சாமி போட்ட முடிச்சு
Appearance
சாமி போட்ட முடிச்சு Sami Potta Mudichu | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி சிந்து |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் |
விநியோகம் | அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | 11 சனவரி 1991[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாமி போட்ட முடிச்சு (Sami Potta Mudichu) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் முரளி மற்றும் சிந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3]
கதைச் சுருக்கம்
[தொகு]கதிர்வேலன் ( முரளி ) வாழ்க்கையின் குறிக்கோள், தன் தாத்தாவைக் கொன்ற மாமாவைப் பழிவாங்குவதுதான். இருப்பினும், அவரது மாமன் மகள் நீலவேணியை ( சிந்து ) சந்தித்தப் பிறகு அவர் மனம் மாறுகிறார்.
நடிகர்கள்
[தொகு]- முரளி - கதிர்வேலன்
- சிந்து - நீலவேணி
- ஆர். சுந்தர்ராஜன்
- எம். என். நம்பியார்
- டிஸ்கோ சாந்தி
- தளபதி தினேஷ்
- பாண்டு
- வினு சக்ரவர்த்தி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
---|---|---|---|
1. | "பொன்னெடுத்து வாரேன். " | மனோ, கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
2. | "கோடையிடி சத்தம்" | மனோ, எஸ். ஜானகி | |
3. | "நீலவேணி அம்மா நீலவேணி" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, சாய்பாபா குழுவினர் | |
4. | "மாதுளங்கனியே நல்ல மலர்வன" | இளையராஜா, எஸ். ஜானகி | |
5. | "மங்கலத்து குங்குமப்பொட்டு" | கே. எஸ். சித்ரா | வாலி |
வரவேற்பு
[தொகு]திரைப்படம் மோசமான விமரிசனங்களைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai – தமிழ் கவிதைகள் – நூற்று கணக்கில்!". டோடோவின் ரஃப் நோட்டு. Archived from the original on 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 8 October 2021.
- ↑ "சாமி போட்ட முடிச்சு" [Sami knot]. vellitthirai.com. Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Saami Potta Mudhichhu (1991) - IMDb" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ "Ilaiyaraaja – Sami Potta Mudichu (1991, Vinyl)". Discogs. Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) – Thamizh – Page 17". ilayaraja.forumms.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.