இளங்காடு
இளங்காடு (அ) இராசகிரி | |
---|---|
ஊராட்சி | |
ஆள்கூறுகள்: 10°50′06″N 78°55′37″E / 10.834960°N 78.926934°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஏற்றம் | 127 m (417 ft) |
மொழிகள் | |
• அலுவல்முறை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613104 |
வாகனப் பதிவு | TN49 |
மக்களவை தொகுதி | தஞ்சாவூர் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | திருவையாறு தொகுதி |
இளங்காடு (Elangadu) அல்லது இராசகிரி [1] (ஆங்கிலம்: Elangadu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள, பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது இராசகிரி எனவும் அழைக்கப்படுகிறது.[2]
பொருளாதாரம்
[தொகு]இந்தப் பகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாகும் உள்ளது. நெல் சாகுபடியுடன் சேர்த்து நெல், தேங்காய், வாழை மற்றும் கரும்பும் ஒரு பொதுவான தொழிலாகும்.
வரலாறு
[தொகு]இங்கு குடியிருப்பாளர்களின் தமிழ் மீதான ஆர்வமும், ஆசிரியர்களாக வேண்டும் என்ற அவர்களின் விருப்பமும் 1881 ஆம் ஆண்டு ‘நற்றமிழ் சங்கம்’ இக்கிராமத்தில் நிறுவப்பட்டது.
தமிழ் அறிஞர் பாண்டித்துரை தேவர் அந்த ஆண்டு சங்கத்தின் தொடக்க விழாவிற்கு இளங்காடு வந்தார். அன்றிலிருந்து தமிழ் கற்பிக்கப்படுகிறது. 2005 வரை, ஒவ்வொரு நாள் மாலை வேலையிலும் தமிழ் வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. யு.வி. சாமிநாத ஐயர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் மற்றும் பலர் உள்ளிட்ட அறிஞர்கள் இங்கு வந்து பேசியுள்ளனர்
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]ஜி நம்மாழ்வார். திருச்சி சிவா. ஜி முருகையன் சேதுரர் ஜி இளங்கோவன் பாப்புரெட்டியார்..
மக்கள்தொகை
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இளங்காடு மொத்த மக்கள் தொகை சுமார் 1600 ஆகும், அதில் 790 ஆண்கள் மற்றும் 810 பெண்கள். பாலின விகிதம் 10:20 ஆகவும், கல்வியறிவு விகிதம் 77.11% ஆகவும் இருந்தது.
கலாச்சாரம் ம்ற்றும் கோவில்கள்
[தொகு]ஸ்ரீ வளவனீஸ்வரர் கோவில், அத்தங்காத்த அய்யனார். ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில் ஸ்ரீ கண்ணன் கோவில் ஸ்ரீ சப்த கன்னிமார் கோவில் ஆண்டுதோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் திரெளபதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இளங்காடு ஊராட்சியில் 699 பேருக்கு விலையில்லா பொருள்கள்".தினமணி (17 பெப்ரவரி, 2014)
- ↑ http://www.onefivenine.com/india/villages/Thanjavur/Budalur/
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-04-16.