உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விடுதலை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய விடுதலைப் போராட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு‍ ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆங்கில அரசை விலக்குவது மற்றும் அங்கெல்லாம் சுதந்திர அரசை ஏற்படுத்தி சுய ஆட்சியை நிர்மாணிப்பது முதலிய பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்து செல்லப்பட்ட இயக்கம் ஆகும். இந்த இயக்கங்களின் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் 16-ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் போர்த்துக்கீசிய காலனிய விரிவாக்கத்தின் துவக்கத்திலும், 1700-களின் மத்திய காலம் மற்றும் இறுதிக் காலங்களில் வங்காளத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் செய்யப்பட்ட காலத்திலேயே காணப்படுகின்றன. முதல் அமைப்பு ரீதியான போராட்ட இயக்கம் வங்காளத்தில் நிறுவப்பட்டது. ஆனால் பின்னாளில் இது அரசியல் களத்தில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மைய நீரோட்ட இயக்கமாக வடிவமெடுத்தது. இதிலிருந்து இந்திய சோசலிச காங்கிரசும் நிறுவ வழிகோலியது.

இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட காலத்தில் இக்கட்சி சுதந்திரத்தை கோரும் கட்சியாக இருக்கவில்லை. இக்கட்சியை சேர்ந்த மிதவாத தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பொதுப்பணித்துறைக்கான தேர்வு எழுதுவதற்கான அடிப்படை உரிமைகள் மட்டுமே. அவர்கள் மிதவாத முறைகளான வேண்டுதல், மனுசெய்தல் மற்றும் போராட்டம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 1900-ஆம் ஆண்டுகளின் துவக்கம் பால கங்காதர திலகர் , லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், வ. உ. சிதம்பரம்பிள்ளை மற்றும் அரவிந்தர் போன்ற தலைவர்களால் முன்மொழியப்பட்ட அரசியல் சுதந்திரத்தை நோக்கிய அதிக மரபார்ந்த அணுகுமுறைகளைக் கண்டது. இரண்டாம் உலகப்போரின்போது இந்திய-ஜெர்மன் ஒப்பந்தம் மற்றும் காதர் சதித்திட்டத்தின் தோல்வி ஆகியவை உச்சநிலை அடைந்தபோது முதல் பத்தாண்டுகளில் தீவிர தேசியவாதமும் தோன்றியது.

சுதந்திரப் போராட்டத்தின் முடிவு மோகன்தாஸ் காந்தியால் வழிநடத்தப்பட்ட அஹிம்சை கொள்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதைக் கண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற மற்ற தலைவர்கள் பின்னாளில் வந்து இந்த அமைப்பிற்கான ராணுவ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டனர். நாட்டின் விவசாயிகள் மறறும் உழைக்கும் மக்களுக்கு அரசியல் சுதந்திரத்துடன் பொருளாதார சுதந்திரத்தையும் கோரிய சுவாமி சகஜானந்த சரஸ்வதி போன்றவர்களும் இருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் தெற்காசியாவிலிருந்து சுபாஷ் சந்திர போஸால் வழிநடத்தப்பட்ட ஐஎன்ஏ மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்கள் உச்சத்திலிருந்தன.

தங்களை குடியரசாக அறிவித்துக்கொள்வதற்கான இந்திய அரசியலமைப்பைப் பெற்ற ஜனவரி 26 1950 வரை இந்தியா முடியாட்சி உரிமையுள்ள நாடாகவே இருந்து வந்தது. பாகிஸ்தான் 1956-இல் தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்டாலும், ஜனநாயக ஆட்சியை ஒத்திப்போடும் வகையில் நடந்த பல்வேறு உள்நாட்டு அதிகாரப் போராட்டங்களையும் கண்டது. 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் உள்நாட்டுப் போர் உச்சத்திலிருந்தபோது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனி நாடாக பிரிந்துசென்றது.

உலகின் மற்ற பகுதிகளில் இதேபோன்ற இயக்கங்கள் உருவாவதற்கு பிரதான ஊக்குவிப்பாளராக இருந்த இந்த சுதந்திர இயக்கம், பிரித்தானிய பேரரசு ஏறத்தாழ பிரிந்து போவதற்கும் பிளவுபடுவதற்கும் மற்றும் அது காமன்வெல்த் நாடுகளாக மாற்றியமைக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.

பின்புலம்

[தொகு]

போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பிறகு அவரை ஒட்டி, கறிமசாலா பொருட்கள் மற்றும் உணவுக்கு சுவை சேர்க்கும் பொருட்களைத் தேடியும் அதன் வணிகத்தில் ஈடுபடவும், ஐரோப்பிய வணிகர்கள், கோழிக்கோடு துறைமுகத்தில் 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினர். 1757-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப்போருக்குப் பின் இராபர்ட் கிளைவின் கீழிருந்த பிரித்தானிய ராணுவம், வங்காள நவாபைத் தோற்கடித்ததன் மூலம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தன்னை இந்தியாவில் தம்மை ஆட்சியாளராக நிலை நிறுத்திக்கொண்டது. இந்த நிகழ்வே இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் தொடக்கமாக கொள்ளப்படுகிறது. பக்சர் போருக்குப் பின் 1765-ஆம் ஆண்டில் வங்காளம், பிஹார் மற்றும் ஒரிசா மீதான நிர்வாக உரிமைகளை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி பெற்றது. 1849-ஆம் ஆண்டு மகாராஜா ரஞ்சித் சிங்கின் மறைவுக்குப் பின்னரும், முதல் ஆங்கில-சீக்கியப் போர் (1845–46) மற்றும் இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போர் (1848–49) ஆகியவற்றிற்குப் பின்னரும் 1849-ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி, பஞ்சாபையும் இணைத்துக்கொண்டது.

இராபர்ட் கிளைவ், பிளாசிப்போருக்குப் பின் மீர் ஜாபருடன்

பிரித்தானிய நாடாளுமன்றம் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட நிர்வாகங்களை ஆளுவதற்கு ஏதுவாக, 1773-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறைச் சட்டம், 1784-ஆம் ஆண்டில் இந்தியச்சட்டம் மற்றும் 1813-ஆம் ஆண்டில் தனியுரிமைச் சட்டம் ஆகிய சட்டத் தொடர்களை நிறைவேற்றியது. இவையனைத்தும் பிரித்தானிய அரசாங்க ஆட்சியை வலுப்படுத்த உதவின. 1835- ஆண்டில் ஆங்கிலம் பயிற்சி மொழியாக்கப்பட்டது. மேற்கத்திய கல்வி கற்ற இந்து உயர்குடியினர் தீண்டாமை (ஜாதி), குழந்தை திருமணம் மற்றும் சிதையேறுதல் ஆகிய சர்ச்சைக்குரிய இந்து சமய சமூக பழக்க வழக்கங்களைக் களைந்தெறிய முயன்றனர். கல்கத்தா மற்றும் பம்பாயில் தோன்றிய இலக்கிய மற்றும் விவாத இயக்கங்கள், வெளிப்படையான அரசியல் சொற்பொழிவுகளுக்கு அடிகோலியது. இந்த முன்னோடி சீர்திருத்தவாதிகளின் கல்வியறிவு மற்றும் இதழியல் துறையை திறமையாக பயன்படுத்திக்கொண்ட விதம் ஆகியவை, காலனிய இந்தியாவிற்குள்ளாக சீர்திருத்தங்களை பெரிய அளவில் கொண்டுவரக்கூடிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. அச்சீர்த்திருத்தங்கள், இந்தியச் சமூக விழுமியங்கள் மற்றும் இங்குள்ள சமயச் சடங்குகளோடு சமரசம் செய்துகொள்ளாதவாறு உருவாகிற்று.

இந்த தற்காலப் போக்குகள் இந்தியச் சமூகத்தின் மீது செல்வாக்கு செலுத்தியபோதிலும், இந்தியர்கள் பிரித்தானிய ஆட்சியை வெறுப்பது அதிகரித்தபடியே இருந்தது. ஹென்றி ஓவரியின் நினைவுக்குறிப்புகளான ஒன்பதாவது லான்சர்ஸ் இது பொறுப்பில்லாத சேவகர்களுக்கான "நல்ல விளாசல்" எனக் குறிப்பிட்டது.[2] கரிமசாலா பொருட்கள் வணிகரான ஃபிராங்க் பிரவுன் வேலைக்காரர்கள் கொடுமைப்படுத்தப்படும் கதைகள் மிகைப்படுதப்படவில்லை எனவும் அதிகாரவர்க்கத்திடம் பிடிபட்டு "வேண்டுமென்றே அடித்துத் துன்புறுத்தப்படும்" மக்களைப்பற்றித் தனக்குத் தெரியும் என்றும் தனது உறவினருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.[3] பிரித்தானியர்கள் இந்தக் கண்டத்தை ஆதிக்கம் செலுத்துவது அதிகரித்துக்கொண்டிருக்கையில் உள்ளூர்வாசிகளின் பழக்கவழக்கங்களைத் தூற்றுவது அதிகரித்துக்கொண்டே சென்றது, எடுத்துக்காட்டாக மசூதிகளில் விருந்துகளை நடத்துவது, தாஜ் மகாலின் மேல்தளத்தில் படையணி இசைக்கு நடனமாடுவது, சந்தடிமிகுந்த கடைத்தெருக்களில் மக்களை சாட்டைகளைக் கொண்டு விளாசி வழியேற்படுத்துவது (ஜெனரல் ஹென்றி பிளேக் விவரித்தபடி) மற்றும் சிப்பாய்களை தவறாக நடத்துவது என்பன. 1849-ஆம் ஆண்டில் பஞ்சாப் இணைக்கப்பட்டவுடன், சிப்பாய்களுக்கிடையே பல கட்டத்தில் கலகங்கள் வெடித்து அவை படை பலத்தால் அடக்கப்பட்டன.

1857 ஆம் ஆண்டு இந்தியப் புரட்சி

[தொகு]
1857 நவம்பரில், 93-வது ஹைலேண்டர்கள் மற்றும் 4வது பஞ்சாப் ரெஜிமெண்ட் கிளர்ச்சியாளர்களுடன் போரிட்ட பின்னர் சிகந்தராபாத்

1857 ஆம் ஆண்டு இந்தியக் கலகம் என்பது 1857–58 இல் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்ட கிளர்ச்சிக் காலமாகும். இந்தக் கலகம் பல்லாண்டுகளாக இந்திய சிப்பாய்கள் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இடையே நிலவி வந்த இனஞ்சார்ந்த மற்றும் கலாச்சார வித்தியாசங்களின் காரணமாக உருவாயின. முகலாயர்கள் மற்றும் முன்னாள் பேஷ்வாக்கள் போன்ற இந்திய ஆட்சியாளர்கள் மீது பிரிட்டிஷார் அக்கறையின்றி நடந்துகொண்டது மற்றும் அவாத் இணைத்துக்கொள்ளப்பட்டது போன்றவை இந்தியர்களுக்கிடைய எதிர்ப்பை உருவாக்குவதற்கான அரசியல் காரணிகளாக அமைந்தன. [[ஜேம்ஸ் பிரவுன்-ராம்சே, முதலாம் டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கை, தவறான மற்றும் ஏமாற்றுவாத கோட்பாடுகள் மற்றும் டெல்லிக்கு அருகாமையிலிருந்த குதுப்மினாரிலிருந்து முகலாயர்களின் வம்சாவளியினரை அவர்களுடைய பாரம்பரிய அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விஷயம் பெரிதுபடுத்தப்பட்டது ஆகியவையும் சிலரை கோபமுறச் செய்தது. 557 காலிபர் வகை 1853 என்பீல்ட் (P/53)துப்பாக்கி ரவைகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக ஏற்பட்ட வதந்தியே இந்தக் கலகத்தைத் தூண்டியதற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. சிப்பாய்கள் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவதற்கு முன் அந்த தோட்டா உறைகளை பற்களால் கடித்து உடைக்க வேண்டியிருந்தது. அதில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு இருந்தால் அது இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்களை காயப்படுத்துவதாக இருந்தது. 1857 இல் சிப்பாய்கள் (பிரித்தானிய ராணுவத்திலிருந்த இந்திய வீரர்கள்) தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய தோட்டா உறைகளை பயன்படுத்த மறுத்தனர். ஆங்கில அரசு புதிய தோட்டாக்களை மாற்றிக் கொடுக்கவும், சிப்பாய்கள் தாங்களே மெழுகு மற்றும் தாவர எண்ணெயிலிருந்து உருவான உயவுப்போருளை பயன்படுத்தி கொள்ளவும் சம்மதித்தது, ஆனால் வதந்தி நீடித்தது.

