உள்ளடக்கத்துக்குச் செல்

நார்வார் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்வார் கோட்டை

நார்வார் கோட்டை (Narwar Fort) என்பது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி மாவட்டத்தில் நார்வாரில்[1] மலை உச்சியில் அமைந்த கோட்டை ஆகும். இது தரை மட்டத்திலிருந்து 500 அடி உயரத்திலும், எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் அமைந்துள்ளது. இது விந்திய மலைத் தொடரில் அமைந்துள்ளது. இக்கோட்டையினை காச்வாக ராஜ்புத் வம்சத்தினர் கட்டியதாகவும் சீரமைத்தகாவும் கூறப்படுகிறது. இவர்கள் 10ஆம் நூற்றாண்டில் நர்வார் பகுதியினை ஆக்கிரமித்தனர். காச்வாகா ராஜ்புத், பிரத்கரா ராஜ்புத், குவாலியரின் தோமர்கள் நார்வார் கோட்டையினை 12ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாகக் கைப்பற்றினர். 14ஆம் நூற்றாண்டில் மால்வா சுல்தானகத்தினர் இக்கோட்டையினைக் கைப்பற்றினர். 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜாலா தலைவர்களால் இக்கோட்டைக் கைப்பற்றப்பட்டு ஜாகலா ஆட்சியாளர்களிடம் இருந்தது. இது பின்னர் பிரித்தானிய அரசின் கீழ் செயல்பட்ட சமசுதானமாக மாறியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்வார்_கோட்டை&oldid=4110167" இலிருந்து மீள்விக்கப்பட்டது