தூலியன்
தூலியன் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°40′52″N 87°57′14″E / 24.681°N 87.954°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | முர்சிதாபாத் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தூலியன் நகராட்சி |
• கோட்டம் | மால்டா |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.25 km2 (2.41 sq mi) |
ஏற்றம் | 4 m (13 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,706 |
• அடர்த்தி | 15,000/km2 (40,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 742202 |
தொலைபேசி குறியீடு எண் | +91-3485 |
வாகனப் பதிவு | WB58, WB94 |
மக்களவைத் தொகுதி | மால்ட்டா தெற்கு |
சட்டமன்றத் தொகுதி | சம்செர்கஞ்ச் |
இணையதளம் | http://dhuliyanmunicipality.in |
murshidabad |
தூலியன் (Dhuliyan), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்த முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். தூலியன் நகரம் கங்கை ஆறு எனும் பத்மா ஆற்றின் கரையில் உள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான முர்சிதாபாத் நகரத்திற்கு வடமேற்கே 91.0 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு தெற்கே 298.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 19 வார்டுகளும், 16,545 வீடுகளும் கொண்ட தூலியன் நகரத்தின் மக்கள் தொகை 95,706 ஆகும். அதில் ஆண்கள் 47,635 மற்றும் பெண்கள் 48,071 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1009 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 18.47% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 63.03% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8897 மற்றும் 35 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 21.11%, இசுலாமியர் 78.19%, சமணர்கள் 0.53% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[2][3][4]
போக்குவரத்து
[தொகு]மேற்கு வங்காளத்தின் வடக்கில் உள்ள தல்கோலா நகரத்தையும், தெற்கில் வங்காள விரிகுடாவில் உள்ள பக்காளி கிராமத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 12 (பழைய எண் 34) தூலியன் நகரம் வழியாகச் செல்கிறது
கல்வி
[தொகு]- நூர் முகம்மது ஸ்மிருதி வித்தியாலயம்[5][6]
- கஞ்சன்தலா ஜெகத்பந்து வைர விழா கல்வி நிறுவினம் (நிறுவப்பட்ட ஆண்டு 1897)
-
தூலியன் அரண்மனை
-
தூலியன் அரண்மனை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dhuliyan Info". Archived from the original on 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
- ↑ Dhulian Population Census 2011
- ↑ Dhulian City Population - Murshidabad , West Bengal
- ↑ DHULIAN in Murshidabad (West Bengal)
- ↑ "Nur Mohammad Smriti Mahavidyalaya". NMSM. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
- ↑ "Nur Mohammad Smriti Mahavidyalaya". College Admission. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.