உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் (Sir Chandeshwar Prasad Narayan Singh) (18 ஏப்ரல் 1901 - 1993) [1] இவர் ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இராஜதந்திரியும் மற்றும் நிர்வாகியுமாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சிங் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பார்சாகர் என்னுமிடத்தில் பிறந்தார்.[2] இவர் தேராதூனிலுள்ள தூன் பள்ளியில் பயின்றார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், பீகார் திரும்பி தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். 1927 இல் அப்போதைய பீகார் சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முசாபர்பூரின் மாவட்ட வாரியத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு இவர் 1934 நேபாள-பிகார் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண முயற்சிகளை ஏற்பாடு செய்தார்.

1935 ஆம் ஆண்டின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இவருக்கு இந்தியப் பேரரசின் ஆணைத் தளபதி கௌரவம் வழங்கப்பட்டது .[3] 1945 ஆம் ஆண்டில், புதிய பாட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.[4] புதிதாக திறக்கப்பட்ட துறைகளை நிர்வகிக்க நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்தார். கிழக்கு இந்தியாவின் பழமையான உளவியல் சேவை மையங்களில் ஒன்றான பாட்னா பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சி மற்றும் சேவை நிறுவனம் 1945 இல் இவரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கிருஷ்ணா குஞ்சில் அமைந்துள்ளது. இந்த கட்டிடக் கட்டடத்தை பல்கலைக்கழகத்திற்கு மாநிலத்தின் சிறந்த கல்வியாளரான மறைந்த சர் கணேஷ் தத் சிங் நன்கொடையாக வழங்கினார்.[5] 1946 ஆம் ஆண்டில் இவருக்கு நைட்வுட் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[6]

சுதந்திரத்திற்குப் பிறகு, 1949 இல், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு நேபாளத்துக்கான இந்தியாவின் தூதராக செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பதவிக்காலத்தில்தான் நேபாள மன்னர் 1950இல் இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். காத்மாண்டுவில் தனது பதவிக் காலத்தை முடித்த பின்னர், 1953 இல் பிரிக்கப்படாத பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது உதவியால் சண்டிகர் நகரம் பக்ரா அணையும் உருவாக்கப்பட்டது. இவரது கனவுத் திட்டமான குருசேத்ர பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது . இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மேம்படுத்துவதற்காக ஒரு நிறுவனத்தை அமைக்க இவர் விரும்பினார். இவர் உத்தரபிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[2] ஐர் ஜவகர்லால் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்தார்.[7] கலை மற்றும் கலாச்சாரத்திற்கான ஒரு நிறுவனமான பிரச்சீன் கலா கேந்திரா 1956 ஆம் ஆண்டில் சண்டிகரில் இவரது ஆதரவுடன் நிறுவப்பட்டது. 1958 இல், ஜப்பானுக்கான இந்தியாவின் தூதராக சென்றார். அங்கு இவருக்கு ஓதானி பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த பதவியில் தொடர முடியாமல், உடல்நலக்குறைவு காரணமாக, இவர் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   [ மேற்கோள் தேவை ]

ஜமீந்தாரி

[தொகு]

இராஜ் தர்பங்காவின் காமேஷ்வர் சிங் என்ற ஜமீந்தாருடன் இணைந்து ஜமீந்தார் முறையை ஒழிப்பதை சிங் எதிர்த்தார்.[8]

ஓய்வு

[தொகு]

ஓய்வுக்குப் பிறகு இவர் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கியின் இயக்குநராகவும், பல நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றினார். 1977 ஆம் ஆண்டில் இவர் நாட்டிற்கு வழங்கிய சிறப்பான சேவைகளுக்காக பத்ம விபூசண் விருது பெற்றார்.[2]

குடும்பத்தின் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல இவரது பேரன் அசோக் ஹர்ஷவர்தன் மற்றும் பெரிய பேரன் ஆராத்யா ஹர்ஷவர்தன் ஆகியோர் தங்கள் மூதாதையர் கிராமமான சுர்சந்தில் பல்வேறு சமூக நல திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.[9]

குறிப்புகள்

[தொகு]
  1. "Sir Chandeshwar Prasad Narayan Singh – Governor of UP". upgovernor.gov.in. Archived from the original on 19 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "Shri. Chandeshwar Prasad Narayan Singh". Raj Bhavan (Uttar Pradesh). Archived from the original on 2009-01-05. பார்க்கப்பட்ட நாள் 2008-08-19.
  3. "London Gazette". Archived from the original on 2010-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  4. "Other Side Of The Coin" இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023143519/http://articles.timesofindia.indiatimes.com/2008-11-17/patna/27895222_1_private-colleges-constituent-colleges-patna-university. பார்த்த நாள்: 28 March 2009. 
  5. "PU institute falls prey to neglect" இம் மூலத்தில் இருந்து 2012-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022052655/http://articles.timesofindia.indiatimes.com/2002-02-10/patna/27119027_1_institute-counselling-patna-university. பார்த்த நாள்: 9 November 2008. 
  6. "London Gazette". Archived from the original on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-13.
  7. A. G. Noorani (September 2004). "Nehru's legacy to India". Frontline 21 (20). http://www.hindu.com/fline/fl2120/stories/20041008000307600.htm. பார்த்த நாள்: 2020-06-13. 
  8. Arvind Das (1983). Agrarian Unrest and Socio-Economic Change, 1900-1980. South Asia Books. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0836409673.
  9. https://www.jagran.com/bihar/sitamarhi-15077177.html