற்றுள் இருக்கும் இந்தக் குவார்க்குகள் மிக விரைவாக விசைப்புலத்தில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. இந்த விசைப்[புலத்தின் விளைவுதான் அந்த நிறை. எனவே நிறை என்பது ஐன்சுட்டீனின் E= mc2 என்பது கூறுவது போல் அந்த ஆற்றலில் வேறொரு வெளிப்பாடே இந்த "நிறை". இந்த இகிசு போசான் என்பது குவார்க்கு மென்மி ஆகியவற்றுக்கே நிறையைத் தரும் ஒருவகை விசைப்புலம். இந்த விசைப்புலம் சில மாறாமைப் பண்புகள் கொண்டிருக்க வேண்டும் (இடாய்ச்சு மொழியில் gauge boson என்பதை Eichboron என்கின்றார்கள். இந்த Eich என்னும் சொல் ஆங்கிலத்தில் calibrate என்கிறோமே அதேதான். gauge என்றாலும் அதே பொருள். நாம் தமிழில் அளவுசீர் புலம் = gauge field எனலாம்) இந்த அளவுசீர் புலத்தால்தான் அந்த மாறாமைப் பண்புகள் வருகின்றன (இதனை விளக்குவதற்கு இலகுராஞ்சியன் திசையன்கள் (Lagrangean vector) முதலியன பற்றி பேச வேண்டும்). எனவே இந்த இகிசு போசான்கள் குவார்க்கு மென்மிகளுக்கு நிறையைத் தருகின்றன. இவை அனைத்தும் ஆற்றல் புதைந்து கிடக்கும் விசைப் புலத்தின் வெளிப்பாடு. நிறையே இல்லாத இரு "துகள்கள்" ஒளிவேகத்தில் சுழன்றால் அதன் ஆற்றல்வழி நிறை தோன்றும். ஒளியன் ஒன்று அதிர்வெண் f கொண்டிருந்தால் E = h.f என்னும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்த ஆற்றல் நிறையை உருவாக்கும் விசைப்புலத்தில். ஆனால் அணுக்கருவின் உள்ளியங்கும் வன்விசையே பெரும்பாலான நிறைக்குக் காரணம் என்பது இப்போதைக்கு நாம் புரிந்துகொண்டிருப்பது. இதுவே இப்போதைக்குத் தரக்கூடிய எளிய விளக்கம்.--செல்வா (பேச்சு) 03:11, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
அருமையான எளிய விளக்கம் செல்வா. மிக்க நன்றி. இத்தனை மிகவும் சிக்கலான கருத்துகள், என்னால் குறைந்த அளவுப் புரிதலைக்கூட எட்ட முடியாது என எண்ணியிருந்தேன். அழகு தமிழில் உங்கள் இடுகையைப் படித்து விளங்கிக் கொண்டேன். -- சுந்தர்\பேச்சு03:45, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர். இது பற்றி இன்னும் விரிவாகவும் இன்னும் தெளிவாகவும் எழுத வேண்டும். பத்திரி சேசாத்திரி ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார். அதையும் படித்துப் பாருங்கள். இங்கே உள்ளது. --செல்வா (பேச்சு) 04:32, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய bot களை பயன்படுத்துகின்றனர் என்று அறிந்தேன். எனக்கு ஒரு வேலை செய்ய ஆசை. உதாரணம்: வட்டங்கள் பற்றிய கட்டுரைகள் பல ஆங்கில விக்கியில் இருந்தும் இணைப்புகள் இல்லை. தானியங்கியை உருவாக்கி எழுத்துப்பெயர்ப்பைக் கொண்டு அப்பெயரை ஆ.விக்கியில் தேடச் செய்து இணைத்தால் என்ன? தானியங்கி உருவாக்குவது பற்றி கூறவும். எவ்வளவு கடினமாயிருந்தாலும் கற்றுக்கொள்கிறேன் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒரு தலைப்பை பொதுவாகத் தேடினால் அதற்கான விடைகள் கிடைக்கிறது. சிறப்புப் பக்கங்கள் (உதாரணம்:பிற மொழிகள் இணைப்பற்ற பக்கங்கள்) போன்ற பக்கங்களில் மட்டும் தேடுவது எப்படி?--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:37, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
சிறப்புப்பக்கங்கள் (உதாரணம்: பிறமொழிகள் இணைப்பற்ற பக்கங்கள்) போன்ற பக்கங்களில் மட்டும் தேடுவது எப்படி?" இதனையும் அந்தப்பகுப்பில் சென்று அங்குள்ள கட்டுரைகளில் தேடலாம். தானியங்கியாகவும் கட்டாயம் செய்ய இயலும், ஆனால் எனக்குத் தெரியாது. மேலே குறிப்பிட்ட பயனர்களிடம் கேட்கலாம், அல்லது ஆலமரத்தில் இட்டுக் கேளுங்கள்.
