2006 வாரணாசி குண்டுவெடிப்புகள்
2006 வாரணாசி குண்டு வெடிப்புகள் | |
---|---|
நிகழ்விடம் | வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
நாள் | 7 மார்ச் 2006 18:20 இந்திய சீர் நேரம் (UTC+05:30) |
இலக்கு | அனுமார் கோயில் மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் இரயில் நிலையம் |
தாக்குதல் வகை | வெடி குண்டுகள் |
இறப்பு(கள்) | 28 |
காயமடைந்தவர் | 101 |
Perpetrator(s) | லஷ்கர்-ஏ-தொய்பா |
7 மார்ச் 2006 அன்று இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித தலமான வாரணாசியில் உள்ள அனுமார் கோயில் மற்றும் வாரணாசி கண்டோன்மெண்ட் இரயில் நிலையத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 28 இந்துக்கள் உயிரிழந்தனர் மற்றும் 101 பேர் படுகாயம் அடைந்தனர்.[1] இந்த குண்டு வெடிப்புகளுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா பொறுப்பு ஏற்றது.[2]
வழக்கும் தண்டனையும்
[தொகு]வாரணாசி தொடர் குண்டு வெடிப்புகளை விசாரித்த காவல் துறை, லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் வங்காளதேசம் நாட்டின் வலியுல்லா கானை பிராயக்ராஜில் வைத்து கைது செய்து காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 7 சூன் 2022 அன்று நீதிமன்றம் வலியுல்லா கானுக்கு பல்வேறு குற்றப் பிரிவுகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Terror strikes Varanasi: 28 killed, no claim yet". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 23 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141023003456/http://www.freerepublic.com/focus/f-gop/1591852/posts.
- ↑ Bhatt, Sheela; Ahmad, Mukhtar (9 March 2006). "Little known group owns up Varanasi blasts" இம் மூலத்தில் இருந்து 28 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140228192041/http://ia.rediff.com/news/2006/mar/09varanasi.htm.
- ↑ வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு
- ↑ 2006 வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு வழக்கு - முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு