உள்ளடக்கத்துக்குச் செல்

செரி உக்கிரசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செரி உக்கிரசேனன் (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Sri Ugrasena; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், இரண்டாம் அரசர் ஆவார். இவர் சக ஆண்டு: 837-864 அல்லது 915-942-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தார்.[1][2] அவரின் அப்போதைய இராச்சியத்தின் தலைநகரம் சிங்கமண்டவா (Singhamandawa) என அறியப்படுகிறது.[1]

இவர் தம்முடைய மக்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பல கல்வெட்டுகளை வெளியிட்டார். அவற்றில் அரச நன்கொடை வழங்குதல், வரி ஒழுங்குமுறை, மத விழாக்கள் மற்றும் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான பொது விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.[1][2]

இவரின் ஆட்சிக்காலம் கிழக்கு ஜாவாவில் ஈசான அரச மரபு வழி (Isyana dynasty) மன்னர் சிந்தோக்கின் (Mpu Sindok) ஆட்சிக் காலத்தை ஒட்டி உள்ளது.[1]

கல்வெட்டுகள்

[தொகு]

பாலி இராச்சியம் தொடர்பான ஒன்பது கல்வெட்டுகளில் இவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

  • செம்பிரான் கல்வெட்டு - (Sembiran inscription) (Sembiran A I inscription)
  • பாபகான் கல்வெட்டு - (Babahan I inscription)
  • சுரோகடான் கல்வெட்டு - (Srokadan A inscription)
  • பெங்கோட்டான் கல்வெட்டு - (Pengotan A I inscription)
  • பத்துனியா கல்வெட்டு - (Batunya A I inscription)
  • தவுசா கல்வெட்டு - (Dausa A inscription)
  • தவுசா பி கல்வெட்டு - (Dausa B I inscriptions)
  • செராய் ஏ கல்வெட்டு - (Serai A I inscription)
  • கோப்லேக் புரா பத்தூர் கல்வெட்டு - (Goblek Pura Batur A inscription)

அனைத்துக் கல்வெட்டுகளும் பாலினிய பழைய மொழியில் எழுதப்பட்டுள்ளன.[3][2][3][4]

இறப்பு

[தொகு]

அரசர் செரி உக்கிரசேனன், ஆயர் மடம் (Air Madatu) என்ற கோயிலில் அடக்கம் செய்யப்பட்டார். இதைப் பற்றி, அவருக்குப் பின் ஆட்சி செய்த மன்னர் தவநேந்திர வருமதேவன் வெளியிட்ட கல்வெட்டு கூறுகிறது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  • Poesponegoro, Marwati Djoened; Notosusanto, Nugroho (2008). Sejarah Nasional Indonesia II: Zaman kuno. PT Balai Pustaka. ISBN 9789794074084.
  • Setiawan, I Ketut (2008). Brigitta Hauser-Schäublin, I Wayan Ardika. ed. "Socio-Political Aspect of Julah". Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia (Bali: Universitätsverlag Göttingen). doi:10.17875/gup2019-1239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783940344120. https://books.google.com/books?id=K7AcwO4jxFIC&pg=PA219. 
  • Shastri, Narendra Dev. Pandit (1963). Sejarah Bali Dwipa. Denpasar, Bali: Bhuana Saraswati.
முன்னர் செரி உக்கிரசேனன்
915-942
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரி_உக்கிரசேனன்&oldid=4213431" இலிருந்து மீள்விக்கப்பட்டது