1857 ஆம் ஆண்டு மார்ச் மாதம் |பாரக்பூரில் ஒன்பதாவது நேடிவ் இன்பான்ட்ரியை சேர்ந்த மங்கள் பாண்டே என்ற வீரன் தனது ஆங்கிலேய இராணுவ உயரதிகாரியையும் உதவி அதிகாரியையும் தாக்கி காயப்படுத்தினான். ஜெனரல் ஹார்சே, பாண்டே ஒருவகையான "மத வெறியில்" உள்ளார் என்று கூறி அவரை கைது செய்ய ஜமேதாருக்கு உத்தரவிட்டார், ஆனால் ஜமேதார் மறுத்து விட்டார். ஏப்ரல் 7இல் ஜமேதாருடன் சேர்த்து மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார். முழு படைப்பிரிவும் மொத்தமாக தண்டனையளிக்கப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டது. மே 10 இல் 11வது மற்றும் 12வது குதிரைப்படை கூடியபோது அவர்கள் அணிவகுக்க மறுத்து உயர் அதிகாரிகளுக்கு எதிராக திரும்பினர். பிறகு அவர்கள் 3வது படைப்பிரிவை விடுவித்து மே 11இல் சிப்பாய்கள் டெல்லியை அடைந்து மற்ற இந்தியர்களுடன் சேர்ந்துகொண்டனர். கடைசி முகலாய மன்னர் இரண்டாம் பகதூர் ஷாவின் இருப்பிடமான டெல்லி செங்கோட்டை சிப்பாய்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அவர்கள் அவருடைய சிம்மாசனத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர் பிறகு மெதுவாக அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தக் கலகத்திற்கு தலைமையேற்றார்.

விரைவில் வட இந்தியா முழுவதும் கலகம் பரவியது. மீரட், ஜான்சி, கான்பூர், லக்னோ ஆகிய இடங்களிலும் கலகம் பரவியது. ஆங்கிலேயர்கள் மெதுவாகவே பதிலடி கொடுத்தனர், ஆனால் அது காட்டுமிராண்டித்தனமானதாக இருந்தது. பிரிட்டிஷார் கிரிமியன் போரிலிருந்து துருப்புக்களை வரவழைத்ததுடன், சீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஐரோப்பியத் துருப்புக்களையும் இந்தியாவிற்குத் திருப்பிக்கொண்டனர். பால்-கி-செரேயில் டெல்லிக்கு அருகாமையில் கலகக்காரர்களின் முக்கிய ராணுவத்தோடு பிரிட்டிஷார் சண்டையிட்டதோடு, நகரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் டெல்லியை நோக்கித் திரும்பினர். டெல்லி முற்றுகை ஜூலை 1இல் இருந்து ஆகஸ்டு 31 மட்டுமே நீடித்தது. ஒருவார தெருச்சண்டைக்குப் பின்னர் பிரிட்டிஷார் அந்த நகரத்தை திரும்பப் பெற்றனர். முக்கியத்துவம் வாயந்த கடைசி போர் 1858 ஜூலை 20 இல் குவாலியரில் நடைபெற்றது. இப்போரின்போதுதான் இராணி இலட்சுமிபாய் கொல்லப்பட்டார்.1859 வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சண்டைகள் நடந்தன, ஆனால் பெரும்பாலான புரட்சியாளர்கள் அடக்கப்பட்டனர். இதில் சண்டையிட்ட குறிப்பிடத்தக்க நபர்கள் அவாத்தின் முன்னாள் அரசருடைய ஆலோசகரான மௌலவி அகமதுல்லா ஷா, நானா சாகிப்; அவரது உறவினரான ராவ் சாஹிப் மற்றும் அவரது சேவகர்கள், தாந்தியா தோபே மற்றும் அஸிமுல்லா கான்; ஜான்ஸி ராணி; பிஹாரிலுள்ள ஜகதீ்ஸ்பூரின் ராஜ்புத் முதன்மைத் தலைவரான குன்வார் சிங்; முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் ஷாவின் உறவினர் ஃபிருஸ் சாகா மற்றும் ஹரியானா நாசிப்பூரில் பிரிட்டிஷாருடன் போரிட்ட ரிவாரியைச் சேர்ந்த ராவ் துலா ராம் மற்றும் பிரான் சுக் யாதவ் ஆகியோராவர்.

பின்விளைவுகள்

[தொகு]

நவீன இந்திய வரலாற்றில் 1857 இல் நடைபெற்ற போர்தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஆங்கிலேயர்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை அழித்துவிட்டு ஆங்கில முடியரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்தினர். முடியரசின் பிரதிநிதியாக இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். புதிய ஆட்சிக் கொள்கையின் அறிவிப்பின்படி "இந்திய அரசர்கள், தலைவர்கள் மற்றும் மக்கள்" ஆகிய அனைவரும் பிரித்தானிய ஆட்சியின்கீழ் சமமாக நடத்தப்படுவார்கள் என்று விக்டோரியா அவர்கள் அறிவித்தார், ஆனால் பிரித்தானிய அரசின் மீதான நம்பிக்கையின்மை 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு முன்னோடியானது.

ஆங்கிலேய அரசு சீர்த்திருத்தம், அரசியல் புனரமைப்பு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளில் இறங்கியதோடு இந்தியாவில் உயர் ஜாதியினர் மற்றும் அதிகார வர்க்கத்தினரை அரசுடன் ஒன்றிணைக்க முயற்சித்தது. அவர்கள் நில ஆக்கிரமிப்பு, சமய சகிப்பு சட்டம் ஆகியவற்றை நிறுத்தி இந்தியர்களை அரசுப் பணிகளில் அமர்த்தியதுடன் முக்கியமாக கீழ்நிலைப் பணியாளர்களாக்கிக் கொண்டனர். அவர்கள் சொந்த ஊரைச் சேர்ந்த பிரித்தானிய வீரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதுடன், காலாட்படையை கையாள பிரித்தானிய வீரர்களை மட்டுமே அனுமதித்தனர். இரண்டாம் பஹதுர் ஷா பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார், அங்கு அவர் 1862 இல் மரணமடைந்தார் இது கடைசியாக முகலாய]] சாம்ராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1877 இல் அரசி விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார்

வீரவரலாறு

அமைப்புரீதியாக்கப்பட்ட இயக்கங்களின் எழுச்சி

[தொகு]

சிப்பாய் கலகத்தைத் தொடர்ந்த பல்லாண்டுகளும் தேசிய மற்றும் பிரதேச அளவிலான இந்திய தலைமை குறித்த இந்திய பொதுமக்கள் அபிப்பிராயம், அரசியல் விழிப்புணர்வு, தெளிவுபடுத்தலின் காலமாக இருந்தது. 1867 இல் தாதாபாய் நௌரோஜி கிழக்கிந்திய கூட்டமைப்பை அமைத்தார், 1876 இல் சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார். ஓய்வுபெற்ற பிரித்தானிய பொதுப்பணி சேவகர் ஏ.ஓ.ஹ்யூமின் பரிந்துரைகளால் தூண்டப்பெற்று 1885 ஆம் ஆண்டு மும்பையில் கூடிய எழுபத்து மூன்று இந்தியப் பிரதிநிதிகள் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவினர். அவர்கள் பெரும்பாலும் முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் தேர்ந்த மேற்கத்திய கல்வியாளர்களாகவும், அந்தந்த மாகாண சீர்திருத்தவாதிகளாகவும் சட்டம், ஆசிரியர், இதழியலைத் தொழிலாகவும் கொண்டிருந்தனர். இதன் துவக்கநிலையில் காங்கிரஸ் நன்கு வரையறுக்கப்பட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் அரசியல் அமைப்பிற்குத் தேவையான சில மூலாதாரங்களை மட்டுமே கட்டுப்படுத்தியது. இது பிரித்தானிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள வருடாந்திர அடிப்படையில் சந்திக்கின்ற மற்றும் குறைந்த சிக்கல் நிரம்பிய குடியுரிமைகள் அல்லது அரசாங்கத்திலான குறிப்பாக பொதுப்பணித் துறையில் வாய்ப்புக்கள் போன்றவற்றின் மீதான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற மிகவும் விவாதம் செய்கின்ற ஒரு அமைப்பாகவே இருந்தது. இந்தத் தீர்மானங்கள் அவ்வப்போது வைஸ்ராயின் அரசாங்கத்தின், அவ்வப்போது பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டன, ஆனால் காங்கிரஸின் துவக்ககால பலன்கள் போதுமானவையாக இல்லை. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டாலும் காங்கிரஸ் நாட்டுப்புற மேல்வர்க்க நலன்களின் பிரதிநிதியாகவே இருந்தது; மற்ற பொருளாதார பின்னணிகளிலிருந்து வந்த உறுப்பினர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.

ஆர்ய சமாஜம் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்டது) மற்றும் 'பிரம்ம சமாஜம் ராஜா ராம் மோகன்ராயாலும் மற்ற சிலராலும் நிறுவப்பட்டது போன்ற சமூக-சமய குழுக்களின் செல்வாக்கு இந்திய சமூகம் மறுசீரமைப்படைவதற்கு முன்னோடியாக இருந்தமைக்கான ஆதாரங்களாக உள்ளன. சமய சீர்திருத்தம் மற்றும் சமூக பெருமிதத்தின் வலியுறுத்தல் முழுமையான தேசபக்திக்கான பொதுமக்கள் அமைப்பின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர்,சுவாமி விவேகானந்தர்,பால கங்காதர திலகர், லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரவிந்தர், சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, சர் சையது அகமது கான் , ரபீந்திரநாத் தாகூர் மற்றும் தாதாபாய் நவ்ரோஜி போன்றோரின் உழைப்பு விடுதலை உணர்வுக்கான புத்தெழுச்சியை பரவச்செய்தது.

1900 ஆம் ஆண்டு வாக்கில் காங்கிரஸ் அகில இந்திய அமைப்பாக தோன்றியபோதிலும், அரசாங்கத்திற்கான தங்களது பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்று கருதிய முஸ்லிம்களை கவருவதில் காங்கிரசுக்கு ஏற்பட்ட ஒரே தோல்வியால் அதனுடைய சாதனையானது தீர்மானிக்கப்படாமலே போனது. மதமாற்றம், பசுவதை மற்றும் உருது மொழி எழுத்தை அரேபிய எழுத்து வடிவத்திலேயே வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு இந்து சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததானது, காங்கிரஸ் மட்டுமே இந்திய மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் என்றால் சிறுபான்மையினர் மற்றும் உரிமை குறித்த அவர்களது கவலைகளை ஆழமாக்கியது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் சர் சையது அகமது கான் தொடங்கிய முகமதியர் ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி 1920 இல் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது. 1875 இல் தொடங்கி அதன் உச்சகட்டமாக முஸ்லீம்களின் மறுசீரமைப்பிற்கான இயக்கத்தைத் தொடங்கினார். நவீன மேற்கத்திய அறிவோடு இஸ்லாமின் பொருத்தப்பாட்டை வலியுறுத்துவதன் மூலம் வசதிபடைத்த மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருதல் ஆகும். இருப்பினும் இந்திய முஸ்லீம்களுக்கிடையே இருந்த வேற்றுமை ஒரேவிதமான கலாச்சார மற்றும் அறிவுப்பூர்வ புனரமைப்பைக் கொணர்வதை சாத்தியமற்றதாக்கியது.

இந்திய தேசியவாதத்தின் எழுச்சி

[தொகு]

காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே முதலில் பீறிட்டெழுந்த தேசியவாத உணர்வு, அரசாங்க அமைப்புக்களில் பிரதிநிதித்துவம் செய்வதற்கான விருப்பம் அதாவது சட்டம் உருவாக்குதல் மற்றும் இந்திய நிர்வாகப் பிரச்சினைகளில் ஓட்டளிக்கும் விருப்பம் எழுந்தபோது உருவானது. காங்கிரஸ்காரர்கள் தங்களைத் தாங்களே விசுவாசிகளாகக் கண்டனர், ஆனால் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தில் தாங்களும் பங்கேற்க விரும்பினர். இந்தப் போக்கிற்கு பிரித்தானிய பொதுச் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதனுடைய முதல் இந்திய உறுப்பினரான தாதாபாய் நௌரோஜியால் வடிவம் கொடுக்கப்பட்டது.

தேசம் செல்லவேண்டிய இடமாக சுயராஜ்ஜியத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய தேசியவாதி பால கங்காதர திலகர் ஆவார். திலகர் இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் மதிப்பீடுகளை அலட்சியப்படுத்தி மங்கிப்போகச் செய்த பிரித்தானிய கல்வி அமைப்பிற்கு ஆழமான எதிர்ப்பு தெரிவித்தார். அவர் இந்திய தேசியவாதிகளின் கருத்துரிமைக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டது, தங்கள் நாட்டின் விவகாரங்களில் சாதாரண இந்தியருக்கு குரல் அல்லது பங்கேற்பு இல்லாதது கண்டு சினம்கொண்டார். இத்தகைய காரணங்களால் அவர் சுயராஜ்ஜியத்தையே இயல்பான மற்றும் ஒரே தீர்வாகக் கண்டார். "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, நான் அதை அடைந்தே தீருவேன்" என்ற அவரது வாக்கியம் இந்தியர்களைத் தூண்டுவதற்கான மூலாதாரமாக அமைந்தது.

