உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுமலை வாழைப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுமலை வாழைப்பழம்
குறிப்புவாழைப்பழம்-சிறுமலை பகுதி
வகைவிவசாயப் பொருள்
இடம்சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2008–09


சிறுமலை வாழைப்பழம் (Sirumalai Hill Banana) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறுமலை பகுதியில் விளையும் ஒரு வகை வாழை ஆகும்.[1] இதற்கு 2008-09-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு தகுதி அறிவிக்கப்பட்டது.[2]

விளக்கம்

[தொகு]

சிறுமலை வாழை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 2,500–3,000 உயரத்தில் பயிரிடப்படுகிறது. இது பெரும்பாலும் 5.5 முதல் 6.5 வரையிலான காரகாடிதன்மையினை கொண்ட களிமண் மண் நிலத்தில் மழைக்காலப் பயிராக வளர்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சூலை-ஆகத்து மாதங்களில் வாழை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் காபி அல்லது மரத் தோட்டங்களில் மற்ற பயிர்களுடன் சேர்த்து வளர்க்கப்படலாம். மரங்கள் 10 அடி உயரம் வரை வளரும். எட்டு மாதங்களுக்குப் பிறகு வாழை அறுவடை செய்யப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்த வாழைப்பழக் கொத்து மேல் தீநுண்மியால் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தணிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.[3][4]

இந்தப் பழங்கள் இவற்றின் தனித்துவமான மணம், சுவைக்காகப் பெயர் பெற்றவை. பழுத்த பழங்கள் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியான தோலுடன் இருக்கும். சரியான வெப்பநிலையில் பழங்களைப் பத்து நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். பழக் கூழ் சற்று கடினமானது. குறைந்த ஈரப்பதம், அதிகச் சர்க்கரையுடன் (230 பிரிக்சு) அதிக பொட்டாசியத்தினையும் கொண்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Application details". Government of India. Archived from the original on 6 May 2023. Retrieved 1 December 2023.
  2. Geographical indications in India (Report). Government of India. Archived from the original on 3 December 2023. Retrieved 1 December 2023.
  3. 3.0 3.1 "Sirumalai Hill Banana of Tamil Nadu". Sahasa. 15 March 2015. Archived from the original on 27 May 2024. Retrieved 1 December 2023.
  4. "Workshop on "Sirumalai" a GI tagged banana, on its cultivation and pest and disease management". National Research Centre for Banana. 7 December 2023. Archived from the original on 27 May 2024. Retrieved 31 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமலை_வாழைப்பழம்&oldid=4245211" இலிருந்து மீள்விக்கப்பட்டது