உள்ளடக்கத்துக்குச் செல்

விஜி சந்திரசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜி சந்திரசேகர்
பிறப்புவிசயவாடா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1981–1995, 2001–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சந்திரசேகர்
(தி. 1995)
பிள்ளைகள்2

விஜி சந்திரசேகர் (Viji Chandrasekhar) ஒரு இந்திய நடிகையாவார். இவர் பல தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளை வென்ற ஆரோகணம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தனது கதாபாத்திரங்களுக்காக அறியப்படுவதுடன் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1] "அழகி" என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[சான்று தேவை]

தொழில் வாழ்க்கை

[தொகு]

விஜியின் மூத்த சகோதரி நடிகை சரிதா ஆவார். இவர் ஏற்கனவே ஒரு நட்சத்திர நடிகையாவார். 1981 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய தில்லு முல்லு என்ற நகைச்சுவை திரைப்படத்தில் இரஜினிகாந்தின் சகோதரியாக அறிமுகமான விஜி.[2][3] படம் வெற்றி பெற்ற போதிலும், தனது படிப்பில் கவனம் செலுத்தினார். 1990கள் வரை நடிப்பதைத் தவிர்த்தார்.[2]

பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் (2001), இராகவா இலாரன்சின் சகோதரியாகவும், மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் (2004) கிருஷ்ணாவின் சகோதரியாகவும் நடித்ததைத் தவிர, இவர் முக்கியமாக தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இவர் 35இற்கும் மேற்பட்ட தொடர்களில் ஒரு பகுதியாக நடித்திருந்தார்.[4] 2012 இல், இலட்சுமி இராமகிருஷ்ணனின் ஆரோகனம் படத்தில் இருமுனைக் கோளாறால் பாதிக்கப்பட்ட காய்கறி விற்பனையாளர் நிர்மலாவாக நடித்தார். மேலும் இவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[3][5]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1981 தில்லு முல்லு உமா தமிழ்
1991 கலியுகம் தெலுங்கு
தவறுமனே உடுகூர் கன்னடம்
1993 கிழக்குச் சீமையிலே கௌதாரி தமிழ்
1994 பிரியங்கா காமினி தமிழ்
1995 இந்திரா தமிழ்
1996 தேவி ஐஏஎஸ் தேவி மலையாளம் இயக்கம்: ஜி. துளசி
2001 பார்த்தாலே பரவசம் அறிவு தமிழ்
2002 சமஸ்தானம் சங்கராவின் தாய் தமிழ்
2004 ஆய்த எழுத்து அங்கம்மா தமிழ்
ஜோர் ஆய்வாளர் இந்திராணி தமிழ்
2012 ஆரோகணம் நிர்மலா தமிழ்
2013 மதயானைக் கூட்டம் சேவனம்மா தமிழ்
2014 நெருங்கி வா முத்தமிடாதே சீதா தமிழ்
2015 பாதமாரி நாராயணனின் தாய் மலையாளம்
திங்கள் முதல் வெள்ளி வரே ஜெயதேவனின் தாய் மலையாளம்
2016 நையப்புடை தமிழ்
வெற்றிவேல் காயவர்ணம் தமிழ்
2017 முத்துராமலிங்கம் மூக்கையா தேவரின் மனைவி தமிழ்
2018 ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் யமரோசா தமிழ்
மிஸ்டர். சந்திரமௌலி ஏசிபி துவாரகா தமிழ்
கடைக்குட்டி சிங்கம் வானவன் மாதேவி தமிழ்
சீமத்துரை மருதுவின் தாய் தமிழ்
2019 நீர்த்திரை அபிராமி தமிழ்
கெம்பேகவுடா 2 கன்னடம்
2020 எனக்கு ஒன்னு தெரிஞ்சுக்கணும் தமிழ்
2021 அகந்தா தெலுங்கு
பிளான் பண்ணி பண்ணனும் செம்பியின் தாய் தமிழ்
2022 புத்தம் புது காலை விடியாதா ரீடா தமிழ் ஓடிடி அமேசான் பிரைம் வெளியீடு (இயக்கம்: ரிச்சர்டு அந்தோணி)
மருத காளி தமிழ்
எதற்கும் துணிந்தவன் நீதிபதி தமிழ்
அனல் மேலே பனித்துளி தமிழ்
2023 காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் காளி தமிழ்
2024 கேப்டன் மில்லர் பேச்சியம்மா தமிழ்
டிஎன்ஏ தமிழ்
மணி இராம் - இராமர் திரைப்படம் (தலைப்பிடப்படவில்லை) தமிழ்
கோபி நைனார் திரைப்படம் (தலைப்பிடப்படவில்லை) தமிழ்
டீசல் தமிழ்
அம்மா இராஜசேகர் திரைப்படம் (தலைப்பிடப்படவில்லை) தெலுங்கு
விஷ்ணு விஜயன் திரைப்படம் (தலைப்பிடப்படவில்லை) தெலுங்கு