1892 இல் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ஹிந்து, சுதேசமித்திரன் பத்திரிக்கைகளின் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர், கோலார் சுரங்கத்திலிருந்து ஆண்டுதோறும் எடுக்கப்படும் 20 கோடி மதிப்புள்ள தங்கத்தை ஆங்கிலேயர் தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று விடுகின்றனர். இது நீடித்தால் இந்தியாவில் வெறும் பாறைகள் மட்டுமே மிஞ்சும் என்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆங்கிலேய அரசு கட்டுப்படுத்தி இருப்பதையும் தாக்கிப் பேசியதால் ஆங்கில அரசு அவரை சிறையில் அடைத்தது.[1]

1907 இல், காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது. அவர் அடிப்படைவாதம் என்று கருதப்பட்டவற்றை ஏற்றுக்கொண்டார். பிரித்தானிய இராஜ்ஜியத்தை மக்கள் நேரடியாகத் தாக்கவேண்டும் என்றும், பிரிட்டிஷார் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் கைவிட வேண்டும் என்று விரும்பினார். இதேபோன்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த பிபின் சந்திர பால், வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் லாலா லஜபத் ராய் போன்ற வளர்ந்துவரும் மக்கள் தலைவர்களின் உதவியைப் பெற்றார். அவர்களின் கீழ், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா, வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகியவை மக்கள் மற்றும் இந்தியாவின் தேசியவாதத்திற்கான தேவை குறித்த வடிவத்தைப் பெற்றன. வன்முறை மற்றும் ஒழுங்கு குலைவை ஊக்கவிப்பதாக திலகரை கோகலே விமர்சித்தார். 1906 ஆம் ஆண்டு காங்கிரஸ் பொதுமக்கள் உறுப்பினர்களைக் கொண்டிருக்கவில்லை, கட்சி இரண்டாகப் பிரிந்தது.

கில்பர்ட் எலியட்-முர்ரே-கின்மவுண்ட், 4ஆம் யேர்ல் மிண்டோ|மிண்டோ (1905–10) வைஸ்ராயை சந்தித்த முஸ்லீம் பிரதிநிதிகள் குழு நிலுவையிலிருக்கும் அரசியலமைப்புச் சீரமைப்பிலிருந்து அரசாங்க சேவைகள் மற்றும் தேர்தல்களில் சிறப்புப் பரிசீலனைகள் உள்ளிட்ட சலுகைகளைக் கோரியது. 1909 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் முஸ்லீம்களுக்கென்று நிர்ணயிக்கப்படும் தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பிரித்தானிய அரசாங்கம் முஸ்லீம் லீகின் சில மனுக்களை ஏற்றுக்கொண்டது. "தேசத்திற்குள்ளான தேசம்" என்ற குரலாக ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் காங்கிரஸிலிருந்து தங்களுடைய பிரிவினையை முஸ்லீம் லீக் வலியுறுத்தியது.

வங்காளப் பிரிவினை

[தொகு]

1905 ஆம் ஆண்டு, வைஸ்ராயும் கவர்னர் ஜெனரலுமான (1899–1905) ஜார்ஜ் நதானியல் கர்ஸான், முதலாம் கெட்லஸ்டன் மார்க்யூ கர்ஸான், வங்காள இந்து அறிவுஜீவிகள் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு செலுத்திய பெரும் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த பகுதியில் நிர்வாகத்திறனை மேம்படுத்துவதற்காக வங்காளப் பிரிவினை (1905) உத்தரவிட்டார். இந்தப் பிரிவினை வங்காளிகளுக்கு அதிர்ச்சியூட்டியது. அரசாங்கம் இந்திய மக்களின் அபிப்பிராயத்தை கேட்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அந்தச் செயல்பாடு பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதிபலிப்பதாகவும் இருந்தது. கொந்தளிப்பான சூழ்நிலை தெருக்களிலும் பத்திரிக்கைகளிலும் பரவியது, காங்கிரஸ் கட்சி சுதேசி கொள்கையின் கீழ் பிரித்தானிய தயாரிப்புகளை புறக்கணிக்கத் தொடங்கியது. மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கைகளில் ராக்கி கட்டிக்கொண்டும் ஆரந்தன் (உணவு எதுவும் சமைக்காமை) அனுசரித்தும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

வங்காளப் பிரிவினையின்போது புதிய முறைகளிலான போராட்டம் அறிவிக்கப்பட்டது. இவை சுதேசி மற்றும் புறக்கணிப்பு போராட்டங்களுக்கு வழிவகுத்தது. காங்கிரஸ் வழிநடத்திய பிரித்தானிய பொருட்களை புறக்கணித்தல் போராட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததோடு சிப்பாய் கலகத்திலிருந்து வெளித்தெரியாத அளவிற்கு இருந்த பிரித்தானிய படைகளுக்கான எதிர்ப்பையும் வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியான வன்முறைகளும் கொந்தளிப்புகளும் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டன (பார்க்க அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு). பிரிட்டிஷார் 1909 இல் தொடர்ச்சியான அரசியலமைப்பு மறுசீரமைப்புகளை அறிவித்தும், பேரரச மற்றும் மாகாண சபைகளில் சில மிதவாதிகளை நியமித்தும் இந்தச் சூழ்நிலையத் தணிக்க முயற்சித்தனர். பிரிட்டிஷார் கூடுதல் நன்மதிப்பு நடத்தையாகக் கண்டது என்னவென்றால், 1911 இல் பேரரசரான ஐந்தாம் ஜார்ஜ் டெல்லி தர்பார்#1911 ஆம் ஆண்டு தர்பார் (தங்கள் ஆட்சியாளர் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கான விஷயங்களுக்காக கூட்டப்படும் பாரம்பரிய மன்றம்) கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகைபுரிந்தார், அச்சமயத்தில் அவர் வங்காளப் பிரிவினையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு, பின்னாளில் புது டெல்லி ஆன டெல்லியின் வடக்குப்பகுதியில் உடனடியாக கட்டப்படவிருந்த புதிதாக திட்டமிடப்படும் நகரத்திற்கு தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து மாற்றுவதாகவும் அறிவித்தார். இருப்பினும், 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் நடத்தப்பட்ட இடமாற்ற விழாவானது, பின்னாளில் டெல்லி-லாகூர் சதித்திட்டம் என்று அறியப்பட்ட இந்திய வைஸ்ராய் சார்லஸ் ஹர்டிங்கை கொலைசெய்வதற்கு நடந்த முயற்சியாகக் குறிப்பிடப்பட்டது.

முதல் உலகப் போர்

[தொகு]

முதலாம் உலகப்போர், பிரிட்டிஷார் துவக்கத்தில் இந்தியக் கலகம் குறித்து கொண்டிருந்த அச்சங்களுக்கு மாறாக, மையநீரோட்ட அரசியல் தலைமைத்திற்குள்ளிருந்து பிரித்தானிய ஆட்சிக்கான விசுவாசம் மற்றும் நன்மதிப்பின் உணர்ச்சிமிகு வெளிப்பாட்டுடன் தொடங்கியது. ஆட்களையும் மூலாதாரங்களையும் வழங்கியதன் மூலம் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளுக்கு இந்தியா பெருமளவில் பங்களித்தது. கிட்டத்தட்ட 1.3 மில்லியன் இந்திய வீரர்களும் தொழிலாளர்களும் ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் போரிட்டனர், அதேசமயம் இந்திய அரசாங்கமும் இளவரசர்களும் பெரிய அளவிலான உணவு, பணம் மற்றும் வெடிப்பொருள்களை அனுப்பி வைத்தனர். இருப்பினும் வங்காளமும் பஞ்சாபும் (இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்) எதிர் காலனிய நடவடிக்கைகளின் கொந்தளிப்புகள் நிரம்பிய இடங்களாகவே இருந்து வந்தன. பஞ்சாப் கொந்தளிப்புகளோடு மிக நெருக்கமாக இணைந்தபடி அதிகரித்துவந்த வங்காள தேசியவாதம் பிரதேச நிர்வாகத்தை ஏறக்குறைய முடக்கிப்போட்டுவிடும் அளவிற்கு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.[2][3] போரின் துவக்கத்திலிருந்தும் இந்தியாவிலிருந்து வெளியேறிவர்கள் குறிப்பாக பெர்லின் கமிட்டியாலும் கதர் கட்சியாலும் தலைமையேற்கப்பட்ட அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனியிலிருந்து வந்தவர்கள், அயர்லாந்து குடியரசுடன் 1857 கலகத்தை இணைத்து இந்தியாவில் கலகத்தை தூண்டுவதற்கது முயற்சி செய்தனர், ஜெர்மானியர்களும் துருக்கியர்களும் இந்து-ஜெர்மானிய சதி என்று அழைக்கப்பட்ட பெரும் சதித்திட்டத்திற்கு உதவினர்[4][5][6] இந்த சதித்திட்டம் பிரித்தானிய இந்தியாவிற்கெதிராக ஆப்கானிஸ்தான் பேரணி நடத்தவும் தூண்டியது.[7] பல்வேறுவிதமான தோல்வியில் முடிந்த முயற்சிகள் கலகத்தின்போது செய்யப்பட்டன, இவற்றின் கதர் சதித்திட்டம்-பிப்ரவரி 1915 கலகத் தி்ட்டமும், 1915 சிங்கப்பூர் கலகமும் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இந்த இயக்கம் பெரிய அளவிலான சர்வதேச எதிர்-உளவு செயல்பாட்டினாலும் பத்து வருடங்களுக்கு நீடித்த டிராகோனியன் அரசியல் சட்டங்களினாலும் (1915 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டம்) முறியடிக்கப்பட்டது.[8][9]

முதல் உலகப்போரின் பின்விளைவுகளாக ஏற்பட்ட உயர் உயிரிழப்பு விகிதம், அதிக வரிவிதிப்பினால் ஏற்பட்ட உயர்ந்த பணவீக்கம், பரந்த அளவில் பரவிய இன்புளூயன்ஸா கொள்ளைநோய் மற்றும் போரின்போது ஏற்பட்ட வர்த்தகத்தின் பாதிப்பால் ஆகியவை இந்திய மக்கள் மீதான பாதிப்புக்களை அதிகப்படுத்தியது. பிரித்தானிய ஆட்சியைத் தூக்கியெறிய இந்திய வீரர்கள் இந்தியாவிற்குள் ஆயுதங்களைக் கடத்தி வந்தனர். போருக்கு முந்தைய தேசியவாத இயக்கம் மிதவாத மற்றும் அடிப்படைவாத குழுக்களாக காங்கிரசிற்குள் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து ஒருங்கிணைந்த முன்னணியாக நிலைப்பாடு எடுக்கும் விதமாக புதுப்பிக்கப்பட்டது. 1916 இல், அரசியல் அதிகாரத்தை மாற்றித்தருதல் மற்றும் இந்தப் பிரதேசத்திலான இஸ்லாமின் எதிர்காலம் ஆகிய பிரச்சினைகளின் மீதான முஸ்லீம் லீக் உடன் செய்துகொண்ட லக்னோ உடன்படிக்கை என்ற தற்காலிக கூட்டணியை மோசடி செய்வதில் காங்கிரஸ் வெற்றிகரமாக ஈடுபட்டது.

பிரிட்டிஷார்களும் "இனிப்பும் தண்டனையும்" என்ற அனுகுமுறையை போரின்போது இந்தியாவின் உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும், புதுப்பிக்கப்பட்ட தேசியவாத கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் பின்பற்றியது. 1917 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்திய தேசத்திற்கான செயலாளரான எட்வின் சாமுவேல் மாண்டேகு இந்தியாவிற்கான பிரித்தானிய கொள்கை "பிரித்தானிய பேரரசின் ஒருங்கிணைந்த பகுதியாக நிர்வாகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், சுயாட்சி நிறுவனங்களின் படிப்படியான முன்னேற்றத்திலும் இந்தியர்களின் கூட்டமைப்பை அதிகப்படுத்துவதாக இருக்கும்" என்று அறிவித்தார். முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை அடைவதன் அர்த்தம் தேர்வுசெய்யப்பட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பதவியிலமர்த்தப்பட்ட பிரித்தானிய அதிகாரிகளும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இரட்டை நிர்வாக முறை அல்லது இரட்டை ஆட்சி முறையின் கொள்கையை அறிமுகப்படுத்தும் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம் பின்னாளில் போற்றிப் பேணுவதாக இருந்தது. இந்தச் சட்டம் மத்திய மற்றும பிரதேச உறுப்பினர்களுக்கு விரிவாக்கப்பட்டதோடு வாக்களிக்கும் உரிமையை குறிப்பிடத்தக்க அளவிற்கு விரிவுபடுத்தியது. பிரதேச அளவிலான குறிப்பிட்ட உண்மையான மாற்றங்களின் முன்மொழிவில் அமைக்கப்பட்டவை: விவசாயம், உள்ளூர் அரசாங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் பொதுப் பணிகள் போன்ற சர்ச்சைகளற்ற அல்லது "மாற்றித்தரப்பட்ட" பல்வேறு இலாக்காக்கள் இந்தியர்களுக்கு மாற்றித்தரப்பட்டன. அதேசமயம் நிதி, வரி விதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் போன்ற மிகவும் சிக்கலான விஷயங்கள் பிரிட்டிஷாரிடமே இருந்தன.

