களவாணி (திரைப்படம்)
களவாணி | |
---|---|
![]() | |
இயக்கம் | A.சற்குணம் |
தயாரிப்பு | சேராலி பிலிம்ஸ் |
இசை | எஸ். எஸ். குமரன் |
நடிப்பு | விமல், ஓவியா |
வெளியீடு | 25.06.2010 |
மொழி | தமிழ் |
களவாணி சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, சூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். தஞ்சாவூர் மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பசங்க படத்தில் நடித்த விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- அறிக்கி என்ற அறிவழகனாக விமல்
- மகேஷ்வரியாக ஓவியா
- இலட்சுமியாக சரண்யா பொன்வண்ணன்
- இராமசாமியாக இளவரசு
- பஞ்சாயத்தாக கஞ்சா கறுப்பு
- மணிகண்டனாக சூரி
- இளங்கோவாகதிருமுருகன்
- ராஜீயாக சுஜாதா சிவக்குமார்
- அஸ்வதா
- மகேஸ்வரியின் மூத்த தாய் மாமாவாக மு. இராமசாமி
- தவசி
- அறிக்கியின் நண்பனாக ஆண்டனி
- பூ வியாபாரியாக கண்ணன்
- கலை அரசன்
தயாரிப்பு
[தொகு]ஏ. சற்குணம் தனது திரைக்கதையுடன் K. பாக்கியராஜை அணுகி, அந்த திரைக்கதையை மேம்படுத்துவதற்கு உதவி கேட்டதுடன், பாக்கியராஜின் மகன் சாந்தனுவை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர், சாந்தனு எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்தைக் குறித்து தயாரிப்பாளருக்கு இசைவு இல்லாததால் சர்குனம் பாக்கியராஜிடமிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார்.[2]
விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suganth, M (19 July 2010). "Sarkunam's movie succeed at box office". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 15 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120915014623/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-19/news-interviews/28314602_1_film-critics-first-film-tamil-cinema.
- ↑ Ashwin (24 November 2020). Ek Gaaon Mein, Ek Kisaan Raguthatha | A K Bhagyaraj masterclass | DRS with Ash | R Ashwin | E16. Event occurs at 48:48. Archived from the original on 11 April 2023. Retrieved 11 March 2025 – via யூடியூப்.