செரி அஜனாதேவி
செரி அஜனாதேவி Śri Ajñadewi | |
---|---|
Çri Adnya Dewi | |
பாலி இராச்சியம் | |
ஆட்சிக்காலம் | 1011 - 1016 |
முன்னையவர் | குணப்பிரியா தருமபத்தினி உதயனா வருமதேவன் |
பின்னையவர் | மரகத பங்கஜன் |
மரபு | வர்மதேவ வம்சம் |
மதம் | இந்து சமயம் |
செரி அஜனாதேவி அல்லது அதினியா தேவி (ஆங்கிலம்: Śri Ajñadewi; இந்தோனேசியம்: Çri Adnya Dewi) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியின் அரசி ஆவார். பாலி இராச்சியத்தின் அரசர்கள் வரிசையில் இவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இவரின் ஆட்சிக்காலம் கிபி 1011 - 1016.[1]
பாலினிய அரசர் உதயனா வருமதேவன் மற்றும் பாலினிய அரசி குணப்பிரியா தருமபத்தினி ஆகியோருக்குப் பிறகு செரி அஜனாதேவி அரியணை ஏறினார். ஆனால், அவர்களுடன் இவருக்கு என்ன தொடர்பு அல்லது என்ன உறவு இருந்தது என்பது தெரியவில்லை. அவரின் வாரிசு உரிமைக்கான சூழ்நிலைகளும் தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை.[2]
கொல்கத்தா கல்வெட்டு
[தொகு]கொல்கத்தா கல்வெட்டில் (Calcutta Stone; Pucangan Inscription), செரி அருசனாதேவி எவ்வாறு பாலினிய அரசியானார் என்று எழுதப்பட்டு உள்ளது.
அந்தக் கல்வெட்டின்படி: 1006-ஆம் ஆண்டில், பாலி இராச்சியத்தின் மன்னர் உதயனா வருமதேவனின் மகன் ஆயர்லங்காவிற்கும், மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சனின் (Dharmawangsa) மகளுக்கும் திருமணம் நடந்தது.
அந்தத் திருமண நிகழ்ச்சியில், கிழக்கு ஜாவானிய மன்னர் ஊராவாரி (King Wurawari) தாக்குதல் நடத்தினார். அது ஓர் உள்நாட்டுப் புரட்சியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அந்தத் தாக்குதலில், மாதரம் இராச்சியத்தின் மன்னர் தருமவங்சன் கொல்லப்பட்டார். பாலி அரசர் உதயனா வருமதேவனும் கொல்லப்பட்டார்.[3] ஆனாலும் பாலி இளவரசர் ஏர்லங்கா தப்பிச் சென்று மறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர்தான், செரி அஜனாதேவி பாலி இராச்சியத்தின் ஆட்சியாளராகப் பொறுப்பு ஏற்றார் என கொல்கத்தா கல்வெட்டு கூறுகிறது.
சர்ச்சை
[தொகு]செரி அஜனாதேவி, கிழக்கு ஜாவா வம்சத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது பாலி வம்சத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகின்றனர். பாலி இராச்சியத்தின் பட்டத்து இளவரசர் மரகத பங்கஜன், ஒரு சிறுவன் என்பதால், அவன் வயதிற்கு வரும் வரையில், செரி அஜனாதேவி ஆட்சி செய்தார் என்ற ஒரு கோட்பாடும் உள்ளது.[4]
மரகத பங்கஜன் 1022-ஆம் ஆண்டில் வயதிற்கு வந்தார் என்றும்; அதன் பின்னர் செரி அஜனாதேவி ஆட்சியாளராக இல்லை என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வுகளையும்; செரி அஜனாதேவி ஆட்சி செய்ததையும்; அப்போதைய கொல்கத்தா கல்வெட்டும் உறுதிப்படுத்துகிறது. எனினும், செரி அஜனாதேவி எனும் இளவரசியார், பாலி இராச்சியத்தின் அரசியாக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்தார் என்பது மட்டும் உறுதியான வரலாற்றுத் தகவல் ஆகும்.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
- ↑ Brigitta Hauser-Schäublin; I Wayan Ardika (2008). Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia. Universitätsverlag Göttingen. pp. 150–. ISBN 978-3-940344-12-0.
- ↑ Jan Hendrik Peters, Tri Hita Karana
- ↑ Jan Hendrik Peters, Tri Hita Karana
- ↑ "Sejarah Kerajaan Bali, Daftar Raja dan Latar Belakang Berdirinya". SINDOnews Daerah (in இந்தோனேஷியன்). Retrieved 17 January 2025.
சான்றுகள்
[தொகு]- Willard A. Hanna (2004). Bali Chronicles. Periplus, Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0272-X.