தாமோதர் அகர்வால்
Appearance
தாமோதர் அகர்வால் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | சுபாசு பெகரியால் |
தொகுதி | பில்வாரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1955 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தாமோதர் அகர்வால் (Damodar Agarwal) என்பவர் இராசத்தானைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். அகர்வால் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இராசத்தான் மாநிலம் பில்வாரா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 18வது மக்களவை உறுப்பினராக உள்ளார்.[1]
கல்வி
[தொகு]அகர்வால் தனது இளங்கலை வணிகவியல் மற்றும் முதுகலைப் பட்டங்களை இராசத்தான் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]அகர்வால் தற்போது பில்வாரா மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றுகிறார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் 354,606 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரான சி. பி. ஜோசியினைத் தோற்கடித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Businessmen | In august company" இம் மூலத்தில் இருந்து 7 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240807175452/https://www.indiatoday.in/magazine/cover-story/18th-lok-sabha-the-debutants/story/20240722-businessmen-in-august-company-2565840-2024-07-13.
- ↑ "Damodar Agarwal(Bharatiya Janata Party(BJP)):Constituency- BHILWARA(RAJASTHAN) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-05.
- ↑ "Bhilwara Lok Sabha Constituency Result 2024 Live: BJP Candidate Damodar Agarwal Secures Seat". Free Press Journal (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.