சீமத்துரை
Appearance
சீமத்துரை | |
---|---|
இயக்கம் | சந்தோஷ் தியாகராஜன் |
தயாரிப்பு | இ. சுஜயகிருஷ்ணா |
கதை | சந்தோஷ் தியாகராஜன் |
இசை | ஜோஸ் பிராங்க்ளின் |
நடிப்பு | கீதன் பிரிட்டோ வர்சா பொல்லம்மா |
ஒளிப்பதிவு | ஞானசமந்தம் |
படத்தொகுப்பு | வீர செந்தில்ராஜ் |
கலையகம் | புவன் மீடியா ஒர்க்ஸ |
வெளியீடு | 7 திசம்பர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சீமத்துரை (Seemathurai) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயகுநர் சந்தோஷ் தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீதன் பிரிட்டோ, வர்சா பொல்லம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- கீதன் பிரிட்டோ மருதுவாக
- வர்சா பொல்லம்மா பூரணியாக
- ஆதேஷ் பாலா[2]
- விஜி சந்திரசேகர் மருதுவின் தாயாக
- கயல் வின்சென்ட் [1]
- மகேந்திரன்
- நெல்லை சிவா காவல் அதிகாரியாக
தயாரிப்பு
[தொகு]இப்படமானது பட்டுக்கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் 45 நாட்களில் படமாக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன் இப்பகுதியை கஜா புயல் தாக்கியிருந்தது.[3] இந்த படத்தில் தென் தமிழக பேச்சுவழக்கை பேச வர்ஷா பொல்லம்மாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.[4]
இசை
[தொகு]இபடத்திற்கான இசையை ஜோஸ் பிராங்க்ளின் அமைத்தார்.[5]
- "தஞ்சாவூர் மேளத்துக்கு" - வேல்முருகன்
- "ஆகயம் என்ன" - சிரேயா கோசல், சுவேதா மோகன், கே. ஜி. ரஞ்சித்
- "முதல் முறை" - ஜோஸ் பிராங்க்ளின்
- "கருவேலங் காட்டுக்கு" - சத்தியபிரகாஷ், அனிதா கார்த்திகேயன்
வெளியீடு
[தொகு]டைம்ஸ் ஆப் இந்தியா ஐந்து நட்சத்திரங்களில் இரண்டைக் கொடுத்தது, "இந்த கிராமப்புற காதல் கதை, மற்றொரு களவாணி படமாக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. என்றது.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Anupama Subramanian (4 November 2017). "Varsha Bollamma bags a meaty role". Deccan Chronicle.
- ↑ 2.0 2.1 "Seemathurai Movie Review {2/5}". The Times of India. 7 December 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/seemathurai/movie-review/66981178.cms. பார்த்த நாள்: 17 May 2020. "This rural romance, which seems to be trying to another Kalavaani ... but the a clichéd treatment works against it [sic]"
- ↑ Anupama Subramanian (2 December 2018). "Sad to see Pattukottai in such a state now: Santhosh Thyagarajan". Deccan Chronicle.
- ↑ Anupama Subramanian (14 August 2018). "Varsha Bollamma debuts as leading lady". Deccan Chronicle.
- ↑ "Seemathurai Songs". JioSaavn. 18 Nov 2019.