உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ஜுன் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜுன் சிங்
2004 இல் அர்ஜுன் சிங்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
ஏப்ரல் 3, 2000 (2000-04-03) – 4 மார்ச்சு 2011 (2011-03-04)
தொகுதிமத்தியப் பிரதேசம்
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
பதவியில்
மே 22, 2004 (2004-05-22) – 22 மே 2009 (2009-05-22)
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்முரளி மனோகர் ஜோஷி
பின்னவர்கபில் சிபல்
பதவியில்
சூன் 23, 1991 (1991-06-23) – 24 திசம்பர் 1994 (1994-12-24)
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்ராஜ்மங்கல் பாண்டே
பின்னவர்பி. வி. நரசிம்ம ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1991 (1991)–1996 (1996)
முன்னையவர்சுக்கேந்திர சிங்
பின்னவர்சுக்லால் குஷ்வாகா
தொகுதிசத்னா
பதவியில்
1985 (1985)–1988 (1988)
முன்னையவர்லலித் மாகென்
பின்னவர்மதன் லால் குரானா
தொகுதிதெற்கு தில்லி மக்களவைத் தொகுதி
12th மத்திய பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
பெப்ரவரி 14, 1988 (1988-02-14) – 23 சனவரி 1989 (1989-01-23)
முன்னையவர்மோதிலால் வோரா
பின்னவர்மோதிலால் வோரா
பதவியில்
சூன் 9, 1980 (1980-06-09) – 12 மார்ச்சு 1985 (1985-03-12)
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்மோதிலால் வோரா
தகவல் தொடர்பு அமைச்சகம்
பதவியில்
அக்டோபர் 22, 1986 (1986-10-22) – 13 பெப்ரவரி 1988 (1988-02-13)
பிரதமர்இராஜீவ் காந்தி
முன்னையவர்ராம் நிவாஸ் மிர்தா
பின்னவர்வசந்த் சாத்தே
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் (இந்தியா)
பதவியில்
நவம்பர் 15, 1985 (1985-11-15) – 20 சனவரி 1986 (1986-01-20)
பிரதமர்இராஜீவ் காந்தி
முன்னையவர்வி. பி. சிங்
பின்னவர்பி ஷிவ் சங்கர்
பஞ்சாபின் 16 ஆவது ஆளுநர்
பதவியில்
மார்ச்சு 14, 1985 (1985-03-14) – 14 நவம்பர் 1985 (1985-11-14)
குடியரசுத் தலைவர்ஜெயில் சிங்
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), மத்திய பிரதேச சட்டமன்றம்
பதவியில்
1990 (1990)–1991 (1991)
முன்னையவர்அஜய் சிங்
பின்னவர்அஜய் சிங்
தொகுதிசுர்ஹத்
பதவியில்
1988 (1988)–1990 (1990)
முன்னையவர்லட்சுமி பட்டேல்
பின்னவர்நந்த் குமார் பட்டேல்]]
தொகுதிகார்சியா
பதவியில்
1977 (1977)–1985 (1985)
முன்னையவர்சந்திர பிரதாப் திவாரி
பின்னவர்அஜய் சிங்
தொகுதிசுர்ஹத்
பதவியில்
1972 (1972)–1977 (1977)
முன்னையவர்கேபி சிங்
பின்னவர்இந்திரஜித் பட்டேல்
தொகுதிசித்தி
பதவியில்
1967 (1967)–1972 (1972)
முன்னையவர்ரண்விஜய பிரதாப் சிங்
பின்னவர்ரன்விஜய பிரதாப் சிங்
தொகுதிஉமாரியா
பதவியில்
1957 (1957)–1967 (1967)
முன்னையவர்தொகுதி துவக்கம்
பின்னவர்தொகுதி கலைப்பு
தொகுதிமஜ்ஹோலி
மக்களவைத் தலைவர்
பதவியில்
சூலை 10, 1991 (1991-07-10) – நவம்பர் 20, 1991 (1991-11-20)
முன்னையவர்சந்திரசேகர்
பின்னவர்பி வி நரசிம்ம ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-11-05)5 நவம்பர் 1930
சுர்ஹத், மத்திய மாகாணம் மற்றும் பேரர், British India
இறப்பு4 மார்ச்சு 2011(2011-03-04) (அகவை 80)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிசுயேச்சை (1957-1960)
இந்திய தேசிய காங்கிரசு (1960-1996, 1998-2011)
அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) (1996-1998)
துணைவர்சரோஜ் குமாரி
பிள்ளைகள்அஜய் சிங்
அபிமன்யு சிங்
வீணா சிங்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்