நீக்கப்பட்ட பக்கங்களை நிருவாகிகள் அதிகாரிகள் பார்க்கலாம், மீள்விக்கலாம். அவர்களுக்கு நீங்கள் வேண்டுகோள் விடலாம் ஏதும் தேவை எனில்.
நகர்த்தல் என்பது புதிய தலைப்புக்குக் ஒரு கட்டுரையே மாற்றுதல் (எனவே நகர்த்தப்பட்ட புதிய தலைப்பில் கட்டுரை இருக்கும்). வழி மாற்று என்பது ஏற்கனவே ஒரு தலைப்பில் உள்ள கட்டுரையை, அதன் தலைப்பை மாற்றாமல், வேறு ஒரு தலைப்பை இட்டுத் தேடினாலும் அதே கட்டுரைக்கு எடுத்துச்செல்லும் முறை. எடுத்துக்காட்டாக கா என்று ஒரு கட்டுரையின் தலைப்பு இருந்தால், அதனைப் பா என்னும் தலைப்புக்கு மாற்ற நகரத்தல். எனவே இனிமேல் பா என்பதே அக்கட்டுரையின் தலைப்பாகும். ஆனால் கா என்னும் கட்டுரையின் தலைப்பை மாற்றாமல், வீ என்று இட்டாலும் கா என்னும் தலைப்புடைய கட்டுரைக்கே செல்ல வீ என்று ஒரு வழிமாற்று அமைக்கின்றோம். ஒரு கட்டுரைக்குப் பல வழிமாற்றுகள் இருக்கலாம்.
மதனாகரன், நான் கேட்டது நீக்கப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கத்தை பார்க்க முடியுமா என்று! மேலும் நான் நினைத்த அந்த வேலையை செய்வதற்கு sundarbot என்ற தானியங்கி உள்ளது. உதவி தேவை எனில் கேட்கிறேன். நன்றி!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:06, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]
caustics -இம்மூன்று சொற்களுக்கும் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகிறது. (இம்மூன்றுக்கும் ஆங்கில விக்கியில் கட்டுரைகள் உள்ளன.)) பரிந்துரைத்தால் நல்லது. நன்றி.--Booradleyp (பேச்சு) 15:21, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒத்தாசைப் பக்கத்திலேயே என் பரிந்துரைகளைத் தந்திருக்கின்றேன். பாருங்கள். அதன் படி கீழே:
"Mandelbrot", "Diocles" ஆகியவை தனிமாந்தப்பெயர்கள் ஆகையால் அவை அப்படியே இருக்கலாம். பொதுவாகவே "cissoid" என்னும் கிரேக்கவழிச்சொல் கூறும் கணிதக் கருத்தை உள்ளடக்கிக் குறிப்பாகக் கூறுவதும் கடினமாகத் தெரிகின்றது. cissoid என்பது "ivy" போன்ற (ivy-like) என்ற பொருள் தருகின்றது. இதில் ivy என்பது ஒரு படரும் கொடியைக் குறிக்கும் பெயர். cissoid என்பதை இடைவெளி விளைகோடு என்று கூறலாம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் இங்கு ஒரு தொடக்கப் புள்ளியில் இருந்து வரையும் ஒரு நேர்கோடானது, இரு வேறு கோடுகளை (இவை வளைகோடுகளாகவும் இருக்கலாம்) வெட்டும்பொழுது அந்த இரண்டு வெட்டுப்புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவை (அந்த நேர்க்கோட்டில் விழும் இடைவெளித் தொலைவை), நேர்கோட்டின் ஒரு தொடக்கப்புள்ளியில் இருந்து குறித்து, அதே போல பல கோடுகளை அதே தொடக்கப்புள்ளியில் இருந்து வரைந்து விழும் இடைவெளிகளைக்குறித்து வந்தால் உருவாகும் அல்லது விளையும் ஒரு "கோடு" (வளைவு). எனவே "cissoid of Diocles" என்பதை தையாக்கிளசின் இடைவெளி விளைகோடு எனலாம். (ஆக்ஃசுபோர்டு அகராதி, "A curve of the second order invented by Diocles." என்கிறது.
"Mandelbrot set" = மாண்டல்பிராட்டுக் கணம்.