தொலைக்காட்சிகளில்

[தொகு]
ஆண்டு தொடர் தொலைக்காட்சி கதாபாத்திரம்
1991 முப்பது கோடி முகங்கள் பொதிகை தொலைக்காட்சி
கந்தபூர்ணம்
1994 சின்னவிசாயம்
1994 பந்தம் சன் தொலைக்காட்சி
வாழப்பிறந்தவர்கள் பொதிகை தொலைக்காட்சி
ரேவதி சன் தொலைக்காட்சி
1995 உயிரோவியம் பொதிகை தொலைக்காட்சி
கிருஷ்ணசாமிஅசோசியேசன்
1998 தீக்குள் வைரல் ஜெயா தொலைக்காட்சி
ஜாதிமல்லி ராஜ் தொலைக்காட்சி
Nunipullum Avasarakavargalum
1999 குடும்பம் ஒரு கோயில் விஜய் தொலைக்காட்சி
2000 கடவுளுக்கு கோபம் வருது
2000 புஷ்பாங்கலி சன் தொலைக்காட்சி புஷ்பா
2001–2003 அலைகள் இராதா
2002–2005 அண்ணாமலை சாந்தி
2003–2005 கோலங்கள் சீதா
2006 பெண் கலாவதி (கலா)
2011–2016 அழகி சுந்தரி
2013 அமுதா ஒரு ஆச்சரியக்குறி கலைஞர் தொலைக்காட்சி விருந்தினர் தோற்றம்
2019 சந்திரகுமாரி சன் தொலைக்காட்சி சந்தரா

வலைத்தொடர்

[தொகு]
ஆண்டு தலைப்பு தளம் கதாபாத்திரம்
2019 குயின்[6] எம்எக்ஸ் பிளேயர் வி.கே.சசிகலா
2023 செங்களம்[7] ஜீ5

உண்மைநிலை நிகழ்ச்சி

[தொகு]
ஆண்டு நிகழ்ச்சி தொலைக்காட்சி
2016 உறவைத் தேடி புதுயுகம் தொலைக்காட்சி

குறும்படம்

[தொகு]
ஆண்டு குறும்படத் தலைப்பு இயக்குநர்
2017 செந்தூரம் மஞ்சுநாத்
தி அன்எக்பட்டேடு விக்டிம் பிரமோத்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'Aarohanam' was challenging, didn't do homework: Viji. Deccan Chronicle (26 October 2012). Retrieved 21 November 2013.
  2. 2.0 2.1 Rao, Subha J (23 May 2015). "I can never let KB down".
  3. 3.0 3.1 Viji hopes for a dream run in films. The New Indian Express. Retrieved 21 November 2013.
  4. Rao, Subha J (23 May 2015). "I can never let KB down".Rao, Subha J (23 May 2015). "I can never let KB down". தி இந்து.
  5. I didn't do homework for 'Aarohanam': Viji Chandrasekhar. CNN-IBN (25 October 2012). Retrieved 21 November 2013.
  6. "Teaser of Queen web series released". newsminute.com. December 2019. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020.
  7. "அரசியல் திரில்லராக உருவாகியுள்ள 'செங்களம்' இணையத் தொடர்! - மார்ச் 24 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது". cinemainbox.com. 19 March 2023.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜி_சந்திரசேகர்&oldid=4124317" இலிருந்து மீள்விக்கப்பட்டது