ஜெரமி பெந்தாம்
ஜெரமி பெந்தாம் | |
---|---|
![]() | |
பிறப்பு | இலண்டன், இங்கிலாந்து | 15 பெப்ரவரி 1748
இறப்பு | 6 சூன் 1832 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 84)
காலம் | 18 ஆம் நூற்றாண்டு 19 ஆம் நூற்றாண்டு |
பள்ளி | பயன் கருதுக் கோட்பாடு, ஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி, தாராண்மையியம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் மெய்யியல், சட்ட மெய்யியல், நன்னெறி, பொருளியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | பெருமமகிழ்ச்சிக் கோட்பாடு |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம் (Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்,[1][2] சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] இவர் மேலும் 'அரசியல் தந்திரங்கள் பற்றிய கட்டுரை', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
விலங்குரிமை
[தொகு]விலங்குரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் தனது காலகட்டத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஜெரமி பெந்தாம். ஒரு விலங்கின் நலத்தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போதெல்லாம் அங்கு தார்மீக ரீதியில் பொருத்தமாக அமைவது அவ்விலங்கின் பகுத்தறியும் திறன் அல்ல எனறும் மாறாக அது அவ்விலங்கின் துன்பத்தை அனுபவிக்கும் திறனேயாகும் என்று பெந்தாம் வலியுறுத்துகிறார்.[4]:309n தனது ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன் என்ற படைப்பில் பெந்தாம் இவ்வாறு கூறுகிறார்:[4]:309n
“ | அவைகளால் [விலங்குகளால்] சிந்திக்க முடியுமா? என்பதோ அவைகளால் பேச முடியுமா? என்பதோ இங்கு கேள்வி அல்ல, மாறாக அவைகளால் வலிக்கும் துன்பத்திற்கும் ஆட்பட முடியுமா? என்பதே கேள்வி. | ” |
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோளும் குறிப்புகளும்
[தொகு]
- ↑ Sunstein, Cass R. "Introduction: What are Animal Rights?", in Sunstein, Cass R. and Nussbaum, Martha (eds.). Animal rights. Oxford University Press, 2005, pp. 3–4.
- Francione, Gary. Animals—Property or Persons", in Sunstein and Nussbaum 2005, p. 139, footnote 78.
- Gruen, Lori. "The Moral Status of Animals", Stanford Encyclopedia of Philosophy, 1 July 2003.
- Benthall, Jonathan."Animal liberation and rights", Anthropology Today, volume 23, issue 2, April 2007, p. 1.
- ↑ Bentham, Jeremy. "Offences Against One's Self", first published in Journal of Homosexuality, v.3:4(1978), p.389-405; continued in v.4:1(1978).
- Also see Boralevi, Lea Campos. Bentham and the Oppressed. Walter de Gruyter, 1984, p. 37.
- ↑ Bentham, Jeremy (1776). A Fragment on Government. London., Preface (2nd para.).
- ↑ 4.0 4.1 Bentham, Jeremy. 1780. "Of the Limits of the Penal Branch of Jurisprudence." pp. 307–35 in An Introduction to the Principles of Morals and Legislation. London: T. Payne and Sons. "The question is not, Can they reason? nor, Can they talk? but, Can they suffer?"