கோவில்பட்டி கடலைமிட்டாய்
Appearance
கோவில்பட்டி கடலைமிட்டாய் | |
---|---|
குறிப்பு | நிலக்கடலை, வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு பொருள் |
வகை | உணவு |
இடம் | கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 2019-20 |
கோவில்பட்டி கடலைமிட்டாய் (Kovilpatti Kadalai Mittai) 2019-20ஆம் ஆண்டில் புவிசாய் குறியீடு தகுதி பெற்ற இந்திய இனிப்பு ஆகும். இந்த வகை கடலை மிட்டாய் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் அருகமை நகரங்களிலிலும் தயாரிக்கப்படுகிறது.[1]
விளக்கம்
[தொகு]கோவில்பட்டி கடலை மிட்டாய் 1940-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதற்கான தரவுகள் உள்ளன. தாமிரபரணி ஆற்றின் தண்ணீர், இக்கடலை மிட்டாய் தயாரிக்க பயன்படும் நிலக்கடலை விளையும் கரிசல் மண்ணின் தன்மை, இனிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் பனைவெல்லத்துடன் விறகு அடுப்பில் பாகு தயாரிப்பது இந்த வகை கடலைமிட்டாயின் சிறப்பு ஆகும். கடலைமிட்டாய் பாகுவின் பதம், கடலைமிட்டாய் ரகம் வாரியாக அச்சு வார்ப்பது போன்ற உற்பத்தி திறன் இப்பகுதி தொழிலாளர்களுக்கே உரிய தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kandavel, Sangeetha (2025-04-07). "Kovilpatti kadalai mittai gets GI tag". The Hindu (in Indian English). Retrieved 2025-04-07.
- ↑ "புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் பிற ஊர்களில் தயாரிப்பு". Hindu Tamil Thisai. 2025-04-07. Retrieved 2025-04-07.