"caustics" என்பதும் சிக்கலான கருத்துரு. எரிக்கு வைசுட்டைனின் மேத்வோர்ல்டு (MathWorld) விளக்கத்தின் படி, "The curve which is the envelope of reflected (catacaustic) or refracted (diacaustic) rays of a given curve for a light source at a given point (known as the radiant point). ". எனவே கேட்டாக்காசிட்டிக்கு (catacaustic) என்பதை எதிர்கதிர் விளைகோடு (பரப்பாகவும் இருக்கலாமோ என்று நினைக்கின்றேன்) என்றும், டைய-சாசிட்டிக்கு (diacaustic) என்பதை விலகுகதிர் விளைகோடு (பரப்பும்?) என்றும் கூறலாம் என்று நினைக்கின்றேன். வெறும் caustics என்பதை கதிர்விளைகோட்டியல் என்றும் கூறலாம். --செல்வா (பேச்சு) 18:08, 20 சூலை 2012 (UTC)--செல்வா (பேச்சு) 00:06, 21 சூலை 2012 (UTC)(சிறுதிருத்தங்கள்)--செல்வா (பேச்சு) 00:41, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
நீங்கள் பாண்டியர் கட்டுரைக்கு தரக்கண்கானிப்பு இட்டுளீர்கள். என்னென்ன காரணங்கள் என அதன் பேச்சுப்பக்கத்தில் இட்டால் நான் திருத்தி விடுகிறேன். எளிதாக முதற்ப்பக்கக் கட்டுரையாக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:14, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
சில வருடங்களுக்கு முன் அ =8 அல்ல என்று, தங்களிடம் உரையாடிய போது கூறியிருந்தேன். எப்படி? என்று நீங்கள் கேட்டதற்கு, [2] காட்டினேன்.அது பற்றி தேடவேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.
// Symbol for the number 8, printed without the loop at the top (அ)//
தமிழ் எண்களைப் பற்றி, இணைய உலாவல் செய்து கொண்டு இருந்த போது, இப்படத்தினை பார்த்து, சற்று ஆழ்ந்து தேடினேன். தஞ்சாவூர்என்பதில், ஞாவை நன்கு சுழித்துள்ளனர். 8-க்குரிய குறியீட்டிற்கு அ-சுழிக்கப்படாமல் இருப்பதை கவனியுங்கள். இக்கல் தொன்மையானது என்பதால் இதனை ஆதாரமாக நாம் கொள்ளலாமா?
பலர் குறில் அ-வை , 8 எனக்குறிப்பிடுவது நமது துல்லியத்தை கைவிடும் செயல் அல்லவா?மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம்?உங்கள் கருத்தறிய ஆவல்.--த♥ உழவன் +உரை..03:16, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]
(1) இக்கல் தொன்மையானது அன்று. (2) தஞ்சாவூற எனப் பிழையாக எழுதியுள்ளது போல் தெரிகின்றது. எனவே இதன் அடிப்படையில் எதுவும் கூறமுடியாது என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 03:52, 31 சூலை 2012 (UTC)[பதிலளி]
மதன், நன்றி. இதனை நான் அறிவேன். அவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் விளக்கம் தந்திருக்கின்றார்கள். அதற்கான சான்றுகோளை அவர்கள் தரவில்லை. தக்க சான்றுகோள்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. பல சொற்களைத் தவறாக அடையாளப்படுத்தியுள்ளார்கள் தமிழ்ப் பேரகராதியில். எனவே தக்க சான்றுகோள்கள் இல்லாமல் ஏற்பது சரியாகாது. அ +உ +ம் = ஓம் என்பதை எட்டிரண்டும் என்று கூறுவதுண்டு. இது போல பல இடங்களில் எட்டு என்பதைக் குறிக்க அகரம் பயன்படுத்தப்பட்டுள்ளன. --செல்வா (பேச்சு) 14:42, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
என்னும் வள்ளலாரின் பாடலில் வரும் எட்டிரண்டு என்னும் சொல்லைப் பாருங்கள். இங்கே கொடுத்துள்ள விளக்கத்தில் "“எட்டிரண்டும் அறியேன்” (சதகம்) என்ற செம்மொழியின் பொருள் யாதென வினவினாற்கு அகர உகரங்கள் என உரைக்க முடியாமல் மயங்கிய நிலையைக் குறிப்பதற்கு வடலூர் வள்ளல், “எட்டிரண்டும் என்னென்றால் மயங்கிய என்றனக்கே” எனவும்.." இங்கே அ = 8 என்பது பொருள் இங்கு.
--செல்வா (பேச்சு) 14:50, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
Jerk என்பதை முடுக்கமாற்றம் என்றும் Yank என்பதை விசை மாற்றம் என்றும் சொல்லலாம். நிறை (mass) மாறாமல் இருந்தால் விசை மாற்றம் = (நிறை) x (முடுக்க மாற்றம்). மாற்றம் என்பது இங்கு காலத்தால் மாறுபடுவது. முடுக்கம் மாற்றம் என்பது காலத்தால் ஏற்படும் முடுக்கமாற்ற வீதம்..