காந்தியின் இந்திய வருகை

[தொகு]

மோகன்தாஸ் காந்தி (மகாத்மா காந்தி என்றும் அறியப்படுபவர்), தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியமான தலைவராக இருந்தார் என்பதுடன், பிரிவினை அடிப்படைவாதம் மற்றும் உழைப்புச் சுரண்டல் மற்றும் ரௌலட் சட்டம் போன்ற போலீஸ் அடக்குமுறை சட்டம் போன்றவற்றின் குரல்வழி எதிர்ப்பாளராகவும் இருந்தவராவார். இந்தப் போராட்டங்களின்போது பாபா ராம் சிங்கின் (1872 இல் பஞ்சாபில் குக்கா இயக்கத்தை வழிநடத்தியற்தாக பிரபலமானவர்) தத்துவத்தால் தூண்டப்பெற்ற சத்தியாக்கிரக கருத்தாக்கத்தை முழுமையாக்கினார். தென்னாப்பிரிக்காவில் இந்தப் போராட்டங்கள் முடிவுபெற்றதானது துன்புறுத்தும் அரசியலைப்பு தள்ளுபடி செய்யப்பட்டதையும், அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்க அரசிற்கு தலைமையேற்றிருந்த ஜெனரல் ஜேன் ஸ்முட்டால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதையும் கண்டது.

இருபது வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் அதன் அரசியலிற்கும் அந்நியமானவராக இருந்த காந்தி துவக்கத்தில் இந்த அமளிகளின் நுழைந்தார், தேசிய அரசின் அழைப்புகளோடு அல்லாமல் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டிருந்த ஒருங்கிணைந்த வர்த்தகம் சார்ந்த பிரதேசத்தின் உதவியால். ஐரோப்பியர்கள் கொண்டுவந்த தொழில்துறை முன்னேற்றம் மற்றும் கல்வித்துறை முன்னேற்றம் ஆகியவை இந்தியாவின் பல பிரச்சினைகளையும் தணிப்பதற்கு தேவைப்படுவதாக காந்தி நம்பினார். அனுபவமிக்க காங்கிரஸ்காரரும் இந்தியத் தலைவருமான கோபால் கிருஸ்ண கோகலே காந்தியின் வழிகாட்டியானார். அஹிம்சை வழியிலான அடங்க மறுத்தல் பற்றிய காந்தியின் கருத்தாக்கங்களும் வியூகங்களும் சில இந்தியர்களுக்கும் காங்கிரஸ்காரங்களுக்கும் துவக்கத்தில் நடைமுறைக்கு ஒவ்வாததாகவே தோன்றியது. காந்தியின் சொந்த வார்த்தைகளில், "அடங்க மறுத்தல் என்பது அறவியல் அடிப்படையில் அல்லாமல் சட்டப்பூர்வமாக இயற்றப்பட்ட சட்டங்களை மீறுவதாகும்". முறைகேடான அரசுடனான ஒத்துழைப்பைத் திரும்பப் பெறுவதன் மூலம் இது அஹிம்சை முறையில் எடுத்துச்செல்லப்பட வேண்டும். மில்லியன்கணக்கான பொதுமக்களை தூண்டுவதற்கான காந்தியின் திறன் பஞ்சாபில் நடைபெற்ற ரவுலட் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் அவர் சத்தியாகிரகத்தைப் பயன்படுத்தியபோது தெளிவுபெற்றது.

காந்தியின் தொலைநோக்குப் பார்வை விரைவிலேயே மில்லியன்கணக்கான சராசரி இந்தியர்களை இந்த அமைப்பிற்குள் கொண்டுவந்து அதை மேல்குடியினர் போராட்டம் என்பதிலிருந்து தேசியப் போராட்டமாக மாற்றியமைத்தது. தேசியவாத நோக்கம் சராசரி இந்தியர்களின் பொருளாதாரத்தை உருவாக்கும் நலன்கள் மற்றும் தொழில்துறை உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொண்டு விரிவடைந்தது. உதாரணத்திற்கு, பிஹார், சாம்பரனில் தங்களது உணவு அளிப்பை உருவாக்கும் ஆதாரப் பயிர்களின் செலவில் தாங்கவியலா வரியைச் செலுத்தவும் பணப்பயிர்களை உருவாக்கவும் கட்டாயப்படுத்தப்படும் ஏழை குத்தகைதாரர்கள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் இக்கட்டான நிலைக்காக காங்கிரஸ் கட்சி போராடியது. அவர்கள் விளைவித்த பயிர்களிலிருந்து வந்த லாபங்கள் அவர்களது வாழ்வாதரத்தை அளிப்பதற்கு போதுமானதாக இல்லை.

ஹிந்து ஜெர்மன் சதித் திட்டம் என்று குறிப்பிடப்பட்டதையும், இந்தியாவில் இருந்த தீவிரவாத இயக்கங்களில் ஜெர்மனி மற்றும் போல்ஷெவிக்கின் தொடர்பையும் விசாரப்பதற்கென்று ரவுலட் ஆணையத்தால் பேரரச அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டது. முந்தைய ஆண்டு செய்யப்பட்ட பரிந்துரைகளால் இயற்றப்பட்ட ரௌலட் சட்டம் கடுமையான முறையில் எதிர்க்கப்பட்டது.[10][11][12] கறுப்புச் சட்டம் எனப்பட்ட ரவுலட் சட்டம் பத்திரிக்கைகளை மூடுதல், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல் மற்றும் கைதாணை இல்லாமல் கலகம் அல்லது ராஜ துரோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் எந்த ஒரு தனிநபர்களையும் கைது செய்தல் ஆகியவற்றின் மூலம் கலகத்தை நசுக்குவதற்கான உச்சபட்ச அதிகாரங்கள் வைஸ்ராயின் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டது. போராட்டத்தில் தேசம் தழுவிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இது நாடு முழுவதும் பரவுவதற்கு துவக்கமாக இருந்தாலும் தேச அளவில் மனநிறைவளிக்காமல் போய்விட்டது. இந்தக் கொந்தளிப்பு பஞ்சாப் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை (அமிர்தசரஸ் படுகொலை என்றும் அறியப்படுவது) அடுத்து இயற்றப்பட்ட 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 சட்டங்களினால் நசுக்கப்பட்டது. பிரித்தானிய ராணுவத் தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் முக்கியமான வழியைத் தடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றிருந்த நிராயுதபாணியான சந்தேகித்திற்கு இடமற்ற கூட்டத்தை நோக்கி சுடமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். தடையை ஏற்க மறுக்கும் விதமாக சுவரால் சூழப்பட்டிருந்த மையப்பகுதியான ஜாலியன் வாலாபாக்கில் அவர்கள் கூடியிருந்தனர். மொத்தம் 1,651 முறைகள் சுடப்பட்டன, 379 பேர் கொல்லப்பட்டு (பிரித்தானிய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீன்படி; இந்திய மதிப்பீட்டின்படி 1,499க்கும்[13] அதிகம் என்று தெரிகிறது), 1,137 பேர் காயப்படுத்தப்பட்டனர், அது போர்க்கால சுயாட்சியையும் போருக்குப் பிந்தைய நன்மதிப்பு விளைவி்ன் பயனையும் சிதறடிப்பதாக இருந்தது.

ஒத்துழையாமை இயக்கங்கள்

[தொகு]

முதல் ஒத்துழையாமை இயக்கம்

[தொகு]

முதல் சத்யாகிரக இயக்கம் பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்பட்டவற்றிற்கு மாற்றாக காதியையும் இந்தியப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இது பிரித்தானிய கல்வி நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் புறக்கணித்தல்; அரசு வேலையிலிருந்து ராஜினாமா செய்தல்; வரிசெலுத்த மறுத்தல்; பிரித்தானிய பட்டங்கள் மற்றும் கவுரங்களைத் தூக்கியெறிதல் ஆகியவற்றையும் வலியுறுத்தியது. இது 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்மீது தாக்கமேற்படுத்துவற்கு தாமதித்தே வந்தாலும், இந்த இயக்கம் பரவலான பொதுமக்கள் ஆதரவைப் பெற்றது என்பதுடன், அதன் விளைவாக ஏற்பட்ட இணையற்ற ஒழுங்கு கலைவு அந்நிய சட்டத்திற்கான தீவிர சவாலையும் விடுத்தது. இருப்பினும், மூர்க்கமான கும்பலால் இருபத்தி இரண்டு காவலர்கள் கொலைசெய்யப்பட்ட சவுரி சௌரா சம்பவத்திற்குப் பின்னர் காந்தி இந்த இயக்கத்தை திரும்பப் பெற்றார்.

1920 இல், காங்கிரஸ் மீளமைப்பு செய்யப்பட்டு சுயராஜ்ஜியத்தை (சுதந்திரம்) இலக்காகக் கொண்ட புதிய அரசியலமைப்பை வழங்கியது. நுழைவுக் கட்டணத்தை செலுத்த தயாராகவிருந்த யாருக்கும் இந்தக் கட்சியில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது, செயற்குழுக்களின் படிநிலை அமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை வடிவமற்றிருந்த நீர்த்துப்போன இயக்கத்தின் மீதான ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பேற்கச் செய்யப்பட்டது. இந்தக் கட்சி மேல்குடி அமைப்பிலிருந்து வெகுமக்கள் அனுகக்கூடிய மற்றும் பங்கேற்கக்கூடிய ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டது.

காந்திக்கு 1922 இல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் இரண்டாண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுதலையானதை அடுத்து, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் கரைகளில் சபர்மதி ஆசிமத்தை அமைத்தார், யங் இண்டியா என்ற செய்தித்தாளை நிறுவினார், அத்துடன் இந்து சமூகத்திற்குள்ளாக நாட்டுப்புற ஏழைகள் மற்றும் தீண்டாத்தகாதவர்கள் ஆகிய சமூகரீதியில் அனுகூலமற்றிருந்தவர்களை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான மறுசீரமைப்புகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த யுகமானது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவம் உள்ளிட்ட இந்திய சுதந்திர இயக்கத்தில் பின்னாட்களில் தங்களது குரல்களை ஆழப் பதித்தவர்கள் - , காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்து வந்த புதிய தலைமுறை இந்தியர்களைக் கண்டது.

இந்திய அரசியல் பரிணாமம் சுயராஜ்ஜியக் கட்சி, இந்து மகாசபை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் போன்ற மிதவாத மற்றும் தீவிரவாத கட்சிகளின் விழைவினால் 1920 களின் மத்தியப் பகுதியில் மேலும் பரந்து விரிந்தது. பிரதேச அளவிலான அரசியல் அமைப்புக்களும் மதராஸில் பிராமணர் அல்லாதோர், மகாராஷ்டிராவில் மஹர்கள் மற்றும் பஞ்சாபில் சீக்கியர்களின் நலன்களை தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்துவந்தன. இருப்பினும் மகாகவி சுப்பிரமணிய பாரதி, வ. வே. சுப்பிரமணியம், வாஞ்சிநாதன் மற்றும் நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற பிராமணர்கள் சுதந்திரப் போராட்டம் மற்றும் சாதி சமூகங்களுக்கிடையிலான சமநிலை ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிலிருந்து போராடியவர்களுள் முக்கியமானவர்களாவர்.

1930 களில் இராசகோபாலாச்சாரி தலைமையில், பெ. வரதராஜுலு நாயுடு பி. எஸ். குமாரசுவாமிராஜா ஆகியோர் தென்தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு முன்னோடியாக மக்களை ஒருங்கிணைத்தனர்

பூரண சுயராஜ்ஜியம்

[தொகு]

இந்தியர்களால் சைமன் கமிஷனின் பரிந்துரைகள் ஏற்க மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1928ஆம் ஆண்டு மே மாதத்தில் பம்பாயில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மக்களிடத்தில் எதிர்ப்புணர்வை விதைப்பதற்கென்று நடத்தப்பட்டதாகும். இந்தக் கூட்டம் மோதிலால் நேருவின் கீழ் இந்திய அரசியல் சாசனத்தை எழுதுவதற்கான வரைவுக் கமிட்டியை நியமித்தது. இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் 1929 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுயராஜ்ஜிய தகுதி வழங்கப்பட வேண்டும் என்றும் அல்லது நாடுதழுவிய அளவில் கீழ்படிய மறுக்கும் இயக்கம் தொடங்கப்படும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1929 இல் அதிகரித்துவந்த அரசியல் அதிருப்தி மற்றும் பிரதேச இயக்கங்களின் வன்முறைகளுக்கிடையே பிரி்ட்டனிடமிருந்து முழு சுதந்திரத்திற்கு விடப்பட்ட அழைப்பு காங்கிரஸ் தலைமைக்குள்தான் அதற்கான வாய்ப்பிருப்பதாக கருதச்செய்தது. டிசம்ப் 1929 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாகூர் கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து முழு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்த தீர்மானத்தை நிறைவேற்றியது. தொழிலாளர் ஆணையம் நாடு முழுவதில் கீழ்படியாமை இயக்கத்தை தொடங்குவதற்கு அது அங்கீகாரமளித்தது. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் பூரண சுயராஜ்ஜியம் (முழு சுதந்திரம்) தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பரந்துவிரிந்த பரிணாம் கொண்ட பல இந்திய அரசியல் கட்சிகளும் இந்திய புரட்சியாளர்களும் இந்த நாளை கவுரவத்துடனும் பெருமையுடனும் அனுசரித்தனர்.

