நதியா மாவட்டம்
நதியா மாவட்டம் নদিয়া জেলা | |
---|---|
![]() நதியாமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
தலைமையகம் | [[{{{HQ}}}]] |
பரப்பு | 3,927 km2 (1,516 sq mi) |

நதியா மாவட்டம் (Nadia district, வங்காள மொழி: নদিয়া জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக வங்காள தேசம் நாடு அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் கிருஷ்ணாநகர் ஆகும்.
மக்கட்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 51,68,488 ஆகும்.[1] இது அமெரிக்காவின் கொலராடோ மாகாண மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] மக்கட்தொகையின் அடிப்படையில் இது இந்தியாவின் 640 மாவட்டங்களில் 18 வது இடத்தில் உள்ளது.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1,316 பேர் ஆகும்.[1] மக்கட்தொகை பெருக்கம் 12.24 ஆகும்.[1] இம்மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் எனும் வீதத்தில் உள்ளனர்.[1] கல்வியறிவு 75.58% ஆகும்.[1]
வனவிலங்குகள் காப்பகம்
[தொகு]இம்மாவட்டத்தில் பேதுவாதாரி வனவிலங்குகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தின் பரப்பளவு 0.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[3]
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதளம் பரணிடப்பட்டது 2014-07-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 30 September 2011.
- ↑ "2010 Resident Population Data". U.S. Census Bureau. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. Retrieved 30 September 2011.
Colorado 5,029,196
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); line feed character in|quote=
at position 9 (help) - ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: West Bengal". Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. Retrieved 25 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)