தந்த வர்த்தகம்

தந்த வர்த்தகம் (ஆங்கிலம்: Ivory trade) என்பது நீர்யானை, வால்ரஸ், நார்வால் எனப்படும் தந்தமூக்குத் திமிங்கிலம்,[1] கறுப்பு/வெள்ளை காண்டாமிருகம், மாமூத்[2] வகை விலங்குகளின் – குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகளின் – தந்தங்களின் வணிகரீதியான, அதிலும் பெரும்பாலும் சட்டவிரோதமான, வர்த்தகமாகும்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் வசிக்கும் மக்களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தந்தம் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக பல்வேறு வகையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. செதுக்கிய பின்னர் மிளிரும் வெண்மை நிறத்தில் இருப்பதால் தந்தம் முன்பு பியானோ கட்டைகள் முதற்கொண்டு பலவகையான அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1980-களில் பியானோ தொழிற்துறையானது தந்தத்திற்கு பதில் நெகிழி உள்ளிட்ட பிற பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கவே இத்துறைகளில் தந்தத்தின் பயன்பாடு இல்லாமல் போனது. மேலும், செயற்கை தந்தம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதுவே பியானோ விசைகளைத் தயாரிப்பதற்கான மாற்று பொருளாக பயன்படுத்தப்படத் துவங்கியது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ Lavers, Chris (2009). The Natural History of Unicorns. USA: William Morris. pp. 112–150. ISBN 978-0-06-087414-8.
- ↑ Kramer, Andrew E. (19 November 2008). "Trade in mammoth ivory, helped by global thaw, flourishes in Russia". The New York Times. https://www.nytimes.com/2008/03/25/world/europe/25iht-mammoth.4.11415717.html.