உமாபாய் குந்தாபூர்
உமாபாய் குந்தாபூர் | |
---|---|
![]() | |
சேவா தளத்தின் பெண்கள் பிரிவின் தலைவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | March 25, 1892 ஹூப்ளி , கருநாடகம் |
இறப்பு | 1992 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
உமாபாய் குந்தாபூர் (Umabai Kundapur) (1891-1992) கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய விடுதலை இயக்க வீராங்கனையாவார். இவர் சுதந்திர போராட்ட வீரர்களின் குழுவான பாகினி மண்டலின் நிறுவனராக இருந்தார். நாராயண் சுப்பாராவ் ஹார்திகர் நிறுவிய இந்துஸ்தானி சேவா தளத்தின் பெண்கள் பிரிவின் தலைவராகவும் இருந்தார். [1]
பிறப்பு மற்றும் கல்வி
[தொகு]1892 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி குந்தாப்பூரில் பிராமணரான தந்தை கோலிகேரி கிருஷ்ணராவ், தாயார் துங்காபாய் ஆகியோருக்குப் பிறந்த உமாபாய்க்கு பவானி கோலிகேரி என்ற பெயர் இருந்தது. 1898 இல், இவர்கள் குடும்பம் மும்பை நகருக்கு குடிபெயர்ந்தது.
சொந்த வாழ்க்கை
[தொகு]13 வயதில், சஞ்சீவ ராவ் என்பவரை 1905 இல் மணந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் இருந்தனர்.[2]
வாழ்க்கை
[தொகு]1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பாலகங்காதர திலகரின் இறுதி ஊர்வலத்தின் மூலம் உமாபாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட உத்வேகம் பெற்றார். அந்த சமயங்களில் காங்கிரசின் சேவையைப் பார்த்த பிறகு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தார்.
செப்டம்பர் 4, 1920 அன்று மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, உமாபாய் தனது சகோதரர் ரகுராம ராவ் மற்றும் கணவர் சஞ்சீவ ராவ் ஆகியோருடன் இயக்கத்தில் பங்கேற்றார். இவர் காதியின் பயன்பாட்டை ஊக்குவித்தார். வீடு வீடாகச் சென்று பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க ஊக்குவித்தார். கூடுதலாக, இவர் பல நாடகங்களை எழுதி மேடையில் நிகழ்த்தினார். நாடகங்களை மேடையேற்றுவதன் மூலம் மற்றவர்களை இயக்கத்தில் சேர ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இருந்தார்.
28 மார்ச் 1923 இல் காசநோயால் அவரது கணவர் சஞ்சீவ ராவ் இறந்த பிறகு, அப்போது 31 வயதாக இருந்த உமாபாய், தனது மாமனாருடன் ஹூப்ளிக்குத் திரும்ப முடிவு செய்தார். அங்கு இவரது மாமனார் ஆனந்த ராவ் ஹூப்ளியில் கர்நாடக அச்சகத்தை நடத்தி வந்தார். பின்னர் உமாபாய் 1923 இல் நாராயண் சுப்பாராவ் ஹார்திகரால் நிறுவப்பட்ட இந்துஸ்தானி சேவா தளத்தில் ஈடுபட்டார். இந்திய இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன். சங்கத்தில் சேர்ந்தது மட்டுமின்றி, மகளிர் பிரிவு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கூடுதலாக, உமாபாய் திலக் கன்யா பள்ளியை மேற்பார்வையிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதுவும் முதலில் ஹார்திகரால் நிறுவப்பட்டது.


இந்திய விடுதலைப் போராட்டம்
[தொகு]சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற உமாபாய், 1932ல் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 4 மாதங்கள் ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போது உமாபாய்க்கு மாமனார் ஆனந்த ராவ் இறந்த செய்தி கிடைத்தது. வலுவான ஆதரவாளராக இருந்த ஆனந்த ராவின் இழப்பு உமாபாயை மிகவும் பாதித்தது. அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரோஜினி நாயுடுவும் உமாபாய்க்கு ஊக்கம் அளித்து, போராட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறைமுகமாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். உமாபாய் விடுதலையானதும், ஆனந்த ராவ் நிறுவிய கர்நாடக அச்சகத்தை பிரித்தானிய அரசு கைப்பற்றியதையும், திலக் கன்யா பள்ளி மூடப்பட்டதையும் இவர் கண்டறிந்தார். கூடுதலாக, ஆனந்த ராவ் நிறுவிய பகினி மண்டல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சட்டவிரோதமானது என்று கருதப்பட்டது. இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், உமாபாய் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்து வந்தார்.

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல போராளிகள் உமாபாயின் இல்லத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு இவர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்கி வந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mahotsav, Amrit. "Umabai Kundapur". Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English). Retrieved 2024-03-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Karelia, Gopi (2022-01-23). "Umabai: When a Defiant Widow Led 150 Women to Fight for India's Freedom". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-03-13.
நூல் பட்டியல்
[தொகு]- Shintri, Sarojini (1983). Women Freedom Fighters in Karnataka (in English) (1st ed.). Karnataka: Prasaranga, Karnatak University. pp. 3 Sep 2008. ISBN 978-0836414851.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)