அர்ஜுன் சிங் (Arjun Singh, இந்தி: अर्जुन सिंह நவம்பர் 5, 1930 - மார்ச்சு 4, 2011[1]) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த ஒரு அரசியல்வாதி. 1980 களில் இருமுறை மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருமுறை பதவி வகித்தார். இவர் 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை, மன்மோகன் சிங் அமைச்சரவையில், ஒன்றிய மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையிலும் ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் மத்தியப் பிரதேசத்தின், முன்னாள் ரெவா அரசவைக்குரிய சுர்ஹட் ஜாகிரைச் சேர்ந்தவர்.[2] இவர் சத்திரிய இனத்தைச் சார்ந்த ஒரு ராஜபுத்திரர். இவருடைய தந்தை, ராவ் சிவ் பகதூர் சிங்கும் ஒரு அரசியல்வாதி. அர்ஜுன் சிங் தன்னுடைய கல்வியை அலகாபாத் மற்றும் ஆக்ரா பல்கலைக்கழகங்களில் பெற்றார் (பி.ஏ., எல்எல்.பி.). மத்திய பிரதேசத்தின் சாட்னாவிலுள்ள அமர்பதான் அருகிலுள்ள பிரதாப்கரைச் சார்ந்த சரோஜ் தேவியைத் திருமணம் செய்துள்ளார், அந்தத் தம்பதியினருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மாரடைப்பு காரணமாக மார்ச் 4, 2011 அன்று இறந்தார்.

வகித்த பதவிகள்

[தொகு]
  • 1957-85 மத்திய பிரதேச சட்டசபை உறுப்பினர்
  • செப். 1963- டிச. 1967 விவசாயம், பொது நிர்வாகத் துறை (GAD) மற்றும் தகவல் & பொதுமக்கள் தொடர்பு அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • 1967 திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • 1972-77 கல்வி அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • 1977-80 எதிர்கட்சித் தலைவர், மத்தியப் பிரதேச சட்டசபை
  • 1980-85 முதல் அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • மார்ச் - நவ. 1985 பஞ்சாபின் ஆளுநர்
  • பிப். 1988 - ஜன. 1989 முதல் அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • ஜூன் 1991 - டிச. 1994 மனிதவள மேம்பாட்டு அமைச்சர், இந்திய அரசு
  • ஜூன் 1991 - மே 1996 சாத்னாவின் பத்தாவது மக்களவை உறுப்பினர்
  • ஜூன் 1996 - பதினோறாவது மக்களவைக்கு சாத்னாவிலிருந்து தோற்றார்
  • ஏப்ரல் 1998 - பன்னிரண்டாவது மக்களவைக்கு ஹோஷங்காபாத்திலிருந்து தோற்றார்
  • ஏப்ரல் 2000 - இராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டார்
  • மே 15, 2000 - பிப். 2004 உள்துறை அமைச்சரவைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • ஆகஸ்ட் 31, 2001- ஜூலை 2004 சட்டவிதிமுறை குழுவின் உறுப்பினர்
  • ஏப்ரல் 2002 - பிப். 2004 தலைவர், பார்லிமென்டரி ஸ்டாண்டிங் கமிட்டி ஆன் பர்பசஸ் கமிட்டி
  • மே 22, 2004 - மே 2009 மனிதவள அமைச்சர்[3]

மார்ச் 20, 2006 அன்று எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர் மீண்டும் இராஜ்ய சபாவுக்கு மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

சர்ச்சைகள்

[தொகு]

போபால் பேரழிவு

[தொகு]

