அலகாபாத் பல்கலைக்கழகம்
Appearance
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையின் அங்கமாக விளங்கும் மூயர் நடுவண் கல்லூரி | |
குறிக்கோளுரை | Quot Rami Tot Arbores |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Every branch yields a tree ஒவ்வொரு கிளையும் மரமாகிறது |
வகை | பொது |
உருவாக்கம் | 1887 |
வேந்தர் | பேரா. கோவர்தன் மேத்தா |
துணை வேந்தர் | பேரா. அனில் கே. சிங் |
அமைவிடம் | அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | யுஜிசி, என்ஏஏசி, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் |
இணையதளம் | www.allduniv.ac.in |
அலகாபாத் பல்கலைக்கழகம் (The University of Allahabad, அல்லது வழமையாக Allahabad University (இந்தி: इलाहाबाद विश्वविद्यालय) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். செப்டம்பர் 23, 1887இல் நிறுவப்பட்ட ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக கொண்ட இது பழமைவாய்ந்த இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மாகாணத்தின் ஆளுநர்களில் ஒருவரான சேர் வில்லியம் மூயரின் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்ட மூயர் நடுவண் கல்லூரியே வளர்ச்சியடைந்து அலகாபாத் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது.[1][2] ஒரு சமயத்தில் இது "கிழக்கின் ஆக்சுபோர்டு " என அறியப்பட்டது.[3] நூற்றாண்டுவிழாவின் போது வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படி சூன் 24, 2005இல் இதற்கு நடுவண் அரசுப் பல்கலைக்கழகமாக தகுதி வழங்கப்பட்டது.[4]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ "Muir, Sir William". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. "In 1885 he was elected principal of எடின்பரோ பல்கலைக்கழகம்"
- ↑ History Allahabad University website.
- ↑ Allahabad Varsity to become a central university தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, May 11, 2005.
- ↑ Central University status restored for Allahabad University மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), Press Information Bureau, இந்திய அரசு. June 24, 2005.