நானும் இதற்கான சொல்லைத் தேடிக் கொண்டிருந்தேன். இயற்பியல் விளைவைப் பற்றியல்லாத வேறு இடத்தில் சுண்டுதல் எனும் வினையைப் பயன்படுத்தினேன். Hypnic jerk என்பதை உறங்குநிலையில் சுண்டித் திடுக்கிடல் என நான் மொழிபெயர்த்துள்ளது சரிதானா? வேறு பொருத்தமான பெயர் இருந்தால் மாற்றிவிடலாம். -- சுந்தர்\பேச்சு13:49, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
சுந்தர், தமிழில், அதிர்ப்பு, திடுக்கு, திடுக்கம் ஆகிய சொற்கள் ஏற்கனவே உள்ளன. எனவே திடுக்கம் என்பதை jerk என்பதற்கு இயற்பியல் பொருள் சுட்டி வழங்கலாம். Hypnic jerk என்பது உறக்கத்தில் ஆழும் முன்பு சில நேரம் ஏற்படும் ஒரு விறுக்கென விழிப்புறும் சிறுபொழுது நிகழ்வு,. ஆங்கிலக் கட்டுரைகளில் " often accompanied by a falling sensation" என்று இது பற்றிக் கூறுவதை நோக்கும்பொழுது, தமிழில் திடுக்கம் என்னும் சொல்லின் பொருள் "திடீரென்று விழுந்தது" என்று சென்னைத் தமிழ்ப் பேரகராதி கூறுவதையும் குறிப்பிடத் தோன்றுகின்றது திடுக்கிடல் என்பது startled என்று கூறுவதாயினும், திடீரென்று விழுவது போன்ற உணர்வையும் குறிக்கும் சொல் திடுக்கம் என்று கொள்ளலாம். இதே போல வேறு ஒரு நரம்பியக்க விளைவால், விழித்திருக்கும் பொழுதும் சிலருக்கு ஒரு சிறு நடுக்கம் தோன்றும். இதற்கான தமிழ்ப்பெயரும் ஆங்கிலப்பெயரும் நினைவுக்கு வர மறுக்கின்றது, இப்பொழுது! :) நினைவில் பட்டால் தெரிவிக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 14:22, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நான் மேலே கூறியது ஒரு வகையான Myoclonus என்னும் நரம்பதிர்ப்பு. தலையோ, கை கால்களோ, தோளோ சிறு சிலிர்ப்பு கொள்ளும். இதனை நாம் சிலிர்ப்பு என்றே கூறலாம். நடுக்கு என்றும் சொல்வார்கள் என்று நினைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:28, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
சுந்தர் நல்ல தலைப்பாகவே எனக்கும் படுகின்றது. தமிழில் "தூங்கிக்கொன்டிருந்த பொழுது திடீரெனெ தூக்கிப் போட்டது" என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். தூக்கிப்போடுதல், தூக்கிவாரிப் போடுதல் என்பனவும் தொடர்பான சொல்லாடல்கள். பல சூழல்களில் இச்சொல்லாடல்களின் பொருள்கள் சிறிதுசிறிது மாறுபடலாம். ஆனால் இவையும் திடுக்கிடுதல் என்னும் கருத்து பற்றியது என்பதால் குறிப்பிடுகின்றேன். --செல்வா (பேச்சு) 16:19, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
அண்மையில் மலையால எழுத்துகளைப் படித்தேன். மலையாள விக்கியில், தமிழுக்கு തമിഴ് என்று எழுதப்பட்டிருந்ததே? இது tamizh என்பதன் எழுத்துப்பெயர்ப்பு போல் உள்ளதே!.இதை தட்டச்சிட்டாலும், തംഇഴ് என்று தானே வருகிறது. மலையாளத்தில் தமிழைக் குறிக்க என்ன சொல் பயன்படுத்தினார்கள் என்று கூறி விளக்குங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:46, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
തമിഴ് என்பதன் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு "தமிழ்". சரியாகத்தானே உள்ளது? இங்கு எழுதியிருப்பது சரியே. மலையாளத்தில் எழுதபப்டுவதைத் தமிழ் எழுத்துகளில் படிக்க, "வினோத்" என்பவர் ஆக்கிய அட்சரமுக என்னும் கருவியைப் பயன்படுத்தலாம். பிற இந்திய மொழி எழுத்துகளையும் ஒரு மொழியில் இருந்து வேறொரு மொழி எழுத்துகளில் படிக்க உதவும் பயனுடைய கருவி. --செல்வா (பேச்சு) 16:06, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
ஆனால், என் எஹ்ச் எம் ரைடரில் தட்டச்சிட்ட போது மேலுள்ளவாறே தோன்றியது. ஒரு வேளை நான் தவறாக அடித்திருக்கக் கூடும். தங்கள் தயவால் எனக்கு ஒரு கருவி கிட்டியது! மேலும் ஒரு ஐயம், ஒருங்குறியில் தமிழ் பிராமி எழுத்துகளையும், கிரந்தத்தையும் கொண்டு தமிழ் வரிசைகளை உருவாக்க யாரேனும் முயன்றுள்ளார்களா? (தொடர்பற்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.) நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:19, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