போபால் பேரழிவு நிகழ்ந்தபோது அர்ஜுன் சிங்தான் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். டிசம்பர் 2, 1984 மற்றும் டிசம்பர் 3, 1984 இடைப்பட்ட அந்த ஊழ்வினையான இரவில், வாயு கசிவு ஏற்பட்டபோது அர்ஜுன் சிங் அந்த கசிந்த வாயுவின் பயங்கரத் தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய கெர்வா டாம் அரண்மனைக்கு (போபாலுக்கு வெளியே) தப்பிச்சென்றுவிட்டதாகவும், அந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும் அல்லது நிர்வாகத்தை முன்னெடுக்கவும் அவர் அங்கு இல்லையென்று பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது.[5] போபால் பேரழிவு வழக்கிலிருந்து வாரன் அண்டர்சன்விடுவிக்கப்பட்டதில் அர்ஜுன் சிங்கிற்கு பங்குள்ளதென ஊடகங்கள் அவரை குற்றஞ்சாட்டின.[6] குறிப்பாக, வாரன் அண்டர்சன் தப்பித்துப் போகப் பயன்படுத்திய வானூர்தியின் விமானி, அவ்விமானத்தை இயக்குவதற்கான இறுதி அனுமதி அர்ஜுன் சிங்கின் அலுவலகத்திலிருந்துதான் கிடைத்ததாகப் பதிவு செய்துள்ளார்.[7]

சுர்ஹத் லாட்டரி வழக்கு

[தொகு]

1980 ஆம் ஆண்டுகளில் அர்ஜுன் சிங் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது சுர்ஹத் லாட்டரி வழக்கு என்றழைக்கப்பட்ட ஒரு பழித்தூற்றலுக்கு ஆளானார். இதில் அவர் ஒரு போலியான மாநில லாட்டரியை அமைக்க உதவி புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார், இக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.[8]

1982 இல் அர்ஜுன் சிங்கின் உறவினர்களால் சுர்ஹத் குழந்தைகள் நலச் சங்கம் துவங்கப்பட்டது. அச்சங்கத்திற்கு அறக்கட்டளையாக வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.[9] அச்சங்கத்தால் நன்கொடையாகப் பெறப்பட்ட தொகையின் பெரும்பகுதி போபாலுக்கு அருகில் கேர்வா டேமில் கட்டப்பட்ட ஆடம்பர அறண்மனைக்குச் செலவிவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.[10] இச் சங்கத்திற்கு யூனியன் கார்பைட் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 150,000 நன்கொடையாகப் பெறப்பட்டது.[7] யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான வாரன் அண்டர்சன் விஷவாயுக் கசிவின்போது நாட்டைவிட்டு வெளியேற அர்ஜுன் சிங் அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தது என்ற குற்றச்சாட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பொதுநல வழக்கின் விசாரணையின் போது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், அரண்மனை கட்டுவதற்கான வரவு-செலவு குறித்து விளக்கமளிக்கக் கோரியது.[11] அர்ஜுன் சிங் அரண்மனைக்கான செலவு இந்திய ரூபாயில் 1.8 மில்லியன் ஆனதாகக் கூறினார்; ஆனால் வருமானவரித்துறை அந்த அரண்மனையின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுக் கூறியது.[12] எனினும் ஒரு-நீதியரசர் ஆணையம் அர்ஜுன் சிங் மீது குற்றமே இல்லை என்ற முடிவை அறிவித்தது.[13] ஆனால் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்து அர்ஜுன் சிங்கைப் புதியதாக அரண்மனைக் கட்டுவதற்கான வரவுசெலவு விவரத்தைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.[11] நீதிமன்றத்தில் அர்ஜுன்சிங் தரப்பில் கபில் சிபல் வாதிட்டார். மறுவிசாரணை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது.[11]


2006 ஆம் ஆண்டு மும்பை இரயில் வெடிவிபத்துக்குப் பிறகு, அவர் அமைச்சரவை கூட்டத்தில், இந்து மறுமலர்ச்சிக்குரிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் நாக்பூரிலுள்ள அதன் தலைமையிடத்தின் மீதான ஒரு முந்தைய தாக்குதல் முயற்சி, இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சதி முயற்சிதான் என்று மகாராஷ்டிர உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை எடுத்துக்கூறினார். இதைத் தொடர்ந்து அவர், விஷ்வ இந்து பரிஷத்[14] தால் நடத்தப்படும் ஓர்-ஆசிரியர் பள்ளிகள், ஏகால் வித்யாலயா க்களை மதச்சார்புடையவை என பழித்துக் கூறினார்.[15]

பிற சர்ச்சைகள்

[தொகு]

