உள்ளடக்கத்துக்குச் செல்

தோடர் வேலைப்பாட்டு துணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூத்துக்குளி (Toda Embroidery) எனப்படுவது தமிழ்நாட்டின் நீலகிரி மலைப் பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்களான தோடர்கள் அணியும் சால்வைத் துணி ஆகும். இவர்கள் விழாக் காலங்களிலும், திருமணம், இறுதிச் சடங்குகளின் போதும் இதை அணிவர். இந்தத் துணி தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. இது சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக உள்ளது.[1]

சிறப்பு

[தொகு]

கையால் நெய்யப்படும் வெள்ளைநிற துணிமீது, நூல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எம்ப்ராய்டரி எனப்படும் துணி வேலைப்பாடுகள் செய்யப்படுகிறது. சுமார் ஒன்பது அடி நீளம் கொண்ட எம்ப்ராய்டரியின் நுனிப்பகுதி சிவப்பு மற்றும் கருப்பு நிற முடிச்சுகள் கொண்டது. இந்தத் துணி வேலைப்பாடு பெரும்பாலும் துணியின் பின் பக்கமாக செய்வதால் துணியின் முன்புறம் அது புடைப்பாக வந்து துணிக்கு மெருகூட்டுகிறது. இந்தத் துணி வேலைபாடு கலைப் பாரம்பரியமாக தலைமுறைகளுக்கு கைமாறி வருவதால் இதெற்கென தனி வழிகாட்டு புத்தகங்கள் என எதுவும் இல்லை.[2] இந்த ஆடையில் மரபாக ஆறு, தேன்கூடு, மயில், சூரியக் கதிர்கள், பூ என தங்கள் வாழ்வுடன் ஒன்றிய விசயங்களை மட்டும் வேலைப்பாடாக செய்கின்றனர். இதில் பெரும்பாலும் கருப்பு, சிவப்பு வண்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.[3] பொதுவாக ஒரு சால்வை தைக்க குறைந்தது 15 முதல் 20 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர்.[4]

தற்போது உடம்பை சுற்றி போர்த்தப்படும் துணிகள் மட்டும்மல்லாது, சுவர் அலங்காரங்கள், மேசை விரிப்புகள், தோள் பைகள் போன்றவற்றிலும் இந்த தோடா வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.

புவிசார் குறியீடு

[தொகு]

பூத்துக்குளி சால்வைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. சிறுவர் மணி, திணமணி, கருவூலம்: நமது பெருமைக்குரிய பழங்குடி மக்கள் 2026, மே, 7
  2. மனோரமா இயர் புக் 2015
  3. "தோடர்களின் பாரம்பரியமான கை எம்பிராய்டரி... போலி தயாரிப்புகளால் பாதிப்படையும் வாழ்வாதாரம்." 2024-06-02. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  4. "நீலகிரி: தோடர் பழங்குடிப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் பெண் - எப்படிச் செய்கிறார்?". 2023-09-01. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. "'பூத்துக்குளி': தோடர்களின் எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு". 2018-04-17. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடர்_வேலைப்பாட்டு_துணி&oldid=4047261" இலிருந்து மீள்விக்கப்பட்டது