பிராமி எழுத்துகளுக்கு ஒருங்குறியில் குறிப்புள்ளிகள் (codepoints) வழங்கப்பட்டுள்ளன (பார்க்கவும்.. தமிழ்-பிராமி என்பதைப் பிராமியின் கிளை என்று கருதுகிறார்கள் (அப்படியில்லை, தமிழ்ப்பிராமி எனப்படும் எழுத்துகளானவை பிராமிக்கு முந்தையது என்றும் சிலர் கூறுகின்றார்கள். இது பற்றிய தெளிவான முடிவு இன்னும் எட்டவில்லை என்பதே நான் புரிந்துகொண்டுள்ளது. அசோகன் காலத்தும் முற்பட்ட "தமிழ்பிராமி" போன்ற எழுத்துகள் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்டது உண்மை. பிராமியின் மிகப்பழமையான பதிவு அசோகன் கல்வெட்டு என்றே நம்பி வந்தனர்). போன ஆண்டு (2011 சூலை) கிரந்ததத்தை ஒருங்குறியில் ஏற்ற இந்தியக் கூட்டரசு ஒருங்குறி நிறுவனத்துக்கு விண்ணப்பித்தது (இந்தஆவணத்தைப் பாருங்கள்.)--செல்வா (பேச்சு) 17:41, 12 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
செந்தி, என் கருத்துகளை அப்பக்கங்களில் இட்டிருக்கின்றேன். பொருந்துமா எனப் பாருங்கள். இயல்பு மீறிய முடிமிகைப்பு என்பதை முரண் முடிமிகைப்பு என்றும் கூறலாம். பிற கருத்துகளுக்கு அவ்வப் பக்கங்களைப் பார்க்கவும்.--செல்வா (பேச்சு) 14:28, 13 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
உங்கள் வலைப்பூவினைப் படித்தேன். பிற கிரந்தம், தமிழ்ச் சொல்லாக்கங்கள் குறித்தும் படித்தேன். புதுமைகளைக் கண்டு வியந்தேன். நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பல சிறந்த சொற்களை/ஆக்கங்களை வழங்கியுள்ளீர்கள். நன்றி! இனி ஒரு சாமனியனாக, பொதுவாக மக்கள் இணையத்தில் தமிழ் உள்ளது என்பதையே அறியாமல் உள்ளார்கள். அதிலும், அறிந்த சிலர் இணையத்தில் உலாவும்போது, நற்றமிழில் எழுதுகிறீர்கள் (தவறு என்று கூறவில்லை, தவறும் அல்ல, இது குறித்து கூறும் தகுதியும் எனக்கில்லை.). புதிதாகப் படிப்பவர்களுக்கு ஒன்றுமே புரியாது. அதற்காக, அரைகுறைத் தமிழில் எழுதவும் முடியாது. நான் கூற வருவது என்னவென்றால், தமிழை வெகு விரைவில் முன்னேற்றிச் செல்கிறீர்களே! ஆனால், நாங்கள் உங்கள் அளவுக்கு ஈடுகொடுத்து இத்தமிழை ஏற்றுக் கொண்டு வளர முடியாமல் உள்ளோமே! இதை அறிய போதிய ஊடக வசதியோ/ இன்ன பிற வசதிகளோ இல்லையே! என் ஆதங்கத்திற்கு பதிலளிக்குமாறு வேண்டுகிறேன். மேலும் பலவற்றை உங்களிடம் அறிய விரும்புகிறேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்குக. நன்றி! --~~~~
மேலேயுள்ள கருத்தை இட்ட பயனர் யாரெனத் தெரியவில்லை. <!-- என்ற அடையாள ஒட்டைப் பயன்படுத்தியிருக்கிறார். அதனால் அவரது கையொப்பமும் விழவில்லை. கீழே தமிழ்க்குரிசிலின் கருத்தும் மறைக்கப்பட்டிருந்தது. இக்கருத்தைத்தமிழ்க்குரிசில் தவறுதலாக அழித்து விட்டார். ஆகவே, மேற்கூறிய அடையாள ஒட்டை நீக்கி மீண்டும் அக்கருத்தை இட்டிருக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:41, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
கருத்துகளுக்கு நன்றி. உங்கள் நன்மொழிகளுக்கும் நன்றி. எங்காவது கடினமாக இருந்தால் கட்டாயம் எளிதாக்கலாம். எப்படி என்று பேச்சுப்பக்கத்தில் கூறுங்கள், திருத்திக்கொள்ளலாம். பொதுவாகத் தமிழ் மொழியில் இரட்டை வழக்கு இருப்பதாகச் சொல்வார்கள் (பேச்சு மொழி, எழுத்து மொழி என்று இரண்டு வழக்கு). இது எல்லா மொழிகளிலும் உண்டு. ஆனால் வெவ்வேறான அளவில் இருக்கும் (கிரேக்கம், அரபி, தமிழ் போன்ற நெடிய வரலாறு உள்ள மொழிகளில் கொஞ்சம் அதிகமாக இருக்கும் - இந்த இரட்டை வழக்கை ஆங்கிலத்தில் டைகுளோசியா (diglossia) என்பார்கள்). சீரியதாக ஒன்றைப்பற்றி எழுதும்பொழுது, சொல்லவந்த கருத்து துல்லியமாக இருக்க வேண்டும் என்பதாலும், சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதாலும், எழுதும்பொழுது சில இடங்களில் "கடினமாக" சிலருக்கு