திருப்பூணித்துறை

ஆள்கூறுகள்: 9°57′10″N 76°20′19″E / 9.952767°N 76.338673°E / 9.952767; 76.338673
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்பூணித்துறை

തൃപ്പൂണിത്തുറ

—  நகரம்  —
திருப்புனித்துறை நகராட்சி ஓணம் போது ஒளியூட்டப்பட்ட நிலையில்
திருப்புனித்துறை நகராட்சி ஓணம் போது ஒளியூட்டப்பட்ட நிலையில்
திருப்பூணித்துறை
இருப்பிடம்: திருப்பூணித்துறை

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°57′10″N 76°20′19″E / 9.952767°N 76.338673°E / 9.952767; 76.338673
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் எர்ணாகுளம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி திருப்பூணித்துறை
மக்கள் தொகை 59,881 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


திருப்பூணித்துறை அல்லது திரிப்பூணித்துறா (ஆங்:Thripunithura, மலையாளம்: തൃപ്പൂണിത്തുറ) இந்திய மாநிலம் கேரளாவில் கொச்சி பெருநகர்ப் பகுதியில்[2] அமைந்துள்ள ஊராகும். இது இந்திய விடுதலைக்கு முன்னர் அமைந்திருந்த கொச்சி இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. அந்த மன்னர் பரம்பரையினர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மலை அரண்மனை கொச்சி மன்னரின் உறைவிடமாக இருந்தது. இங்குள்ள பூர்ணாத்திரேயசர் கோவிலில் உள்ள திருமால் சந்தானகோபாலன் வடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கருதப்படுவதால் குழந்தையில்லாதவர்கள் இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.

திருப்பூணித்துறை நகரம் இந்திய நாடாளுமன்றத்தில் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3]

பிரபல இசைக் கலைஞர்கள்[தொகு]

மிருதங்கக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணன், கடம் கலைஞர் திருப்பூணித்துறை இராதாகிருஷ்ணன் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.

திருப்பூணித்துறை துடுப்பாட்ட மன்றம்[தொகு]

திருப்பூணித்துறை கேரள துடுப்பாட்ட நிகழ்வுகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
  3. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-30. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பூணித்துறை&oldid=3993652" இலிருந்து மீள்விக்கப்பட்டது