உப்புப் போராட்டம் மற்றும் கீழ்படியாமை

[தொகு]

1930 ஆம் ஆண்டு மார்ச் 12 மற்றும் ஏப்ரல் 6க்கு இடையே குஜராத் கடற்கரையில் அகமதாபாத்திலிருந்து தண்டிக்கு தனது புகழ்பெற்ற பிரச்சாரமான 400 கிலோமீட்டர்கள் நடைபயணத்தை தொடங்கியதன் மூலம் காந்தி தனது நீண்டகால தனிமைவாசத்திலிருந்து வெளியில் வந்தார். இந்தப் போராட்டம் வழக்கமாக தண்டிப் போராட்டம் அல்லது உப்பு சத்தியாகிரகம் என்று அறியப்படுகிறது. தண்டியில் நடந்த உப்பு மீதான பிரிட்டிஷாரின் வரிவிதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அவரும் அவருடைய நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கடல்நீரிலிருந்து உப்பைக் காய்ச்சி சட்டத்தை மீறினர்.

1930 ஆம் ஆண்டு ஏப்ரலில் கல்கத்தாவில் வன்முறையான போலீஸ்-பொதுமக்கள் சச்சரவுகள் நிகழ்ந்தன. ஏறத்தாழ 100,000 பேர் கீழ்படியாமை இயக்கச் (1930–31) செயல்பாட்டின்போது கைதுசெய்யப்பட்டனர், அதேசமயத்தில் கிஸா குவானி பஜார் படுகொலையில் நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்கள்மீது பெஷாவரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பிந்தைய நிகழ்வு தேசத்திற்குள்ளாக கடவுளின் சேவகர்கள் (எல்லை காந்தி எனப்பட்ட கான் அப்துல் காஃபர் கான் நிறுவிய) இயக்கம் தொடங்கப்படுவதற்கு வழியமைத்தது. இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே லண்டனில் 1930 ஆம் ஆண்டு நவம்பரில் முதல் வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. காங்கிரஸின் மீதான தடையானது சத்யாகிரகத்தால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக நீக்கப்பட்டது. காந்தி காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர்களுடன் 1931 ஆம் ஆண்டு ஜனவரியில் சிறையிலிருந்து விடுதலையானார்.

1931 ஆம் ஆண்டு மார்ச்சில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது, அரசாங்கள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது (இருப்பினும், சில முக்கியமான புரட்சியாளர்கள் விடுதலை செய்யப்படாதது, பகத் சிங் மற்றும் அவருடைய இரண்டு தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை திரும்பப்பெறப்படாதது ஆகியவை காங்கிரஸிற்கு வெளியில் மட்டுமல்லாமல் காங்கிரஸிற்கு உள்ளேயும் அதற்கு எதிரான கொந்தளிப்புகளை மேலும் தீவிரப்படுத்தியது). அதற்குப் பதிலாக காந்தி கீழ்ப்படியாமை இயக்கத்தை திரும்பப் பெற்றதுடன் 1931 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸின் ஒரே பிரதிநிதியாக கலந்துகொள்ளவும் சம்மதித்தார். இருப்பினும், இந்த மாநாடு 1931 ஆம் ஆண்டு டிசம்பரில் தோல்வியில் முடிந்தது. காந்தி இந்தியாவிற்குத் திரும்பி 1932 ஆம் ஆண்டு ஜனவரியில் கீழ்ப்படியாமை இயக்கத்தை தொடங்குவதற்கு முடிவெடுத்தார்.

அடுத்த சில வருடங்களுக்கு, 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் உருவாக்கப்படும்வரை காங்கிரசும் அரசாங்கமும் போராட்டங்களையும் பேரங்களையும் நிறுத்தி வைத்துக்கொண்டனர். அதன் பிறகு, காங்கிரஸிற்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையே ஏற்பட்ட பிளவானது பின்னர் ஒருவருக்கொருவர் கசப்புணர்வோடு குற்றம்சாட்டிக்கொள்ளும் வகையில் இணைக்கப்பட முடியாததாக ஆனது. இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும் என்று முஸ்லீம் லீக் வாதிட்டது, அதேசமயம் முஸ்லீம் மக்களின் விருப்பமாக உள்ள குரலாக முஸ்லீம் லீக் இருப்பதாக காங்கிரஸ் வாதிட்டது.

தேர்தல்களும் லாகூர் தீர்மானமும்

[தொகு]
காந்தியுடன் ஜின்னா, 1944.

பிரித்தானிய இந்தியாவில் பயன்மிக்கதாகவும் இறுதி அரசியலமைப்பு முயற்சியாகவும் இருந்த 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மூன்று முக்கிய இலக்குகளை பிரித்தளித்தது: சாதாரண உள்நாட்டு அமைப்பை நிறுவுதல், பிரதேச சுயாட்சியை எட்டுதல் மற்றும் வெவ்வேறு தேர்தல்கள் வழியாக சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாத்தல். இளவரச அரசையும் பிரித்தானிய இந்தியாவையும் ஒரே மையத்தில் ஒன்றுபடுத்துவதற்கான உள்நாட்டு நடவடிக்கைகள் இளவரசர்களின் இருந்துவரும் சலுகைகளை பாதுகாப்பதில் தெளிவின்மையுடன் இருந்ததால் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது பிரதேச சுயாட்சி நடைமுறைக்கு வந்தது; காங்கிரஸ் கட்சி ஐந்து பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் முன்னணியில் இருந்ததோடு இரண்டு இரண்டங்களில் தலைமையைப் பிடித்தது, அதேசமயம் முஸ்லீம் லீக் மோசமாக செயல்பட்டது.

1939 இல் வைஸ்ராயான லின்லித்கோ பிரதேச அரசாங்களை கலந்தாலோசிக்காமல் இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் கலந்துகொள்ளச் செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்யவேண்டும் என்று ஒரு போராட்டத்தில் காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. முஸ்லீம் லீகின் தலைவரான ஜின்னா, பின்னாளில் லாகூர் தீர்மானம் என்று அறியப்படும், ஒன்று முஸ்லீம்களுக்கும் மற்றொன்று இந்துக்களுக்கும் என்று இந்தியாவை இரண்டு அண்டைநாடுகளாப் பிரிக்கின்ற இருநாடுகள் கோட்பாடு என்றும் குறிப்பிடப்படுகின்ற இந்தியப் பிரிவினையைக் கோரி 1940 இல் லாகூரில் நடத்தப்பட்ட வருடாந்திர முஸ்லீம் லீக் மாநாட்டில் பங்கேற்பாளர்களை வற்புறுத்தினார். பாகிஸ்தான் என்ற கருத்தாக்கம் 1930 களின் முற்பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ஒருசிலரே அதற்கு எதிரிவினை புரிந்தனர். இருப்பினும், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே புகைந்துகொண்டிருந்த அரசியல் சூழலும் சர்ச்சைகளும் பாகிஸ்தான் என்ற கருத்தாக்கத்தை வலுவான கோரிக்கையாக மாற்றியது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்

[தொகு]

இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்

பஞ்சாப் மாநிலத்தில், பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தபார் ஆகியோர்களின் சிலைகள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. வன்முறையின் துணையுடன் பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க முயன்ற இவ்வியக்கங்கள் வங்காளம், பஞ்சாப், பீகார், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் சில புரட்சி இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. அனுசீலன் சமித்தி, (1902- வங்காளம்) யுகாந்தர் (1906- வங்காளம்), கதர் கட்சி (1913- கலிஃபோர்னியா), இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (1924- பஞ்சாப்), இந்திய தேசிய ராணுவம் போன்றவை இத்தகைய புரட்சி இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை. மகாராஷ்டிரா, வங்காளம், ஒரிசா, பிஹார், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றில் உருவான குழுக்களோடு 1900 ஆம் ஆண்டுகளின் முதல் பத்தாண்டில் இந்திய புரட்சிகர போராட்டக்களம் வேகம்பெறத் தொடங்கியது. இந்தியா முழுவதிலும் நிறைய குழுக்கள் உருவாயின. குறிப்பிடத்தகுந்த இயக்கங்கள், குறிப்பாக 1905 இல் வங்காளத்திலும் பஞ்சாபிலும் தோன்றின.[14] முந்தைய நிகழ்வில் அது கல்விகற்ற, அறிவுஜீவித்தனமான மற்றும் நாட்டுப்புற மத்தியதர வர்க்கமான பத்ராலோக் சமுகத்தின், இந்திய புரட்சிகர போராட்டங்களை[14] உருவாக்க வந்த அர்ப்பணிப்புள்ள இளைஞர் குழுவாக இருந்தது, அடுத்திருப்பது பஞ்சாபின் நாட்டுப்புற மற்றும் ராணுவ சமூகத்தின் ஆதரவை அடித்தளமாகக் கொண்ட மிகப்பெரிய ஆதரவைப் பெற்றதாக இருந்தது.

யுகாந்தர் மற்றும் அனுசீலன் சமித்தி போன்ற நிறுவனங்கள் 1900 களில் உருவாயின. புரட்சிகர தத்துவங்கள் மற்றும் இயக்கத்தின் இருப்பு 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின்போது உணரப்படத்தக்கதாக இருந்தது. இந்தப் புரட்சிக்காரர்களை ஒன்றுசேர்ப்பதற்கான துவக்கநிலை நடவடிக்கைகள் அரவிந்தர் மற்றும் அவருடைய சகோதரர் பரின் கோஷ், புபேந்திரநாத் தத்தர் மற்றும் இன்னபிறரால் அவர்கள் 1906 இல் யுகாந்தர் கட்சியை உருவாக்கியபோது எடு்க்கப்பட்டன என்று வாதிடலாம்.[15] வங்காளத்தில் முக்கியமாக உடற்பயிற்சி மையமாக மாறுவேடம் புனைந்திருந்த புரட்சிகர சமூகமாக ஏற்கனவே இருந்தகொண்டிருந்த அனுசீலன் சமித்தியின் உள்வட்டமாக யுகாந்தர் உருவாக்கப்பட்டது.

இந்த அனுசீலன் சமித்தியும் யுகாந்தரும் வங்காளம் மற்றும் இந்தியாவின் மற்ற பாகங்கள் முழுவதிலும் கிளைகளை உருவாக்கியதோடு புரட்சிகர செயல்பாடுகளில் பங்கேற்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் அமர்த்தினர். சில கொலைகளும் கொள்ளைகளும் நடத்தப்பட்டன, பல புரட்சிக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பரின் கோஷ் மற்றும் பகா ஜதின் போன்ற யுகாந்தர் கட்சித் தலைவர்கள் வெடிப்பொருட்களை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தனர். அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு, பிரபுல்லா சகி#முஸாபூர் கொலை ஆகிய குறிப்பிடத்தக்க அரசியல திவீரவாத நிகழ்வுகளால் பல போராளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதோடு, குதிராம் போஸ் தூக்கில் போடப்பட்டார். 1905 இல் லண்டனில் ஷியாம் கிருஷ்ண வர்மாவின் கீழ் தோற்றிவிக்கப்பட்ட இண்டியா ஹவுஸ் மற்றும் தி இண்டியன் சோஸியாலஜிஸ்ட் பிரிட்டனிலேயே அடிப்படைவாத இயக்கத்தை செயல்படுத்தியது. 1909 ஆம் ஆண்டு ஜூலை 1இல், லண்டனில் ஒரு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் ஹட் கர்ஸான் வெய்லி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மதன் லால் டிங்கரா என்ற இந்திய மாணவர் இந்தியா ஹவுஸோடு நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்ட தூக்கில் போடப்பட்டார்

இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த சார்லஸ் ஹன்டிங்டனை கொலை செய்ய முன்னாள் யுகாந்தர் உறுப்பினரான ராஷ் பிஹாரி போஸ் கீழ் டெல்லி-லாகூர் சதித்திட்டம் 1912 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்த சதித்திட்டம், பேரரச தலைநகரத்தை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றும் நிகழ்ச்சியின் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று வைஸ்ராய் மீது குண்டுவீசிக் கொல்ல முயற்சித்ததோடு முடிவுற்றது. இந்த நிகழ்ச்சியின் பின்விளைவாக, சிலசமயங்களில் தீவிரமான நெருக்கடியில் தள்ளிவிடும் வங்காளம் மற்றும் பஞ்சாப் புரட்சிகர ரகசிய இயக்கங்களை அழிப்பதற்கு பிரித்தானிய இந்திய போலீஸாரால் கவனம்குவிக்கப்பட்ட போலீஸ் மற்றும் உளவுத்துறையின் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ராஷ் பிஹாரி போஸ் பிடிபடுவதிலிருந்து மூன்று வருடங்களுக்கு தப்பித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரத்தில் வங்காளம் (மற்றும் பஞ்சாபில்) இருந்த புரட்சிகர இயக்கங்கள் புதுப்பிக்கப்பட்டதோடு, உள்ளூர் நிர்வாகத்தைக் குலைத்துவிடும் அளவிற்கு வலுவாக இருந்தன.[3][2]

முதல் உலகப்போரின்போது புரட்சிக்காரர்கள் ஜெர்மனியிலிருந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இந்து-ஜெர்மானிய சதி தருவிக்கத் திட்டமிட்டு பிரிட்டிஷாருக்கு எதிரான ஆயுதப் படையை நிறுவ திட்டமிட்டிருந்தனர்.[16]

கதர் கட்சி வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு இந்தியாவிலிருந்த புரட்சிக்காரர்களுக்கு ஒத்துழைப்பளித்தது. இந்தக் கட்சி வெளிநாட்டு ஆயுதங்களை வாங்கி இந்தியாவிலிருந்த புரட்சிக்காரர்களுக்கு கொடுத்து உதவியது.