இருக்கலாம். எழுத்து நடை கொஞ்சம் வேறுபாடாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் (என்னன்னா), பேச்சு மொழி இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது (மாறுது), ஒவ்வொரு தமிழ் பேசும் குழுவினரும் ஒரு மாதிரிப் பேசுகின்றார்கள், எனவே பொதுத்தமிழில், அதுவும் கட்டுரைக்கான உரைநடைத் தமிழில் எழுதும் பொழுது கொஞ்சம் வேறுபாடாகத் தெரியுது. (தெரியுது என்பதை தெரிகின்றது என்று முழுமையாக எழுதுகின்றோம் (எழுதறோம் என்று சொல்வதில்லை). இப்படி எல்லா மொழியிலும் உண்டு. எளிது என்னும் சொல்லை சுளுவா, "ஈசியா" என்று கொச்சையாகவோ (அதாவது திருந்தாத பேச்சாகவோ) தமிங்கிலமாகவோ எழுத முடியாது. பள்ளியிலே எட்டாவது பத்தாவது வகுப்பில் படிக்கும் மாணவனோ, மாணவியோ புரிந்துகொள்ளுமாறு இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல "அரைகுறைத் தமிழில் எழுதவும் முடியாது.". நான் உங்கள் கேள்விக்கு விடை தந்தேனா இல்லையா என்ரு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.--செல்வா (பேச்சு) 04:53, 24 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
தங்கள் விருப்பத்தேர்வுகளில், கையொப்பத்தில் தங்கள் பெயரை செல்வர எனத் தவறாக இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். தங்கள் கையொப்பத்தை இங்கே பார்த்துவிட்டு கூறுகிறேன். செல்வர என சிவப்பு இணைப்பாகத் தோன்றுகிறது.’
என் சொற்றொடர்களில் பிழை மிகுந்திருப்பதை அறிவேன். அவ்வப்போது என் தொகுத்தல்களை சரிபார்த்து, தங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறும், பிழைகளைத் திருத்துமாறும் வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:36, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
கையொப்பத்தில் சரியாகவே இருக்கும் என நினைக்கின்றேன். யாரோ ஒரு பயனர் தவறுதலாகக் கையொப்ப இணைப்பில் திருத்தஞ்செய்ததாலேயே சிவப்பு இணைப்பாகத் தோன்றியுள்ளது. மற்றும் மேலேயிருந்த கருத்தைத் தவறுதலாக அழித்துள்ளீர்கள் என நினைக்கின்றேன் தமிழ்க்குரிசில் (மேலே பார்க்கவும்.). --மதனாகரன் (பேச்சு) 12:45, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தற்போது நிலவும் சீதோஷண நிலமையாகும். நீண்ட காலத்திற்கு ஒரு பிரதேசத்தில் காணப்பட்ட வானிலை அம்சங்களின் தொகுப்பே காலநிலை எனப்படும். இப்பதங்களே இலங்கையில் காலம்காலமாகப் பயன்படுத்துகின்றோம். அத்துடன் காலநிலை வெப்பநிலையால் மாத்திரம் நிர்ணயிக்கப்படுவதல்ல. ஈரப்பதம், ஒளிச்செறிவு போன்ற காரணிகளும் உண்டு. எனவே இக்கட்டுரையின் தலைப்பை காலநிலை என்று மாற்றுவதே சிறந்தது.−முன்நிற்கும் கருத்து G.Kiruthikan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
http://ta.wikipedia.org/s/tml என்னும் பக்கத்தில் மயூரநாதன் கூறுயுள்ளவாறு சில வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் தட்பவெட்பநிலை என்னும் இன்னொரு சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. இவற்றுக்கான பக்கத்தில் உரையாடி சரியான வரையறைகளை எடுத்தாளலாம். வேறு ஓர் இடத்தில் வானிலை-காலநிலை பற்றிய விரிவான கருத்தாடல் ஒன்று நிகழ்ந்துள்ளது, எங்கு என்று நினைவில்லை. எல்லோருக்கும் காலநிலை என்பதே சரியான சொல் என்று தோன்றினால் அதனையே பயன்படுத்தலாம். --செல்வா (பேச்சு) 22:24, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம். பருநடு நீளுருண்டை, இளைநடு நீளுருண்டை கட்டுரைகள் குறித்த உரையாடல் இது. நீளுருண்டையின் சிறப்பு வகையான, spheroid-கோளவுரு எனவும் அதில் prolate spheroid-நெட்டைக் கோளவுரு; oblate spheroid-தட்டை நீளுருண்டை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையைத் தொடங்கியது நான்தான். இரு கட்டுரைகளும் இருவிதமாகப் பெயர்கள் தருகின்றன. ஒன்றாக மாற்றலாமா, (அவ்வாறு மாற்றினால் இரண்டில் எதைப் பொருத்தமானதாகக் கொள்வது) அல்லது மாற்றுப் பெயராகத் தரலாமா என்பது குறித்து உங்களது கருத்தைத் தெரிவிக்கவும்.