எங்கிட்ட மோதாதே
எங்கிட்ட மோதாதே | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் |
கதை | பஞ்சு அருணாசலம் |
திரைக்கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ஷோபனா சரத்குமார் குஷ்பூ |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | கே.ஆர்.ராமலிங்கம் |
கலையகம் | ராஜேஷ்வரி புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | ராஜேஷ்வரி புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 14, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கிட்ட மோதாதே (Enkitta Mothathe) ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜேஷ்வரி சுந்தர்ராஜன் தயாரிப்பில் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும்.[1] விஜயகாந்த், ஷோபனா, சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். இளையராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3] இப்படத்தின் தலைப்பு ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய முந்தைய படமான ராஜாதி ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியில் இருந்து எடுக்கப்பட்டது.[4][5] வியாபார ரீதியாகப் படம் வெற்றிபெறவில்லை.[6]
கதை
[தொகு]சரோஜா பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். இதற்கிடையில், மல்லிகா என்ற திமிர் பிடித்த பணக்காரப் பெண்ணும் பாண்டியனைக் காதலித்து, சரோஜாவுக்கும் அவனுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தத் திட்டமிடுகிறாள். மல்லிகா தனது முயற்சியில் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதுதான் கதையின் உச்சம்.
நடிகர்கள்
[தொகு]- பாண்டியனாக விஜயகாந்த்
- ஷோபனா
- சரத் குமார்
- சரோஜாவாக குஷ்பூ
- ராதா ரவி
- நிழல்கள் ரவி
- சரோஜாவின் அம்மாவாக வடிவுக்கரசி
- பாண்டியனின் அம்மாவாக மனோரமா
- தியாகு
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராஜா சிறப்புத் தோற்றம்
- இடிச்சபுளி செல்வராசு
- குள்ளமணி
பாடல்கள்
[தொகு]இளையராஜா இசையமைக்க பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுதியிருந்தனர்.[7] இப்படத்தில் இடம் பெற்ற சரியோ சரியோ" பாடல் மலையாளத் திரைப்படமான அதர்வம் படத்தில் வரும் "புகழோரத்தில்" பாடலின் மறுபதிப்பாகும்.
எண். | பாடல்கள் | பாடியவர்(கள்) | எழுதியவர் | நீளம் (m:ss) |
1 | அஞ்சு பைசா பத்து பைசா | மலேசியா வாசுதேவன் | வாலி | 04.34 |
2 | ஹேய் மாமா | எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 04.24 |
3 | இவன் வீரன் சூரன் | எஸ். ஜானகி | வாலி | 04.35 |
4 | ஒன்னோடு ரெண்டுன்னு | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | 04.35 |
5 | சரியோ சரியோ நான் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வாலி | 04.38 |
6 | கை வீசம்மா கை வீசு | சித்ரா | வாலி | 01.04 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.
- ↑ "En Kitta Modhadhey". filmibeat.com. Retrieved 2014-10-24.
- ↑ "En Kitta Modhadhey". spicyonion.com. Retrieved 2014-10-24.
- ↑ "ஒரே பாடலில் இரு படங்கள்… பாடலில் பிறந்த படங்களின் வரலாறு". CineReporters. 19 June 2021. Archived from the original on 14 May 2023. Retrieved 14 May 2023.
- ↑ Rangan, Baradwaj (25 March 2017). "Enkitta Mothathe Movie Review". Film Companion. Archived from the original on 14 May 2023. Retrieved 31 July 2023.
- ↑ ராம்ஜி, வி. (1 February 2019). "'என் கல்யாணப் பரிசா 'புலன்விசாரணை' கொடுத்துட்டியே செல்வமணி!'- விஜயகாந்த் நெகிழ்ச்சி". இந்து தமிழ் திசை. Archived from the original on 31 July 2023. Retrieved 14 May 2023.
- ↑ "Engitta Modhathe Songs". raaga.com. Retrieved 2014-10-25.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1990 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்
- சரத்குமார் நடித்த திரைப்படங்கள்
- குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்