வசந்த் சாத்தே
வசந்த சாத்தே | |
---|---|
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை -நடுவண் அமைச்சர் | |
பதவியில் 1980–1982 | |
நாடாளுமன்ற உறுப்பினர்-அகோலா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1972–1977 | |
நாடாளுமன்ற உறுப்பினர்-வர்தா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1980–1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நாசிக், மகாராட்டிரம், இந்தியா | 5 மார்ச்சு 1925
இறப்பு | 23 செப்டம்பர் 2011[1] | (அகவை 86)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜெயஸ்ரீ |
பிள்ளைகள் | இரு மகள்கள், ஒரு மகன் |
இணையத்தளம் | http://www.vasantsathe.com |
வசந்த் சாத்தே ( Vasant Purushottam Sathe, 5 மார்ச்சு 1925-23 செப்டம்பர் 2011) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் நடுவணரசு அமைச்சராகவும் இருந்த இவர் ஒரு சோசலிசவாதி எனவும் கருதப் படுகிறார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய வசந்த் சாத்தே 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டில் சோசலிசக் கட்சியில் சேர்ந்தார். 1956 முதல் 1960 வரை மத்தியப் பிரதேச நெசவுத் தொழிலாளர்கள் கூட்டமைப்புத் தலைவராகச் செயல்பட்டார். 1972இல் அகோலா நாடாளுமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1980 முதல் 1991 வரை வார்தா தொகுதியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1975 ஆம் ஆண்டு நெருக்கடிக் காலம் அமுலில் இருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப் பட்டார்.
அமைச்சராக
[தொகு]1980 இல் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும், 1982 இல் இரசாயன உர அமைச்சராகவும், 1986 இல் இருப்பு, சுரங்க, நிலக்கரித் துறை அமைச்சராகவும் 1988-89இல் தகவல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இறப்பு
[தொகு]சாத்தே செப்டம்பர் 23, 2011இல் குர்கானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மாலை நேரத்தில் நெஞ்சில் வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு உட்பதிகைக்கு முன்னரே அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.[2] அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்கு உதவும் வகையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு கொடையாக வழங்கப்பட்டது.[3]
எழுதிய நூல்கள்
[தொகு]- Towards Social Revolution: A Case for Economic Democracy, Vikas Pub., 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7069-2580-7.
- Restructuring of Public Sector in India, Vikas Pub. House, 1989.
- National government: agenda for a new India, UBS Publishers Distributors, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85273-66-9.
- Two Swords in One Scabbard: a Case for Presidential Form of Parliamentary Democracy, NIB Publishers, 1989.
- Tax Without Tears: For Economic Independence and National Integration,
- The Challenge of Change: Key Issues for a Developing Society, Allied Publishers, 1989.
- India to be a Global Power.
- Memoirs of a Rationalist, Om Books International, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87107-40-5.