உள்ளடக்கத்துக்குச் செல்

பக்வான் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவான் தாஸ்
பிறப்பு(1869-01-12)12 சனவரி 1869
வாரணாசி, United Provinces, British Raj
இறப்பு18 செப்டம்பர் 1958(1958-09-18) (அகவை 89)
பிள்ளைகள்சிறீ பிரகாசா
விருதுகள்பாரத ரத்னா

பகவான் தாஸ் (Bhagwan Das, சனவரி 12, 1869 - செப்டம்பர் 18, 1958) ஓர் இந்திய இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பிரித்தானிய இந்தியாவில் நடுவண் சட்டப் பேரவையில் அங்கத்தினராக இருந்தவர். இந்துத்தானி பண்பாட்டு சமூகத்துடன் இணைந்திருந்த பகவான் தாசு, அரசியல் எதிர்ப்பைத் தெரிவிக்க "கலவரங்களில்" ஈடுபடுவதை கண்டித்தார். பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டால் பலமுறை ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்கு ஆளானார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

வாரணாசியில் பிறந்த பகவான் தாஸ் 1894ஆம் ஆண்டில் அன்னி பெசண்ட்டின் பேச்சால் கவரப்பட்டு இறை மெய்யியல் சங்கத்தில் இணைந்தார். 1895ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரிவின்போது அடையாறு இறை மெய்யியல் சங்கத்தில் சேர்ந்தார். இந்த சங்கத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு எதிரான குழுவில் செயல்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார். 1955ஆம் ஆண்டில் இவரது சிறந்த தேசியப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது[1].

இலக்கியம்

[தொகு]
  • Katherine Browning: An epitome of the "science of the emotions", a summary of the work of Pandit Bhagavan Das. Theosophical Publishing House, London 1925.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards Directory (1954-2007)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (pdf) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்வான்_தாஸ்&oldid=3561358" இலிருந்து மீள்விக்கப்பட்டது