நன்றி.--Booradleyp (பேச்சு) 16:13, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஓ! நன்றி. நான் கோளவுரு கட்டுரையைப் பார்க்கவில்லை! நீளுருண்டை அல்லது நீளுண்டை என்பது பெயரில் ஒரு பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தட்டை நீளுண்டை, நெட்டை நீளுண்டை (அல்லது தட்டை நீளுருண்டை, நெட்டை நீளுருண்டை) என்று சொல்லலாம், எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் இந்த equitorial என்னும் சொல்லின் பயன்பாடு பல இடங்களில் தேவையாக இருப்பதாலேயே பருநடு, இளைநடு (மெலிநடு) என்னும் சொல்லாட்சியைத் தேர்ந்தேன், ஆனால் தட்டை, நெட்டை என்பன மிக அருமையான எளிய சொற்கள். அவற்றை முதன்மைப்படுத்துவதே நல்லது. ஆனால் கோளவுரு (கோளுரு) என்பதைவிட நீளுண்டை/நீளுருண்டை என்று இருப்பது நல்லது என்பது என் தனிக்கருத்து. --செல்வா (பேச்சு) 16:42, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆனால் மூன்று அச்சுகளில் இரண்டு சமமாக இருக்கும் நீளுருண்டை spheroid என்ற பெயரில் அழைக்கப்படுகிறதே. எனக்கும் spheroid -கோளவுரு என்ற பெயரில் இணக்கம் இல்லை. ஏனென்றால் அது கோளத்துக்கும் கோளவுருக்கும் இடையே குழப்பம் ஏற்படுத்துகிறது. spheroid என்பதற்கு கோளவுரு என்றில்லாமல் நீளுருண்டை எனச் சேர்ந்து வருமாறு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்து? நன்றி.--Booradleyp (பேச்சு) 16:55, 19 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம் செல்வா அவர்களே! வேற்று மொழிச் பெயர்ச் சொற்களைத் தமிழாக்குவது எப்படி என்பது என் போன்ற பலருக்குப் புரிவதில்லை.
நான் இங்கு வந்த புதிதில் பிரித்தானியா என்பதை பிஸ்கட் என்று நினைத்துவிட்டேன். பின்னரே, பிரிட்டன் என்பதை அறிய நேர்ந்தது. பின்னரே, ட் -> த் ஆக்கப்பட்டது என ஊகித்தேன். அது போன்றே, எசுப்பானியம் என்பது என்னவென்றே விளங்கவில்லை. ஸ்பானிஷ்க்கும் இதற்கும் தொடர்பில்லையென்பதால் விளங்கவில்லை பின்னரே மூலப் பெயரை பயன்படுத்தியுள்ளதை படித்தறிந்தேன் இவற்றை புதியவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் அறிந்து கொள்ளும்வகையில், தமிழாக்கம் செய்வது எப்படி என்பது குறித்த விக்கிநூலொன்றை, எடுத்துக்காட்டுடன் விளக்கி கட்டாயம் எழுதுமாறு வேண்டுகிறேன். நாங்களும்
சரியானவற்றை அறிந்து பயனுறுவோம். அப்படியே தமிழின் பொதுவான அடிப்படை விதிகளையும் எளிமையாக்கி எழுதுமாறும் வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:09, 21 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில், கருத்துக்கு மிக்க நன்றி, விடை பகர நேர்ந்த காலத்தாழ்ச்சிக்கு வருந்துகின்றேன். இவற்றைத் தொகுத்து எழுதவேண்டும் என்று பலகாலமாக நினைத்திருந்தேன் எனினும் இன்னும் தக்க நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. உங்கள் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும் எஅன்றி. மதன், விக்கிநூலின் தொகுப்பு விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்திலேயே உள்ளது (கீழே கடைசிப் பகுதியில் உள்ளது). இங்கே பாருங்கள் --செல்வா (பேச்சு) 16:27, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
விருப்பம் சில மாதங்களுக்கு முன்னர் இலண்டனில் புகையிரதப் பொகுவரத்துச் சீட்டு தமிழில் கிடைப்பதாக அறிந்தேன். :)
இலங்கையில் நற்சொற்கள் பல பயன்பாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் இவற்றை புரிந்து கொள்பவர்கள் மிகக் குறைவே . ஆகவே, இச்சொற்களை பரவலாகக் கையாண்டு, தாய்மொழியின் நலம் கருதி, சொற்களை சரியான முறையில்தான் எழுத வேண்டும் (பிரித்தானிய, பிரிட்டிஷ் அல்ல) என்பதையும், அவசியத்தையும் முன்னுரையில் சேர்த்தீர்களானால் நலம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:00, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
