அக்சர்தாம் கோயில் தாக்குதல்
அக்சர்தாம் கோயில் தாக்குதல் | |
---|---|
![]() பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட அக்சர்தாம் கோயில் வளாகம் | |
தாக்கப்பட்ட அக்சர்தாம் கோயில், குசராத்து | |
இடம் | சுவாமி நாராயண் அக்சர்தாம், காந்திநகர், குசராத்து, இந்தியா |
ஆள்கூறுகள் | 23°13′45″N 72°40′27″E / 23.22917°N 72.67417°E |
நாள் | 24 செப்டம்பர் 2002 - 25 செப்டம்பர் 2002 காலை 4:45 - மாலை 6:45 (இந்திய சீர் நேரம்) |
தாக்குதல் வகை | குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு |
ஆயுதம் | கையெறி குண்டுகள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் |
இறப்பு(கள்) | 32 (இரண்டு தீவிரவாதிகள் உட்பட)[1] |
காயமடைந்தோர் | 80[1] |
தாக்கியோர் | லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது [1] |
தாக்கியோர் | 2, முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக்[1] |
எதிர்த்தோர் | குஜராத் காவல் துறை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை |
அக்சர்தாம் கோயில் தாக்குதல் (Akshardham Temple Attack), இந்திய மாநிலமான குசராத்தின் தலைநகரான காந்திநகரில் உள்ள சுவாமி நாராயண் அக்சர்தாம் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்தனர்.[2][3] [4] தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Dasgupta, Manas (1 June 2010). "Death sentence for Akshardham temple attack convicts upheld". தி இந்து (Ahmedabad). http://www.thehindu.com/news/national/death-sentence-for-akshardham-temple-attack-convicts-upheld/article443455.ece. பார்த்த நாள்: 16 May 2013.
- ↑ "Gujarat HC upholds death sentence for Akshardham attackers". The Economic Times. 2 June 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-06-02/news/28442247_1_pota-court-murtuza-hafiz-yasin-terror-attack. பார்த்த நாள்: 15 June 2014.
- ↑ Williams, Raymond (2004). Williams on South Asian Religions and Immigration: Collected Works. England: Ashgate. ISBN 0754638561.
- ↑ "Temple Carnage: Terrorist Attack on Akshardham". Swaminarayan.org.