பதாவுன்

ஆள்கூறுகள்: 28°03′N 79°07′E / 28.05°N 79.12°E / 28.05; 79.12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதாவுன்
City
பாமாசா சௌக், பதாவுன்
பாமாசா சௌக், பதாவுன்
பதாவுன் is located in உத்தரப் பிரதேசம்
பதாவுன்
பதாவுன்
உத்தரப் பிரதேசத்தில் பதாவுனின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°03′N 79°07′E / 28.05°N 79.12°E / 28.05; 79.12
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
பிராந்தியம்ரோகில்கண்ட்
பிரிவுபராலி
மாவட்டம்பதாவுன்
குடியேற்றம்பொ.ஊ 905 (நவீன நகரம்), கி.பி. 220 (பழைய நகரம்)
பெயர்ச்சூட்டுஇளவரசர் புத்தர்
அரசு
 • நிர்வாகம்பதாவுன் நகராட்சி நிர்வாகம்
 • தலைவர்பாத்திமா ரசா
 • நாடளுமன்ற உறுப்பினர்சங்கமித்ர மௌரியா
 • சட்டமன்ற உறுப்பினமகேசு சந்திர குப்தா
பரப்பளவு
 • மொத்தம்81 km2 (31 sq mi)
ஏற்றம்
164 m (538 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,59,221
 • தரவரிசை17
 • அடர்த்தி5,489/km2 (14,220/sq mi)
இனம்பதாயுனி
மொழிகள்
 • அலுவல்இந்தி, உருது, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
243601
தொலைபேசி இணைப்புக் குறியீடு05832
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுஉபி-24
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
பாலின விகிதம்907 பெண்கள்/1000 ஆண்கள்
கல்வியறிவு73.00%
நிர்வாகம்பதாவுன் மேம்பாட்டு ஆணையம்
அரசுஉத்தரப் பிரதேச அரசு
இந்திய அரசு
தட்ப வெப்ப நிலைஇந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென்)
மழைப்பொழிவு843 மில்லிமீட்டர்கள் (33.2 அங்)
சராசரி ஆண்டு வெப்பநிலை27.5 °C (81.5 °F)
சராசரி கோடை வெப்பநிலை39.8 °C (103.6 °F)
சராசரி குளிகால வெப்பநிலை11.5 °C (52.7 °F)
இணையதளம்www.badaun.nic.in
'புனிதர்களின் நகரம்' அல்லது 'மதீனத் உல் அவ்லியா' என்றும் 'மெந்தா நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இது வெற்றிலை பீடாக்களுக்கு பிரபலமானது.

பதாவுன் (Budaun) என்பது இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் உள்ளது.[1][2] இது சோட் நதிக்கு கிழக்கே ஒரு மைல் தொலைவிலும், கங்கைக்கு வடக்கே 27 கிமீ தொலைவிலும், உத்தரபிரதேசத்தின் ரோகில்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது 159,221 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. தற்போது 161,555 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.[4] இங்கு இசுலாமிய மக்களும், இந்துக்களும் வாழ்கின்றனர். சாலைப் போக்குவரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு தொடருந்து நிலையமும் உள்ளது. இங்கு அதிகளவிலான பள்ளிவாசல்கள் உள்ளன. வேளாண்மை முதன்மைத் தொழிலாக உள்ளது. பரேய்லி நகரம் இதன் அருகிலுள்ளது. உள்ளூர் அளவில் சிறு தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. இது பரேய்லி கோட்டத்திற்கு உட்பட்டது.

சுல்தான் இல்த்துத்மிசு ஆட்சியின் போது பொ.ஊ 1210 முதல் 1214 வரை நான்கு ஆண்டுகள் தில்லி சுல்தானகத்தின் தலைநகராக பதாவுன் வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது முகலாய ஆட்சியின் போது வடக்கு எல்லையில் மிக முக்கியமான நகரமாக இருந்தது. பதாவுன் ஒரு பெரிய சந்தையாகவும் வரலாற்றுப் புகழ்பெற்ற மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் இருந்துள்ளது. புது தில்லியிலிருந்து தென்கிழக்கே 230 கிமீ தொலைவிலும், இலக்னோவிலிருந்து வடமேற்கே 245 கிமீ தொலைவிலும் உள்ளது. இவை இரண்டையும்ம் சாலை வழியாக அடைய சுமார் 6 மணிநேரம் ஆகும்.[5]

இல்த்துத்மிசு கட்டிய பழைய பள்ளி வாச்லும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது. இசுலாமிய அரசர்கள் கட்டிய கோட்டைகளும் இங்குள்ளன.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  2. "Untitled Page".
  3. "Nic Budaun Welcomes You". Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  4. World Population Review. "Population of Cities in India 2023".
  5. "Distance between New Delhi and Badaun, New Delhi to Badaun Distance".
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பதாவுன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாவுன்&oldid=3969967" இலிருந்து மீள்விக்கப்பட்டது