பிரித்தானிய என்பது இலங்கையில் மட்டும் அன்று தமிழ்நாட்டிலும் பரவவாக இருந்த (இன்றும் பல இடங்களில் இருக்கும்) "சரியான" வழக்கு. (ஏன் சரியான வழக்கு என்பதைப் பற்றியும் எழுத வேண்டும்). ஆங்கிலேயன் French என்றால் ஏதோ பகல் உணவு "லஞ்ச்சு" போல நாமும் பிரெஞ்ச்சு என்றும், Italian, Latvian, German என்றால் இட்டாலியன் (இத்தாலியன்), "லாட்வியன்", "ஜெர்மன்" என்றும் (-அன் பின்னொட்டு இட்டு எழுத வேண்டும் என்றும்), Polish, Spanish, Danish என்றால் ஆங்கிலேயரைப் பின்பற்றியே பின்னொட்டுகள் -இஷ் இட்டு எழுத வேண்டும் என்றும் நினைப்பதும் ஒரு பொருந்தாமை. ஒவ்வொரு மொழியையும் அவரவர்கள் மொழியில் அவரவர்களுக்கு உகந்தவாறே எழுதுகின்றார்கள். ஒரே மாதிரி ஒரு மொழி எல்லா மொழிகளில் வழங்கப்படுவதும் இல்லை. இதே போலவே நாடுகளில் பெயரும், நகரங்களின் பெயரும், பிற பல பெயர்களும். --செல்வா (பேச்சு) 16:27, 30 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
செல்வா, சற்றுநேரம் முன்பு தவறுதலாக முன்னிலைப்படுத்தும் இணைப்பைச் சொடுக்கியதால் உங்கள் மாற்றத்தை நீக்கிவிட்டேன். தவறாகக் கொள்ள வேண்டாம். மீண்டும் சரிசெய்துள்ளேன். -- சுந்தர்\பேச்சு09:19, 12 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
trilinear coordinates என்பதை முக்கோட்டு ஆள்கூறு எனலாம் (ஒரு புள்ளியில் இருந்து ஒரு முக்கோணத்தின் பக்கங்களுக்கான தொலைவுக்கு ஏற்றபடி (விகிதப்படி) உள்ள, சீர்வரிசையாக அமைந்த மூன்று எண்கள் என்பார்கள்). ஒரு முக்கோணத்தின் முனை ஒன்றில் இருந்து அம்முக்கோணத்துக்குள் உள்ள ஒரு புள்ளி வழியாகச் சென்று எதிர்ப்பக்கத்தில் முட்டும் கோட்டை செவாக்கோடு (cevian) என்று கொள்ளலாம். இப்படி P என்னும் புள்ளி வழியே செல்லும் செவாக்கோடுகள் ஏதிர்ப்பக்கத்தில் முட்டும் அல்லவா? அப்படி முட்டும் புள்ளிகள் எவ்வாறு எதிர்ப்பக்கங்களை பகுக்கின்றனவோ அதே விகிதத்தில் அப்பக்கத்தின் மற்ற முனையில் இருந்து புள்ளிகளை கணக்கிட்டு, அம்முக்கோண முனைகளில் இருந்து இப்புள்ளிகளில் முடியும்படி விழுகோடுகள் அல்லது செவாக்கோடுகளை வரைந்தால் அவை கூடும் இடத்தைக் Q என்றும் குறித்தால், இந்தக் Q என்பது P என்னும் புள்ளிவழி பாயும் செவாக்கோடுகள் (விழுகோடுகள்) பகுக்கும் அதே விகிதத்தில் பகுக்கும். எனவே ஒரேவிகிதத்தில் பகுக்கும் பிணைப் புள்ளி என்பதால் isotomic conjugate என்பதை ஒரேவிகிதப் பகுப்புப் பிணை என்று கூறலாம் அல்லது ஒரேபகுபிணை என்று கூறலாம் என்று நினைக்கின்றேன். விடை பகர நேர்ந்த காலத்தாழ்ச்சிக்கு வருந்துகிறேன். இதில் விழுகோடுகள் முட்டும் புள்ளிகள் முக்கோணத்தின் நடுப்புள்ளியில் இருந்து ஒரே தொலைவு இருக்கும். படத்துடன் விளக்கினால் எளிதாகப் புரியும். --செல்வா (பேச்சு) 12:01, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.
செல்வா, தொடக்க கால தமிழ் இணையத்தை அறிந்தவர் என்ற வகையில் அந்த தொடக்க கால வலைத்தளங்கள் எப்படிப் பாதுகாக்கப்படாமல் இப்போது இல்லாமல் போய் விட்டன என்பது பற்றி ஒர் ஆய்வைத் தரலாம். ஒரு பரிந்துரையே, நீங்கள் விரும்பிய ஒரு தலைப்பில் மாநாட்டுக் கருப்பொருளோடு தரலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:56, 26 திசம்பர் 2012 (UTC)
--Booradleyp (பேச்சு) 05:13, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:23, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]
செல்வா, பண்பாட்டு வளர்ச்சி, காப்பு, பயிற்சி குறித்த பரந்த வரலாற்றுப் பார்வையுடையவர், ஆசிரியர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:30, 25 பெப்ரவரி 2013 (UTC)
வணக்கம். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது - உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பார்க்கவும்! நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!