சுந்தர்லால் பட்வா
Appearance
சுந்தர்லால் பட்வா | |
---|---|
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் (முதல் ஆட்சிக் காலம்) | |
பதவியில் 20 சனவரி 1980 – 17 பிப்ரவரி1980 | |
பின்னவர் | அர்ஜுன் சிங் |
மத்தியப் பிரதேச முதலமைச்சர் (இரண்டாம் ஆட்சிக் காலம்) | |
பதவியில் 5 மார்ச் 1990 – 15 டிசம்பர் 1992 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 நவம்பர் 1924 குக்ரேஷ்வர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சுந்தர்லால் பட்வா (Sunder Lal Patwa) (பிறப்பு: 11 நவம்பர் 1924) [1] இந்திய அரசியல்வாதியும், மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக இருமுறையும், இந்தியக் குடியரசின் அமைச்சரவையிலும் பதவி வகித்தவர் ஆவார்.
வகித்த பதவிகள்
[தொகு]அரசியல் மற்றும் அரசில் சுந்தர்லால் பட்வா வகித்த பதவிகள்;
- 1957-67, 1977–97 மற்றும் 1998 – மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (மூன்று முறை)
- 1957-67 – தலைமைக் கொறடா, எதிர் கட்சி, மத்தியப் பிரதேச சட்டமன்றம்
- 1975 – பொதுச் செயலாளர், பாரதீய ஜனசங்கம்
- 1977 – செயற் குழு உறுப்பினர் ஜனதா கட்சி
- சனவரி 1980 - பிப்ரவரி 1980, மார்ச் 1990 - டிசம்பர் 1992 – முதலமைச்சர், மத்தியப் பிரதேசம் (இரண்டு முறை)
- 1980-85 – எதிர்கட்சித் தலைவர், மத்தியப் பிரதேச சட்டமன்றம்
- 1986 – மத்தியப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்.
- 1997 – 11வது மக்களவை உறுப்பினர்
- 1999 – 13வது மக்களவை உறுப்பினர்
- 13 அக்டோபர் 1999 – 30 செப்டம்பர் 2000 – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், இந்தியக் குடியரசின் அமைச்சரவை
- 30 செப்டம்பர் 2000 – 7 நவம்பர் 2000 - வேதிப்பொருட்கள் மற்றும் உரத்துறை அமைச்சர், இந்திய குடியரசின் அமைச்சரவை
- 7 நவம்பர் 2000 – 1 செப்டம்பர் 2001 - சுரங்கத் துறை அமைச்சர், இந்திய குடியரசின் அமைச்சரவை
பாரதிய ஜனசங்கம் கட்சியின் தலைவராக இருந்த சுந்தர்லால் பட்வா, 20 சனவரி 1980 முதல் 17 பிப்ரவரி 1980 முடிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், 5 மார்ச் 1990 முதல் 15 டிசம்பர் 1992 முடிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jainism, Ahimsa News, Religion, Non-Violence, Culture, Vegetarianism, Meditation, India". Jainsamaj.org. Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05.