உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புவனம் பட்டுச் சேலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புவனம் பட்டு சேலைகள்
குறிப்புபுடவை-திருபுவனம் பகுதி
வகைகைத்தொழில்
இடம்திருபுவனம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2018–19
பொருள்பட்டு


திருப்புவனம் பட்டுச் சேலைகள் (Thirubuvanam Silk Sarees) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் நெய்யப்படும் ஒரு பட்டுப் புடவையாகும்.[1] இதற்கு 2018-19-இல் புவிசார் குறியீடு தகுதி அறிவிக்கப்பட்டது.

விளக்கம்

[தொகு]

தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனம் பகுதியில் நெய்யப்பட்ட பட்டுப் புடவைகளும் இதில் அடங்கும். பட்டுப் புடவைகள் சுமார் 12 மீட்டர்) நீளமும், 4 அடி (1.2 மீட்டர்) அகலமும், 400 கிராம் (சரிகை இல்லாமல் 14 அவுன்ஸ்) எடையுள்ளதாக இருக்கும்.[2] விரிவான ச்ரிகை வேலைப்பாடுகள், அதிக நூல் எண்ணிக்கை கொண்ட விரிவான முந்தி, பல்லு வடிவமைப்புகளுக்கு இந்தப் புடவைகள் அறியப்படுகின்றன.[3] நெசவாளர்கள் 1955-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட திருப்புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் நிறுவனம் (தைகோ) இந்தப் பட்டுப்புடவையினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Application details". Government of India. Retrieved 1 December 2023.
  2. 2.0 2.1 "Thirubuvanam Silk saree gets GI tag after a wait for 5 years". The New Indian Express. 13 March 2019. https://www.newindianexpress.com/tamil-nadu/2019/Mar/13/thirubuvanam-silk-saree-gets-gi-tag-after-a-wait-for-5-years-1950423.html. 
  3. "Tamil Nadu’s Thirubuvanam silk sari gets GI tag". The Times of India. 12 March 2019. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadus-thirubuvanam-silk-sari-gets-gi-tag/articleshow/68376518.cms.