2006 மும்பை தொடருந்து குண்டுவெடிப்பு நிகழ்வுக்குப் பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நாக்பூரில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைமையலுவலகக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வன்முயற்சியானது அச்சங்கத்தினராலேயேதான் நிகழ்த்தப்பட்டதாகக் கூறிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் கூற்றை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பழங்குடிமக்களின் நலனுக்காக விசுவ இந்து பரிசத்தால் நடத்தப்படும் ஓராசிரியர் பள்ளிகளான ஏகால் வித்தியாலங்களை இனச்சார்புடையவை என பழித்துக் கூறினார்.[16] [17]

2007 இல் அர்ஜுன் சிங்கிற்கு எதிராக, வரதட்சணைக்கு எதிரான பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[18] இவரது பேரனின் துணைவி பிரியங்கா சிங்கின் தந்தை மாதவேந்திரா சிங் இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அப்போதைய உத்தரப் பிரதேச அரசு, அந்த வரதட்சனைக் கொடுமை வழக்கின் மீது சிபிஐ விசாரணை கோருவதென முடிவுசெய்தது.[19][20]

அர்ஜுன் சிங், மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, அடிப்படை கட்டமைப்புகளை கொண்டிராத தனியார் இலாபகர கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியை வழங்கியதில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஜனவரி 2010 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம், அத்தகைய 44 கல்வி நிறுவனங்களின் "நிகர்நிலைப் பல்கலைக்கழக" தகுதியை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சிஃபி செய்தி தளம்
  2. "சுர்ஹாத்". Archived from the original on 2005-11-09. பார்க்கப்பட்ட நாள் 2005-11-09.
  3. இந்திய நாடாளுமன்ற வலைதளத்தில் சிவி பரணிடப்பட்டது 2008-02-28 at the வந்தவழி இயந்திரம்.
  4. "அர்ஜுன், பரத்வாஜ், ஷிண்டே எதிர்ப்பில்லாமல் இந்திய மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்", ட்ரைபூன்இண்டியா.காம், மார்ச் 20, 2006.
  5. "Arjun Singh, the missing MP Chief Minister during Bhopal Gas tragedy". India TV News. 3 December 2014. http://www.indiatvnews.com/politics/national/arjun-singh-missing-mp-chief-minister-during-bhopal-gas-tragedy-21813.html. 
  6. "How Anderson came and left", The Bhopal Post, 9 June 2010.
  7. 7.0 7.1 "NATIONAL POLITICS: BJP loses appetite for dinner, not pact | News from Darjeeling, Dooars & Sikkim". Himalnews.wordpress.com. 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-20. பார்க்கப்பட்ட நாள் 2010-03-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  9. O. P. Ralhan (1998). Encyclopaedia of political parties : India, Pakistan, Bangladesh; national, regional, local. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-865-9. p. 89
  10. "The Tribune, Chandigarh, India – Main News". Tribune India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
  11. 11.0 11.1 11.2 "Archived copy". Archived from the original on 20 June 2006. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) CS1 maint: unfit URL (link)
  12. Singh, N. K. (15 December 1986). "Police fortify Arjun Singh's mansion to prevent 'undesirable elements' from entering". India Today. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19861215-police-fortify-arjun-singhs-mansion-to-prevent-undesirable-elements-from-entering-801556-1986-12-15. 
  13. "Indian Express: Churhat deal probe draws blank". Archived from the original on 12 October 2012. பார்க்கப்பட்ட நாள் 6 March 2011.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-03-11.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-11-16. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  16. "VHP stepping up its drive to Hinduise tribal belts of Bihar". Archived from the original on 15 June 2006. பார்க்கப்பட்ட நாள் 30 July 2006.
  17. "Welcome to South India's Leading News Site". Archived from the original on 16 November 2006. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006.
  18. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://web.archive.org/web/20081204091938/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id= ignored (help)
  20. "Maya seeks CBI probe against Arjun Singh in dowry case- Hindustan Times". Archived from the original on 30 September 2007. பார்க்கப்பட்ட நாள் 4 August 2007.
  21. "44 Deemed Universities To Be De-Recognised By Govt". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 January 2010 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811080130/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-19/india/28128927_1_university-status-ongoing-courses-hrd-minister. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_சிங்&oldid=3958227" இலிருந்து மீள்விக்கப்பட்டது