யஷ் பால்
யஷ் பால் | |
---|---|
![]() கல்காத்தாவில் யஷ் பால் | |
பிறப்பு | யஷ் பால் சிங் 26 நவம்பர் 1926 ஜாங், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 சூலை 2017 நொய்டா, உத்தரப் பிரதேசம் | (அகவை 90)
குடியுரிமை | இந்தியர் |
துறை | இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் |
ஆய்வு நெறியாளர் | புருனோ ரோசி |
அறியப்படுவது | விண்வெளியியல், கல்வி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் |
விருதுகள் | பத்ம விபூசண் (2013) பத்ம பூசண் (1976) மார்க்கோனி விருது (1980) லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது கலிங்கா விருது (2009) |
யஷ் பால் (Yash Pal, 26 நவம்பர் 1926 - 24 சூலை 2017) இந்திய அறிவியலாளர் ஆவார்.[1] இவர் விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் முதலில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவில் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் 1926 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஜாங் என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் தற்போது பாக்கிஸ்தானில் உள்ளது.[2] அரியானா மாநிலத்தில் உள்ள கைத்தல் என்ற நகரத்துக்கு அருகில் உள்ள பை என்ற ஊரில் வளர்ந்தார். பின்னர், சண்டிகரில் உள்ளா பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், மாசாச்சூசெட்சு பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.[3][4]
தொழில்
[தொகு]இவர் மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியைத் தொடங்கினார். பின்னர், எம்.ஐ.டி.யில் படித்து, மீண்டும் பழைய இடத்திலேயே தொடர்ந்தார்.
இவர் அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாட்டு மையத்தின் இயக்குனராகவும், இந்திய திட்டக்குழுவில் முதன்மை ஆலோசகராகவும் பதவியில் இருந்துள்ளார். அதன் பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[5]
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார்.
விருதுகள்
[தொகு]அறிவியலின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இவருக்கு கலிங்கா விருதை வழங்கிச் சிறப்பித்தது.[6][7]
இந்திய அரசின் பத்ம பூசண் விருதை 1976ஆம் ஆண்டில் பெற்றார்.[3][8]
2013ஆம் ஆண்டில், பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.frontline.in/other/obituary/for-the-love-of-science/article9796443.ece?homepage=true
- ↑ "Prof. Yash Pal" (PDF). Retrieved 2 April 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 iiasa.ac.at, "Yash Pal, CV" பரணிடப்பட்டது 2011-05-31 at the வந்தவழி இயந்திரம், 18 November 2005, retrieved 5 July 2008
- ↑ "Distinguished Alumni". Panjab University Chandigarh. Archived from the original on 2011-10-04. Retrieved 2015-09-08.
- ↑ "Create new global awareness: Yashpal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 February 2006 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023021805/http://www.hindustantimes.com/StoryPage/Print/66226.aspx. பார்த்த நாள்: 14 September 2011.
- ↑ "Yash Pal selected for Kalinga Prize". The Hindu. 4 October 2009 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105081334/http://www.hindu.com/2009/10/04/stories/2009100453950300.htm. பார்த்த நாள்: 12 April 2013.
- ↑ "Kalinga-winners: List of Laureates". UNESCO. Retrieved 2015-09-08.
- ↑ "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs, Government of India. pp. 61, 168. Archived from the original on 2014-11-15. Retrieved 2016-05-21.
Prof. Yash Pal
() - ↑ "Padma Awards". pib. 29 January 2013. Retrieved 29 January 2013.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. Retrieved July 21, 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- teindia.nic.in பரணிடப்பட்டது 2017-07-12 at the வந்தவழி இயந்திரம் (பி.டி.எவ்)