ஜெ. ர. தா. டாட்டா
ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா | |
---|---|
1955இல் டாட்டா | |
பிறப்பு | பாரிஸ், பிரான்ஸ் | 29 சூலை 1904
இறப்பு | 29 நவம்பர் 1993 ஜெனீவா, சுவிட்சர்லாந்து | (அகவை 89)
தேசியம் | இந்தியன் |
இனம் | பார்சி |
பணி | டாட்டா குழும முன்னாள் தலைவர் |
அறியப்படுவது | டிசிஎசு நிறுவனம் நிறுவியவர் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவியவர் டைட்டன் நிறுவனம் நிறுவியவர் டாட்டா தேனீர் நிறுவனம் நிறுவியவர் வோல்டாஸ் நிறுவனம் நிறுவியவர் ஏர் இந்தியா நிறுவனம் நிறுவியவர் |
சமயம் | சோராசுதிதிரர் சமயம்[1] |
பெற்றோர் | இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா |
வாழ்க்கைத் துணை | தெல்மா விசஜி டாட்டா |
ஜே. ஆர். டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார். மேலும், இவர் இந்திய விமானியும், தொழிலதிபரும், தொழில் முனைவோரும், டாட்டா குழுமத்தின் தலைவரும் ஆவார்.
இளமைக்காலம்
[தொகு]இந்தியாவின் டாட்டா குடும்பத்தில் பிறந்த இவர், பிரபல தொழிலதிபர் இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா, அவரது மனைவி சுசான் பிரையர்[2] ஆகியோரின் மகனாவார்.[3] இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். இவரது தாயார் இந்தியாவில் கார் ஓட்டிய முதல் பெண்மணி ஆவார்.[4]1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.[5][6]
டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், டாட்டா உப்பு, வோல்டாஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட டாட்டா குழுமத்தின் கீழ் பல தொழில்களை நிறுவியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1983ஆம் ஆண்டில், இவருக்கு செவாலியே விருதும், 1955 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் உயரிய குடிமகன்களின் விருதுகளான பத்ம விபூசண், பாரத ரத்னா ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்திய தொழில்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.[7]
விருதுகள்
[தொகு]- 1957-இல் இவர் பத்ம விபூசண் விருது பெற்றார்.
- 1992-இல் பாரத் ரத்னா விருது.
இறப்பு
[தொகு]இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.[8]
இதனையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biswas, Ashit (23 November 2003). "For JRD, service was religion - Industry icon died 10 years ago, but legacy lives on". https://www.telegraphindia.com/jharkhand/for-jrd-service-was-religion-industry-icon-died-10-years-ago-but-legacy-lives-on/cid/789637.
- ↑ "Women of India". Archived from the original on 17 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
- ↑ "J. R. D. TATA". Tata Central Archives. Archived from the original on 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
- ↑ First Women, archived from the original on 16 August 2016, பார்க்கப்பட்ட நாள் 2 September 2016
- ↑ "Bombay Flying Club First Annual Report". Flight Global. 1 August 1929. http://www.flightglobal.com/pdfarchive/view/1929/1929-1%20-%200670.html.
- ↑ "Juhu aerodrome: Is India's first civil set to rise again?". Yahoo News India. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ A report in Vohuman.org Amalsad, Meher Dadabhoy. "Vohuman". பார்க்கப்பட்ட நாள் 11 April 2007.
- ↑ LALA, R. M. (1993). Beyond the last blue mountains. India: Penguin Books India. pp. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140169016.
^http://www.tatacentralarchives.com/history/family_tree/family_tree.pdf பரணிடப்பட்டது 2010-02-05 at the வந்தவழி இயந்திரம்
நூற்பட்டியல்
[தொகு]- Pai, Anant (2004). JRD Tata: The Quiet Conqueror. Mumbai: India Book House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8175084200.
வெளி இணைப்புகள்
[தொகு]- Tata Family Tree
- Brief Lifestory of JRD Tata பரணிடப்பட்டது 2019-10-30 at the வந்தவழி இயந்திரம்
- Lala, R. M. (1992). Beyond the Last Blue Mountain: the Authorised Biography of J.R.D. Tata. Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-84430-6.
- Mambro, Arvind, ed. (2004). J.R.D. Tata Letters. Rupa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-291-0513-6.
- Biography at newindiadigest.com பரணிடப்பட்டது 2020-01-13 at the வந்தவழி இயந்திரம்
- Biography at tata.com பரணிடப்பட்டது 2013-08-14 at the வந்தவழி இயந்திரம்
- Lala, R.M. (1993). Beyond the last blue mountain : a life of J.R.D. Tata (New & updated ed.). New Delhi, India: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140169010.