முதல் உலகப்போருக்குப் பின்னர் இந்த புரட்சிகர செயல்பாடுகள், முக்கியமான தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதன் காரணமாக பிரதான பின்தங்கலுக்கு ஆளாகி மெதுவாக அழிந்துபடத் தொடங்கின. 1920 களில் சில புரட்சிகரமான போராளிகள் மீண்டும் ஒன்றிணையத் தொடங்கினர். இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு சந்திரசேகர் ஆஸாத்தின் தலைமையின் கீழ் உருவானது. பகத் சிங்கும் பதுகேஸ்வர் தத்தும் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா மற்றும் வர்த்தக விவாத மசோதாவையும் எதிர்த்து 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8இல் மத்திய நாடாளுமன்ற சபையில் வெடிகுண்டு வீசினர். விசாரணையைத் தொடர்ந்து பகத் சிங், சுக்தேவ் தபார் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகியோர் 1931 இல் தூக்கிலிடப்பட்டனர். அல்லாமா மஷ்ரிகி சுதந்திர இயக்கத்தை நோக்கி குறிப்பாக முஸ்லீம்களை வழிநடத்தும் நோக்கத்தோடு கக்ஸார் தரீக்கை நிறுவினார்.[17]

பிற போராளிகளுடன் சூர்யா சென், உள்ளூரில் அரசாங்கத்தை நிறுவுவதற்கான அரசாங்க தகவல்தொடர்பு அமைப்பை அழிக்க ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றுவதற்காக 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18இல் சிட்டகாங் படைத்தொகுதியை வழிநடத்திச் சென்றார். ப்ரீத்திலதா வடேதார் 1932 இல் சிட்டகாங்கில் இருந்த ஐரோப்பிய கிளப்பின் மீதான தாக்குதலை வழிநடத்திச் சென்றார், அதேசமயம் பினா தாஸ் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய மண்டபத்தின் உட்புறம் வங்காள கவர்னர் ஸ்டான்லி ஜாக்ஸனை கொலைசெய்ய முயற்சித்தார். சிட்டகாங் ஆயுதப் பறிப்பு வழக்கைத் தொடர்ந்து, சூர்யா சென் தூக்கிலிடப்பட்டார், மற்றவர்கள் அந்தமான் செல்லுலார் சிறையில் ஆயுள் கைதிகளாக அனுப்பிவைக்கப்பட்டனர். வங்காள தன்னார்வலர்கள் 1928 இல் செயல்படத் தொடங்கினர். 1930 ஆம் ஆண்டு டிசம்பர் 8 இல் கட்சியைச் சேர்ந்த பினாய் பாசு, பதல் குப்தா தினேஷ் குப்தா என்ற மூவர் கொல்கத்தா தலைமைச் செயலகத்தின் எழுத்தாளர் கட்டிடத்திற்குள் நுழைந்து சிறைகளுக்கான இன்ஸ்பெக்டர் ஜெனரலா கர்னல் என்.எஸ்.சிம்ஸனை கொலை செய்தனர்.

1940 ஆம் ஆண்டு மார்ச்சில், லண்டனில் வைத்து ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு முழு பொறுப்பான மைக்கேல் ஓ டயரை உத்தம் சிங் சுட்டார். இருப்பினும் 1930 களின் பிற்பகுதியில் அரசியல் காட்சிகள் மாறத்தொடங்குகையில் -மையநீரோட்ட அரசியல் தலைவர்கள் பிரிட்டிஷார் அளித்த சில தேர்வுகளை பரிசிலனை செய்ய முன்வந்தது மற்றும் மதவாத அரசியல் செயல்பாட்டிற்கு வந்தது ஆகியவற்றால்- புரட்சிகர செயல்பாடுகள் படிப்படியாக குறையத் தொடங்கின. கடநதகால புரட்சியாளர்கள் பலரும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளில், குறிப்பாக கம்ப்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மையநீரோட்ட அரசியலில் இணைந்தனர், அதேசமயம் பல போராளிகளும் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.

உச்சகட்டம்: போர், வெள்ளையனே வெளியேறு, இந்திய தேசிய ராணுவம் மற்றும் போருக்குப் பிந்தைய கலகங்கள்

[தொகு]

நாடு முழுவதிலும் இருந்த இந்தியர்கள் இரண்டாம் உலகப்போரில் பிரிந்துகிடந்தனர், விக்டர் ஹோப், லின்லித்கோ இரண்டாம் மார்க்யூ|லின்லித்கோ இந்தியப் பிரதிநிதிகளை ஆலோசிக்காமலேயே நேசநாடுகள் கூட்டுப்படையினரின் அணியில் இந்தியா இருப்பதாக அறிவித்தார். லின்லித்கோவின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பாக முழு காங்கிரஸ் தலைமையும் உள்ளூர் அரசு சபைகளிலிருந்து ராஜினாமா செய்தன. இருப்பினும், பலரும் பிரிட்டிஷாரின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே விரும்பினர், உண்மையிலேயே போரின்போது 205,000 பேர்களுடன் பிரித்தானிய இந்திய ராணுவம் மிகப்பெரிய தன்னார்வப் படைகளுள் ஒன்றாக இருந்தது.[18] குறிப்பாக பிரிட்டன் போரின்போது, தனது கட்சியிலிருந்தும் தனது கட்சிக்கு வெளியிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்ட வெகுமக்கள் கீழ்படியாமை இயக்கங்களுக்கு காந்தி மறுப்பு தெரிவித்ததோடு, பிரிட்டன் அழிந்துபட்ட சாம்பலிலிருந்து தான் சுந்திரத்தை வேண்டவில்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் போரில் அதிர்ஷ்டங்கள் மாறிமாறி ஏற்படுவதைப் போல, சுதந்திர இயக்கமும் சுதந்திரத்திற்கான நூறு வருட போராட்டத்தின் உச்சகட்டத்தை உருவாக்கிய இரண்டு இயக்கங்களின் எழுச்சியைக் கண்டது.

இவற்றில் முதலாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் வழிநடத்தப்பட்ட ஆஸாத் இந்து இயக்கமாகும், இது போரின் துவக்கத்திலேயே தொடங்கப்பட்டது என்பதுடன் அச்சு நாடுகளிடமிருந்து உதவியையும் கோரியது. இரண்டாவது இயக்கம் காந்தியால் வழிநடத்தப்பட்டு 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட, போருக்குப் பின் அதிகாரத்தை மாற்றித்தருவதில் இந்திய அரசியல் தலைமைகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் கிரிப்ஸ் மிஷனின் தோல்வியைத் தொடர்ந்து இந்த இயக்கம் தொடங்கியது.

இந்திய தேசிய ராணுவம்

[தொகு]

அடக்குமுறைத் தன்மையோடு இந்தியா போரில் இறக்கிவிடப்பட்டதற்கு 1937 மற்றும் 1939 இல் இரண்டுமுறை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் போஸால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாரில் பங்கேற்பதற்கு எதிராக முயற்சி எடுத்ததற்குப் பின்னர் அவர் 1939 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இவருக்கு பக்க பலமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்சியில் இருந்தார்.போர் வெடித்தபோது பிரித்தானிய அரசு அவரை 1940 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வீட்டுசசிறையில் அடைத்தது. இருப்பினும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்தப் போர் அதிக இரத்தம் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கையில் தப்பிச்சென்ற அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச்சென்று பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கான ராணுவத்தை உருவாக்க இரண்டாம் உலகப்போர் அச்சு நாடுகளிடம் உதவி கோரினார். இங்கே அவர் இர்வின் ரோமலின் இந்தியப் போர்க்கைதிகளை வைத்து இந்திய தேசிய ராணுவம் என்று பிரபலமான ராணுவத்தை உருவாக்கினார். பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கு விடுதலைப் படையை உருவாக்குதல் என்ற போஸின் இளம்பருவ கனவினுடைய கருத்தாக்கமாக இது வந்துசேர்ந்தது. சுதந்திர அரசாங்கமாகவுள்ள ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் என்று பிரபலமான இயக்கத்தை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார். ஜப்பானிலும் தென்கிழக்காசியாவிலும் தனது வழியை அமைத்துக்கொண்டார். அத்துடன் அவர் இந்தியப் போர்க்கைதிகளுடன் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் இணைந்து இந்திய தேசிய ராணுவத்தையும் ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதனுடைய நோக்கம், பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு எதிராக இந்தியப் படைவீரர்களுக்கிடையே கலகங்களைத் தூண்டும் விதமாக பொதுமக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தும் போரிடும் படையாக இந்தியாவை அடையவேணடும் என்பதே.

இந்திய தேசிய ராணுவம் பர்மாவின் அரகான் காடுகள் மற்றும் அஸ்ஸாமில் பிரித்தானிய இந்திய ராணுவம் உள்ளிட்ட கூட்டுப்படைகளின் எதிர்ப்பைக் கண்டது, ஜப்பானியர்களின் 15 வது ராணுவத்துடன் இம்பால் மற்றும் கோஹிமாவை முற்றுகையிட்டது. இந்தப் போரின்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது; போஸ் அவற்றிற்கு ஷாகித் (தியாகம்) என்றும் சுவராஜ் (சுதந்திரம்) என்றும் பெயரிட்டார்.

தடங்கலான அனுப்புகைகள், ஜப்பானியர்களிடமிருந்து பெற்ற மோசமான ஆயுதங்கள் மற்றும் அளிப்புக்கள் மற்றும் பயிற்சி உதவியின்மை ஆகியவற்றால் இந்திய தேசிய ராணுவம் தோற்றுப்போயிருக்கலாம். போஸ் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது முழு ஆஸாச் ஹிந்த் இயக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தின் துருப்புக்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டனர். இருப்பினும் போஸின் துணிச்சலான நடவடிக்கைகளும் அடிப்படைவாத முன்முயற்சியும் அந்த நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறது. பிரித்தானிய பேரரசு கூட்டாளிகளாக கருதப்பட்ட பிரித்தானிய இந்திய போர்வீரர்கள் சொந்த நாட்டு விசுவாசமாகத் தூண்டுவதாகவும் அமைந்தது.[19][20]ஐஎன்ஏ வழக்குகள் (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில் நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது. இந்திய தேசிய ராணுவப் போர்வீரர்களின் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்த ஆஸாத் ஹிந்த் மற்றும் அதன் ராணுவத்தின் கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் வெகுமக்கள் கலகங்களும் கிளர்ச்சிகளும் ஏற்படலாம் என்ற அச்சத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது, பிபிசி அவர்கள் கதையை ஒலிபரப்புவதை பிரித்தானிய அரசாங்கம் தடைசெய்தது.[21] செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவத்தினருக்கு கூட்டாக தண்டனை நிறைவேற்றப்பட்டதை செய்தித்தாள்கள் தெரிவித்தன.[22] விசாரணையின்போதும் அதற்குப் பின்னரும் பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளுக்கிடையே கலகங்கள் மூண்டன, அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ராயல் இந்திய கடற்படை கராச்சியிலிருந்து மும்பை வரை மற்றும் வைசாக்கிலிருந்து கொல்கத்தா வரையிலுமாக இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் ஆதரவைக் கண்டதாகும்.[23][24][25] இந்தியாவின் இறுதிக்கட்ட சுதந்திரத்திற்கான முக்கிய இயக்கு சக்தியாக இருந்தவை பிரித்தானிய இந்திய ஆயுதப் படையினருக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவமும் அதனுடைய கலகங்களும் ஆகும் என்று பல வரலாற்றாய்வாளர்களும் வாதிடுகின்றனர்.[26][27][28] குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

வெள்ளையனே வெளியேறு

[தொகு]

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (பாரத் சோதா அந்தோலன்) அல்லது ஆகஸ்டு இயக்கம் என்பது, இந்தியாவிற்கு உடனடியாக சுதந்திரம் வழங்கக் கோரிய காந்தியின் அழைப்பிற்கும் இரண்டாம் உலகப்போருக்கு இந்தியர்களை அனுப்பி வைத்ததற்கு எதிராகவும் பதிலளிக்கும் விதமாக ஆகஸ்டு 1942 இல் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு சட்டத்திற்கு கீழ்படியாமை இயக்கமாகும்.

