உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்காசிய முஸ்லிம் தேசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய முஸ்லிம் தேசியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெற்காசியாவில் முஸ்லிம் தேசியம் என்று தெற்கு ஆசியாவின் முஸ்லிம்களால் இசுலாமியக் கொள்கைகளையும் அடையாளத்தையும் முன்னிலைப் படுத்தி வெளிப்பட்ட அரசியல் மற்றும் பண்பாட்டு தேசிய இயக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தெற்காசியாவில் நிலவிய பல்வேறு இசுலாமியப் பேரரசுகளின் தாக்கத்தில் துவங்கிய இத்தேசிய உணர்வு இருபதாம் நூற்றாண்டிலும் இருபத்தியோராம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த நிகழ்வுகளால் வலுப்பட்டு இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளது.

வரலாற்றுப் பின்னணி

[தொகு]

வட இந்தியாவில் தில்லி சுல்தானகமும் முகலாயப் பேரரசும் ஆண்ட காலத்திலேயே முசுலிம் தேசிய சிந்தனைகள் வேரூன்றத் துவங்கின. வலிமை மிக்கதாக அமைந்திருந்த அவர்களின் படைகளாலும் மத்திய கிழக்கு, பெர்சியா மற்றும் நடுவண் ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த முசுலிம் மக்களாலும் இந்தியர்களிடையே இசுலாமிய சமயம் தழைத்தோங்கியது.

கருத்தாக்கப் பின்னணி

[தொகு]

முதல் இசுலாமிய எதிர்ப்பாக 1766இல் முசுலிம் மன்னன் திப்பு சுல்தானின் மைசூர் ஆயுதப் போராட்டம் அமைந்தது. இதுவே பிரித்தானிய ஆட்சிக்கெதிரான இந்திய விடுதலை இயக்கத்திற்கு செயலூக்கியாகவும் அமைந்தது. தொடர்ந்து முசுலிம் அறிஞர்களும் சீர்திருத்தவாதிகளுமான சையது அகமது கான், சையது அமீர அலி மற்றும் ஆகா கான் போன்றோர் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான இயக்கங்களில் முக்கிய பங்காற்றினர். முசுலிம்களுக்கானத் தனிநாடு மற்றும் பிரிவினைக்கானக் கருத்துகள் கவிஞரும் தத்துவவியலாளருமான சர் அல்லாமா முகமது இக்பால் மற்றும் அரசியல்வாதி சௌத்தரி ரகமது அலி போன்றோரால் உருவானது.