உள்ளடக்கத்துக்குச் செல்

தார்மீக வட்ட விரிவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தார்மீக வட்ட விரிவாக்கம் (Moral circle expansion) என்பது நம்மால் தார்மீக முக்கியத்துவம் கொடுக்கப்படும் பொருட்கள் மற்றும் விடயங்களின் எண்ணிக்கையும் வகைகளும் காலப்போக்கில் அதிகரிப்பது ஆகும்.[1] தார்மீக உள்ளடக்கம் அல்லது உள்ளடக்கச் சேர்ப்பு பற்றிய பொதுவான சிந்தனைகள் பண்டைய காலத்திலிருந்தே மெய்யியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ள போதிலும், 19-ம் நூற்றாண்டிலிருந்து இச்சிந்தனை மனித உரிமை மற்றும் விலங்குரிமை தொடர்பான சமூக இயக்கங்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக விலங்குரிமை தொடர்பாக மெய்யியல் அறிஞர் பீட்டர் சிங்கர் 1970-களிலிருந்து இந்த விடயத்தைப் பற்றி எழுதி வந்துள்ளார். மேலும் 2017-ம் ஆண்டு முதல் 21-ம் நூற்றாண்டின் திறன்மிகு பரோபகார இயக்கத்தின் (effective altruism movement) ஒரு பகுதியாக விளங்கும் சிந்தனைக் குழுவான சென்டியன்ஸ் இன்ஸ்டிடியூட் செயற்பட்டு வந்துள்ளது. வளர்ந்து வரும் தார்மீகக் கருத்தியலில் ஒரு சீரான எல்லை இல்லாமை மற்றும் மக்களின் தார்மீக அணுகுமுறைகளுக்கும் அவர்களின் நடத்தைக்கும் இடையே காணப்படும் தொடர்பற்ற தன்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மனிதகுலம் உண்மையில் விரிவடையும் தார்மீக வட்டத்தைக் கொண்டிருக்கிறதா என்ற குறிப்பிடத்தக்க விவாதம் எழுந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இவற்றையும் காண்க

[தொகு]

தரவுகள்

[தொகு]
  1. Anthis, Jacy; Paez, Eze (2021). "Moral circle expansion: A promising strategy to impact the far future" (in English). Futures 130: 102756. doi:10.1016/j.futures.2021.102756. 

மேலும் படிக்க

[தொகு]