போர் வெடித்தபோது,காங்கிரஸ் கட்சி 1939 செப்டம்பரில் செயற்குழுவின் வர்தா கூட்டத்தை நடத்தியபோது, பாஸிசத்திற்கு[29] எதிரான போருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது, ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் சுதந்திரத்தைக் கேட்டபோது அது மறுக்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு மார்ச்சில், துணைக்கண்டம் மட்டும் அதிகப்படியான அதிருப்திகளுடன் விடாப்பிடியாக போரில் பங்கற்றது, ஐரோப்பாவிலும் தென்கிழக்காசியாவிலும் போர்ச் சூழலில் நடந்த வீழ்ச்சிகள் மற்றும் இந்திய துருப்புக்களிடையேயும்-குறிப்பாக ஐரோப்பாவில்- உயர்ந்துவந்த அதிருப்திகள் ஆகியவற்றால் பிரித்தானிய அரசாங்கமானது பின்னாளில் கிரிப்ஸ் மிஷன் என்று அறியப்படும் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸின் தலைமையின் கீழ் ஒரு குழுவை அனுப்பிவைத்தது. இந்த மிஷனின் நோக்கம், முடியரசிடமிருந்தும் வைஸ்ராயிடமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை படிப்படியாக மாற்றிக்கொடுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தலுக்கு மாற்றாக போரின்போது முழு ஒத்துழைப்பைப் பெறும் பேரத்தை இந்திய தேசிய காங்கிரசுடன் நடத்துவது ஆகும். இருப்பினும், சுயராஜ்ஜியத்தை நோக்கிய கால அளவு குறித்த முக்கியமான கோரிக்கையை தெரிவிக்க மறுத்தது, அளிக்கப்படவேண்டிய அதிகாரங்களை வரையறுக்க மறுத்தது, இந்திய இயக்கத்திற்கு முற்றிலும் ஏற்புடையதாக அல்லாத வரம்பிற்குட்பட்ட சுயாட்சி தகுதி குறித்த வாய்ப்பின் விவரம் ஆகியவற்றால் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.[30] தனது கோரிக்கைகள் மற்றும் முழுமையான சுதந்திரம் குறித்த வரையறு வாக்குறுதியை நிறைவேற்ற பிரித்தானிய ஆட்சியை நிர்பந்திக்க காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்க முடிவுசெய்தது.

கூட்டு போர் முயற்சியை பிணையமாக வைத்திருப்பதன் மூலமாக உடன்பாட்டு மேசைக்கு பிரித்தானிய அரசாங்கத்தை கொண்டுவருவதையே இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த இயக்கத்திற்கென்று காந்தி முன்னூகித்திருந்த நிச்சயத்தன்மையை உறுதிப்படுத்திய தீர்மானிக்கப்பட்ட ஆனால் எதிர்ப்பற்ற தடையானது, மும்பையிலுள்ள குவாலியா டேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 8இல் வெளியிடப்பட்ட ஆகஸ்டு கிராந்தி மைதான் (ஆகஸ்டு புரட்சி மைதானம்) என்று பெயரிடப்பட்ட செய் அல்லது செத்துமடி என்பதற்கு அவர் விடுத்த அழைப்பின் மூலம் சரியான முறையில் விவரிக்கப்பட்டது. இருப்பினும், தேசிய அளவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட காங்கிரஸ் தலைமைத்துவம் முழுவதும் காந்தியின் பேச்சுக்குப் பிந்தைய இருபத்து நான்கு மணிநேரத்திற்குள்ளாக சிறைவைக்கப்பட்டதோடு, பெரும் எண்ணிக்கையிலான காங்கிரஸ் கிலாந்தானது மீதமிருந்த போர்க்காலத்தை சிறையிலேயே செலவிட்டனர்.[31]

1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில், அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பம்பாய் கூட்டத்தொடரில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (ஏஐசிசி). பிரிட்டிஷார் இந்த கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் பெரிய அளவிலான சட்டமறுப்பு இயக்கங்கள் நடத்தப்படும் என்பதற்கான வரைவு முன்மொழியப்பட்டது. இருப்பினும் இது அதிகபட்ச சர்ச்சைக்குள்ளான முடிவாக இருந்தது. மும்பை குவாலியா டேங்கில் அஹிம்சை வழியிலான சட்டமறுப்பைப் பி்ன்பற்றும்படி காந்தி இந்தியர்களை வலியுறுத்தினார். காந்தி நாட்டு மக்களிடம் பிரிட்டிஷாரின் கட்டளைகளை பின்பற்றாமல் ஒரு சுதந்திர தேசத்தைப் போல் செயல்படும்படி கூறினார். இந்தியா-பர்மா எல்லைக்குள் முன்னேறிவிட்ட ஜப்பானியப் ராணுவத்தால் எச்சரிக்கை விடப்பட்டிருந்த பிரிட்டிஷார், மறுநாளே புனேயிலுள்ள அகா கான் அரண்மனையில் காந்தியை சிறைவைத்தனர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு அல்லது தேசியத் தலைவர்கள் மற்றவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு அகமதுநகர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் கட்சியையும் தடை செய்தனர். நாடு முழுவதிலும் பெரிய அளவிலான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பாமல் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த இயக்கம் பரந்த அளவிலான நாசவேலைகளையும் செய்தது, கூட்டுப்படைகளின் சப்ளை வழிகளை வெடிகுண்டுகளைக் கொண்டு இந்திய ரகசிய அமைப்புக்கள் தாக்கின, அரசு கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது, மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டதோடு போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு வழிகள் பாதிக்கப்பட்டன. ஒற்றைக் கொடி மற்றும் இயக்கத்தின் கீழ் முஸ்லீம் லீக் உள்ளிட்ட மற்ற அரசியல் சக்திகளின் பேரணிகளை நடத்தி காங்கிரஸ் குறைந்த அளவிற்கு வெற்றிபெற்றது. இவ்வாறு செய்யப்பட்டதானது, இந்த இயக்கத்தின் உச்சகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த முஸ்லீம் மக்களிடமிருந்து எதிர்ப்பற்ற ஆதரவைப் பெற்றுத் தந்தது. காந்தியின் அஹிம்சை கொள்கையிலிருந்து விலகிய பல்வேறு நடவடிக்கைகளுடன் இந்த இயக்கம் விரைவிலேயே தலைவர்களற்ற எதிர்ப்பு நடவடிக்கையானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளூர் ரகசிய அமைப்புக்கள் இந்த இயக்கத்தை கைப்பற்றிக்கொண்டன. இருப்பினும் 1943 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நீர்த்துப்போனது.

ஆர்ஐஎன் கலகம் அல்லது பம்பாய் கலகம்

[தொகு]

ராயல் இந்தியக் கடற்படை கலகம் (ஆர்ஐஎன் கலகம் அல்லது பம்பாய் கலகம்) 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 இல் மும்பை கப்பற் தளத்திலும் கடற்கரை நிறுவுகைகளிலும் இருந்த ராயல் இந்திய கடற்படையின் இந்திய மாலுமிகளால் நடத்தப்பட்ட முழு வேலை நிறுத்தம் மற்றும் அடுத்தடுத்த கலகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. மும்பையில் துவக்கப்புள்ளியிலிருந்தே பரவிய இந்தக் கலகம் கராச்சியிலிருந்து கொல்கத்தா வரை இந்தியா முழுவதும் இந்தக் கலகம் பரவி ஆதரவுகளைக் கண்டதோடு இதில் 78 கப்பல்கள், 20 கடற்கரைத் தளங்கள் மற்றும் 20,000 மாலுமிகள் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ஐஎன் கலகம் அல்லது பம்பாய் கலகம் பிப்ரவரி 18 அன்று பொது நிபந்தனைகளுக்கு எதிராக ராயல் இந்திய கடற்படையின் தரவரிசையால் ஒரு வேலைநிறுத்தமாக ஆரம்பித்தது. நிபந்தனைகளும் உணவுமே இந்தக் கலகத்தின் உடனடிப் பிரச்சினைகளாக இருந்தன, ஆனால் இந்திய மாலுமிகளிடத்தில் ராயல் கடற்படை ஊழியர்களின் பிரித்தானிய அதிகாரிகளால் காட்டப்பட்ட நிறவாத நடத்தை போன்ற அடிப்படை விஷயங்களோடு இது சம்பந்தப்பட்டிருந்தது என்பதுடன், தேசியவாத அபிப்பிராயங்களின் அக்கறைகாட்டும் எவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தன. பிப்ரவரி 19 அந்திப்பொழுதில் கடற்படை மத்திய வேலைநிறுத்தக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னணி சிகனல்மேன் எம்.எஸ்.கான் மற்றும் சிறு அலுவலர் டெலிகிராபிஸ்ட் மதன் சிங் ஆகியோர் முறையே தலைவராகவும் துணைத்தலைவராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[32] இந்த வேலைநிறுத்தமானது, முன்னதாகவே இந்திய தேசிய ராணுவத்தின்பால் ஈர்ப்பு கொண்டிருந்த இந்திய மக்களிடத்திலிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுத்தந்தது. கலகக்காரர்களின் நடவடிக்கைகள் இந்தியா, சிலோன், பர்மா போல்ஷெவிக்-லெனினிஸ்ட் கட்சி|இந்தியா, சிலோன் மற்றும் பர்மாவின் போல்ஷெவிக்-லெனினிஸ்ட் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்ட மும்பையில் நடந்த ஒருநாள் பொது வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களிடமிருந்து ஆதரவைப் பெற்றிருந்தது. இந்த வேலைநிறுத்தம் மற்ற நகரங்களுக்கும் பரவியதோடு, விமானப்படை மற்றும் உள்ளூர் காவல் படைகளுடனும் இணைந்துகொண்டது. கடற்படை அதிகாரிகளும் ஊழியர்களும் தங்களை இந்திய தேசிய கடற்படை என்று அழைத்துக்கொண்டதோடு பிரித்தானிய அதிகாரிக்கு இடதுகை வணக்கங்களை அளித்தனர். சில இடங்களில், பிரித்தானிய இந்திய ராணுவத்திலிருந்த என்சிஒக்கள் பிரித்தானிய மேலதிகாரிகளிடமிருந்து வந்த உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். சென்னையிலும் புனேயிலும் பிரித்தானிய கோட்டை காவல்படையினர் பிரித்தானிய இந்திய ராணுவத்திற்குள்ளிருந்த அதிகாரிகளிடமிருந்தே கலகங்களை எதிர்கொண்டனர். கராச்சியிலிருந்து கல்கத்தா வரை பரந்த அளவிலான கலவரங்கள் நடந்தன. இந்தக் கப்பல்களில் மூன்று கொடிகள் ஒன்றாக பறக்கவிடப்பட்டன - அவை இந்திய தேசிய காங்கிரஸ்,முஸ்லிம் லீக் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கொடிகளாகும், இது கலகக்காரர்களிடையே இருந்த ஒற்றுமை மற்றும் சமூகப் பாகுபாடின்மையைக் குறிப்பிடுவதாக இருந்தது.

