உள்ளடக்கத்துக்குச் செல்

நத்தம் கணவாய் புரட்சி

ஆள்கூறுகள்: 23°48′N 88°15′E / 23.80°N 88.25°E / 23.80; 88.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நத்தம் கணவாய் புரட்சி
இடம் {{{place}}}
இழப்புகள்
மாண்டவர் - 970
எண்ணிக்கை தெரியவில்லை 

நத்தம் கணவாய் போர், என்பது கி.பி. 1755-ல் ஆங்கிலேயர் படை தமிழகத்தில் முதன் முதலாக மிகப் பெரிய உயிரிழப்பை சந்தித்த ஒரு யுத்தம் ஆகும்.[1]

பின்புலம்

[தொகு]

கி.பி.1755-ல் பெப்ரவரி மாதம் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக மதுரை மாவட்டம், நத்தம் கணவாய் பகுதியில் நடந்த சண்டையில் 1000 ஆங்கிலேய படையினர் ஈடுபட்டனர், அதில் 970 பேர் கொல்லப்பட்டனர்.[2]

கி.பி. 1752-ல் மதுரை நிர்வாகப் பொறுப்பு மியான் என்பவரிடம் இருந்தது. அப்போதுதான் ஆற்காடு நவாப்புகளுக்காக களத்துக்கு ஆங்கிலேய படைகள் வந்திருந்தன. கி.பி. 1755-ல் நவாப்பிற்கு  வரிவசூல் செய்யவந்த ஆங்கில தளபதி கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) மற்றும் கான் சாகிப், மதுரையில் உள்ள கோவில்குடி என்கிற இடத்தில் கள்ளர்கள் வணங்கக்கூடிய சாமி சிலையை எடுத்து சென்றார்கள். திருநெல்வேலி பகுதியில் வரி வசூல் செய்கிறார்கள், அங்கே நெற்கட்டான் செவ்வலில் பூலித்தேவரிடம் வரி வசூல் செய்யமுடியாமல் மதுரை திரும்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு பிரிவு படையினர் மதுரையில் இருந்து திருச்சி செல்வதற்க்காக ஜமால் சாகிப் என்பவர் தலைமையில் 1000 சிப்பாய்களும் சென்றார்கள்.[3] இதனிடையே கோவில்குடியில் தங்களது குலதெய்வ சிலைகளை கொள்ளையடித்துவிட்டு போன கர்னல் ஹெரானை வீழ்த்துவதற்காக கள்ளர் நாடுகளின் கள்ளர்கள் ஒருங்கிணைந்து திட்டம் தீட்டி காத்திருந்தனர்.

நத்தம் கணவாய் சண்டை

[தொகு]

ஆங்கிலேய படைகளை வீழ்த்த கள்ளர்கள் தேர்ந்தெடுத்த இடம் நத்தம் கணவாய். மலைகளுக்கு நடுவே செல்லும் இந்த கணவாய் பாதை வழியாக திருச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தது ஆங்கிலேய படை. இருந்த போதும் மறவர்களின் தாக்குதல் திட்டங்களை உளவாளிகள் மூலம் ஆங்கிலேயர்கள் அறிந்து வைத்திருந்தனர். இது தொடர்பாக கர்னல் ஹெரானுக்கும் எச்சரிக்கை ஓலை அனுப்பப்பட்டது.

கர்னல் ஹெரான் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து தமது ஆங்கிலேய படைகளை சிறு சிறு குழுக்களாக பிரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் நத்தம் கணவாய் பகுதி வழியாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். கர்னல் ஹெரான் எதிர்பார்த்தபடி எந்த ஒரு தாக்குதலும் கள்ளர்கள் தரப்பில் இருந்து நடத்தப்படவில்லை. ஆனால் கணவாயின் இருபக்கமும் பதுங்கி இருந்த கள்ளர் சேனை தாக்குவதற்கு காத்துக் கொண்டிருந்தது. ஆங்கிலேய படை ஒவ்வொன்றையும் முன்னேறவிட்டு பின்னால் வந்த படையை வழிமறித்து தாக்கியது. தமிழர் நிலத்தின் ஆகப் பெரும் ஆயுதங்கள் அத்தனையையும் அன்று கள்ளர் சேனை பயன்படுத்தியது. கள்ளர் சேனையின் நோக்கமான கோவில்குடி குலதெய்வ சிலைகள் ஹெரானின் படையிடம் இருந்து மீட்கப்பட்டன.

செர்ஜியண்ட கௌல்ட் என்பவர் தலைமையில் சென்றவர்கள் அனைவரும் கள்ளர் படையினர்களால் நத்தம் பகுதியில் கொல்லப்பட்டதால், கர்னல் ஹெரான் படையினரை நான்கு பகுதியாக பிரித்து வழிநடத்தினார்.[4] 

28 மே 1755 ல் ஆங்கிலேய  படையினர் சென்றவழிகளில் மரங்களை வெட்டிப்போட்டு, பாதையை சிறியதாக மாற்றி கள்ளர் படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். ஆங்கிலேய  படையினர் துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர். கள்ளர்கள் தங்களது சாமி சிலைகளை மீட்ட பின்பு பலரையும் கொன்றனர், சிப்பாய்களில் வெறும் 30 பேர் மட்டுமே உயிர்தப்பினர்.[4]

கேப்டன் ஜோசப்பும், கர்னல் ஹெரானும் மீதம் இருந்த வீரர்களுடன், திருச்சி சென்றனர். இந்த சண்டையில் கள்ளர் படையினர் வெற்றி பெற்றனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நத்தம் கணவாய் யுத்தம் பாட புத்தகங்களில் ஏறுமா?". Oneindia. 2021-01-21. https://tamil.oneindia.com/republic-day-history-of-1755-natam-pass-battle-cs-409508.html. பார்த்த நாள்: 2022 -01 -29. 
  2. "நத்தம் கணவாய் யுத்தம்". Oneindia. 2021-08-12. 
  3. South Indian Rebellion: the First War of Independence, 1800-1801. 1971. pp. 36, 37.
  4. 4.0 4.1 A Political and General History of the District of Tinnevelly, in the Presidency of Madras. 1801. p. 93.
  5. Yusuf Khan: The Rebel Commandant. 1971. pp. 40, 153.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தம்_கணவாய்_புரட்சி&oldid=4122066" இலிருந்து மீள்விக்கப்பட்டது