ஊடகம்

[தொகு]

முக்கியத்துவம்

[தொகு]

இந்தியாவின் இறுதிகட்ட சுதந்திரத்திற்கான இத்தகைய தனித்தனி நிகழ்வுகள் மற்றும் கலகங்களின் பங்களிப்புகள் பற்றி உண்மையான மதிப்பீடு மற்றும் அவை சார்ந்த வெற்றி மற்றும் தோல்விகள் இன்னும் வரலாற்றாசியர்களின் விவாதத்திற்குரியவைகளாகவே இருக்கின்றன. சில வரலாற்றாசியர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முற்றிலும் தோல்வியடைந்ததாக[33] குறிப்பிடுகின்றனர், அத்துடன் இந்தியாவில் பிரித்தானிய அதிகாரத்தை அதிகம் உலுக்கியதாக பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளை குறிப்பிடுகின்றனர். நிச்சயமாக சுதந்திரத்தின்போது பிரித்தானிய பிரதமராக இருந்த கிளைமண்ட் அட்லி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பங்களிப்பை குறைவானதாகவே கருதியிருப்பார், கலகங்களுக்கு கொடுக்கப்பட்ட பெரும் முக்கியத்துவம் மற்றும் ராயல் இந்திய ஆயுதப் படையினரிடை எழுந்த அதிருப்திகள் ஆகியவையே இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற பிரிட்டிஷாரின் முடிவுக்கு இயக்கு சக்தியாக என்று குறிப்பிடுகின்றனர்.[34]

கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:[35]

நான் அங்கிருந்தபோது, போருக்குப் பிந்தைய பிரித்தானிய பிரதம மந்திரியாக இருந்த கிளைமண்ட் அட்லி இந்தியாவின் சுதந்திரத்திற்கு பொறுப்புடையவராக இருந்தார், இந்தியாவிற்கு வருகைபுரிந்த அவர் கல்கத்தா ராஜ் பவனில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். நான் அவரிடம் நேரடியாகவே இவ்வாறு கேட்டேன்: 'காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1947 க்கும் வெகுமுன்னரே தோற்றுப்போய்விட்டது, பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெகு விரைவாக வெளியேற வேண்டும் என்கிற அளவிற்கு இந்தியச் சூழ்நிலையில் எதுவும் இல்லை. பிறகு ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?’ அதற்கு பதிலாக அட்லி சில காரணங்களைக் குறிப்பிட்டார், அதில் முகமுக்கியமானது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் நடவடிக்கைகள், அது இந்தியாவில் பிரித்தானிய பேரரசின் அடித்தளத்தை ரொம்பவே பலவீனப்படுத்திவிட்டது, அத்துடன் ஆர்ஐஎன் கலகத்தினால் பிரிட்டிஷாருக்கு இந்திய ஆயுதப் படைகள் இனிமேலும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது என்பதை பிரிட்டிஷார் உணர்ந்துவிட்டனர். மகாத்மா காந்தியின் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவது என்ற முடிவில் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்தியது என்று நான் கேட்டபோது, அட்லி தனது உதடுகளை விரித்து ஒரு புன்முறுவலுடன் உற்று நோக்கியபடி மெதுவாகச் சொன்னார், 'மிகவும் குறைவு'.

இருப்பினும், சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம் நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில் ஜெர்மானியர்களின் அனுகூலத்தை இந்திய புரட்சியாளர்கள் கோரினர். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது சுபாஷ் போஸ் இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய சுதந்திரத்திற்கான போர் ஐரோப்பாவில் ஹிட்லராலும், ஆசியாவில் ஜப்பானும் மறைமுகவாகவேனும் பிரிட்டனுக்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

.

இருப்பினும், சில இந்திய வரலாற்றாசிரியர்கள் உண்மையில் வெள்ளையனே வெளியேறு இயக்கமே இதைப் பெற்றுத்தந்தது என்று வாதிடுகின்றனர். பிந்தைய பார்வையை ஆதரிக்கும் விதமாக பேரரசின் பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ வாழ்வாதாரத்தை உறி்ஞ்சிவிட்டது என்பதில் சந்தேகமே இல்லை, அத்துடன் சக்திவாய்ந்த இந்தியர்களின் எதிர்ப்பு பிரித்தானிய அரசாங்கத்தின் ஆன்மாவையும் விருப்பத்தையும் உலுக்கிவிட்டது. இருப்பினும், இதுபோன்ற வரலாற்றாசிரியர்கள் 1947 இல் அதிகாரத்தை மாற்றித்தந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள் இயக்கங்களின் பங்களிப்புகளை மறந்துவிடுகின்றனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கான பிரித்தானிய பேரரசின் ஆன்மா மற்றும் விருப்பத்தை உலுக்கியது இந்தியர்களுக்கிடையே எழுந்த பொதுவான எதிர்ப்புணர்விற்கான சக்திமிகுந்த அழைப்பா அல்லது பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளுக்கு[36][37] இடையே உருவான கலகம் மற்றும் அடங்க மறுப்பதன் கொந்தளிப்பா என்று பார்த்தால், சுதந்திரம் பேரத்திற்கு இடமற்ற இலக்கு என்றும், ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த நெருப்பைப் பற்றவைக்க முடியும் என்றும் கூறலாம். முக்கிய காரணம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முடிவாக சிந்தித்த மில்லியன்கணக்கான மக்கள் மட்டுமே என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் கூறலாம். மேலும், பிரித்தானிய மக்களும் பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது, பேரரசின் மற்ற பகுதிகள் தங்கள் சொந்த நாட்டிலேயும்கூட போரிலிருந்து மீள வேண்டியிருந்தது.

சுதந்திரம், 1947 முதல் 1950

[தொகு]

கடைசி பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் 1947 ஆம் ஆண்டு ஜூன் 3இல் பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா என்றும் முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் அவர்களிடமிருந்து தனி தேசமாக பிரிந்துசென்றது. சுதந்திர தினம் (இந்தியா)1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 நள்ளிரவில் இந்தியா சுதந்திர தேசமானது. இந்து முஸ்லீம்களுக்கிடையிலான வன்முறைகளும் அதைத் தொடர்ந்து நடந்தன. பிரதம மந்திரி நேரு மற்றும் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக தொடரும்படி மவுண்ட்பேட்டனை அழைத்தனர். 1948 ஆம் ஆண்டு ஜூனில் ராஜகோபாலாச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார். படேல் தனது "பட்டுக் கையுறைக்குள் இரும்புக் கரம்" என்ற கொள்கைகளைப் பயன்படுத்தியும், இந்தியாவிற்குள் ஜூனாகத், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் அரசு (ஆபரேஷன் போலோ) ஆகியவற்றை இணைப்பதற்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதை ஒரு உதாரணமாக்கி 565 இளவரச அரசுகளை இணைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அரசமைப்பு சபை அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் வேலையை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று முடித்தது; 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் இந்தியக் குடியரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அரசமைப்பு சபை கவர்னல் ஜெனரல் ராஜகோபாலச்சாரியை நீக்கிவி்ட்டு டாக்டர்.ராஜேந்திர பிரசாத்தை இந்திய ஜனாதிபதியாக தேர்வுசெய்தது. அடுத்தடுத்து சுதந்திரமான மற்றும் அண்டைநாடான இந்தியா மூன்று பிரதேசங்களை இணைத்துக்கொண்டது: கோவா (1961 இல் போர்த்துக்கீசியர் கட்டுப்பாட்டிலிருந்து), பாண்டிச்சேரி (1953–1954 இல் பிரான்ஸ் அரசிடமிருந்து) மற்றும் சிக்கிம் 1975 இல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1952 இல், இந்தியா தனது முதல் பொதுத்தேர்தலை நடத்தியது, 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

மேலும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 15,18
  2. 2.0 2.1 Gupta 1997, ப. 12
  3. 3.0 3.1 Popplewell 1995, ப. 201
  4. Strachan 2001, ப. 798
  5. Hoover 1985, ப. 252
  6. Brown 1948, ப. 300
  7. Strachan 2001, ப. 788
  8. Hopkirk 2001, ப. 41
  9. Popplewell 1995, ப. 234
  10. Tinker 1968, ப. 92
  11. Lovett 1920, ப. 94, 187-191
  12. Sarkar 1921, ப. 137
  13. அக்கர்மன், பீட்டர் மற்றும் டுவல், ஜேக் மிக ஆற்றல்வாய்ந்த சக்தி: அறப்போராட்ட நூற்றாண்டு ப. 74.
  14. 14.0 14.1 Fraser 1977, ப. 257
  15. பங்களாபீடியா கட்டுரை முகமது ஷா
  16. ரௌலட் அறிக்கை (§ 109–110); புரட்சியின் முதல் தீ ஏ.சி.குஹா, ப. 424–34.
  17. கஷ்கர் தெஹ்ரிக் கி ஜிதோ ஜுகாத் பாகம் 1. ஆசிரியர் கஷ்கர் ஷெர் சமான்
  18. வீக்ஸ்,ஜான், இரண்டாம் உலகப்போர் சிறு ஆயுதங்கள் , நியூயார்க்: கலகத் புக்ஸ் (1979), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88365-403-2, ப. 89
  19. எட்வர்ட்ஸ், மைக்கேல், பிரித்தானிய இந்தியாவின் கடைசி ஆண்டுகள், கிளிவ்லேண்ட், வேர்ல்டு பப். கம்., 1964, ப. 93 .

    இந்திய தேசிய ராணுவ உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுப்பதன் மூலம் இந்திய ராணுவத்தின் ஒழுக்கத்தை மறுசீரமைக்க முடியும் இந்திய அரசாங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிரிட்டிஷாருக்கு அசௌகரியத்தையும், தாங்களே வெட்கமடையும் வகையிலுமான உணர்வையுமே உருவாக்கியது. போஸூம் அவரது படையினரும் சரியான பக்கத்தில் இருந்தவர்கள் என்று இப்போது எல்லா இந்தியர்களும் உறுதிசெய்துவிட்டனர் - பிரித்தானிய ராணுவத்திலிருந்த இந்தியர்கள் சரியான பக்கத்தில் இருக்கவில்லை. பிரித்தானிய ஆட்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்திய ராணுவம் இனிமேலும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது என்பதை அது இந்திய அரசாங்கத்திற்கு உணர்த்தியது. ஹாம்லெட்டின் தந்தையைப் போல் சுபாஷ் சந்திரபோஸின் ஆவியும் செங்கோட்டையின் போர்ப்பாதையில் நடந்துசென்றது (இந்திய தேசிய ராணுவ வீரர்கள் முயற்சித்தது), சுதந்திரத்தை வழிநடத்திய அவர் உருவம் சட்டென்று பெரிதாகி பிரித்தானிய அரசினை பயமுறுத்தியது.

  20. என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா . [1] இந்திய தேசிய ராணுவம் இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் இந்திய தேசிய ராணுவத்தின் அனுபவசாலிகள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலான பிரச்சினையாக விளங்கினர். இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியை ராஜதுரோகத்திற்கான பொது விசாரணைக்கு உட்படுத்த பிரித்தானிய அரசாங்கம் பயந்ததானது எதிர் பிரிட்டன் உணர்வு மற்றும் பரவலான போராட்டம் மற்றும் வன்முறை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். 19 ஆகஸ்ட் 06 இல் அணுகப்பட்ட URL.
  21. கலகங்கள் (கடைசி பிரிவு).
  22. இந்திய தேசிய ராணுவத்தினர் பலரும் முன்பே தண்டனை நிறைவேற்றப்பட்டனர் பரணிடப்பட்டது 2007-08-09 at the வந்தவழி இயந்திரம், லக்னோ. தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், 2 நவம்பர் 1945. 11-ஆகஸ்ட்-06 இல் அனுகப்பட்ட URL.
  23. கலக விளைவுகளின் கதையும் மதிப்பீடும்.
  24. இந்திய தேசிய ராணுவ விசாரணைகளின் எதிர்விளைவுகள்
  25. டிரிப்யூன் இண்டியா, 17-ஜூலை-2006 இல் அனுகப்பட்டது
  26. "ஆர்ஐஎன் கலகம் பிரிட்டிஷாரை உலுக்கிய" தன்செயா பட், தி டிரிப்யூன், 12 பிப்ரவரி 2006, 17 ஜூலை 2006 இல் திரும்ப எடுக்கப்பட்டது
  27. மஜும்தார், ஆர்.சி., இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள், பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.
  28. ஆர்.சி.மஜூம்தார். இந்திய சுதந்திர இயக்கங்களின் வரலாறு. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-2376-3, மறுபதிப்பு. கல்கத்தா, ஃபிர்மா கேஎல்எம், 1997, தொகுதி. III.
  29. "The Congress and The Freedom Movement". Indian National Congress. Archived from the original on 2006-10-05. பார்க்கப்பட்ட நாள் 2007-09-24.
  30. காலனி நாடுகளில் கலாச்சாரமும் போராட்டமும். இரண்டம் உலகப்போரில் இந்திய ராணுவம். தரக் பார்கவி. ஜே காண்டெம்ப் வரலாறு. 41(2), 325–355.பக்:332
  31. ‘வெள்ளையனே வெளியேறு’ பவள விழா: இந்தியாவின் முதல் வெகுஜன போராட்டம்
  32. அரசியல் கட்சிகள் என்சைக்ளோபீடியா. ஓ.பி.ரால்ஹன் ப.1011 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-865-9
  33. பங்களாபீடியா
  34. தனஞ்செய் பட், "தி டிரிப்யூனில்" எழுதியது, ஞாயிற்றுக்கிழமை, 12 பிப்ரவரி 2006. ஸ்பெக்ட்ரம் இணைப்பு.
  35. மஜும்தார், ஆர்.சி.,இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள், பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.
  36. இரண்டாம் உலகப்போர் ஆசியா, Le Monde Diplomatique, 2005-05-13.
  37. டிரிப்யூன் இண்டியா 2006-02-12.

பார்வைக் குறிப்புகள்

[தொகு]

 This article incorporates public domain material from websites or documents of the Library of Congress Country Studies.

மேலும் படிக்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_விடுதலை_இயக்கம்&oldid=3761063" இலிருந்து மீள்விக்கப்பட்டது