உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வைணவ வலைவாசலின் ஒரு பிரிவான வைணவ அடியார் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் சைவ சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சைவ அடியார்களைப் பற்றிய பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு
  |படிமம்        =
  |படிம தலைப்பு =
  |உரை         =
  |இணைப்பு     =
  |முகப்பு        = வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்கள்
}}

காப்பகம்

[தொகு]

1 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/1 ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும், தத்துவம்,பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது.இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது.ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் தமிழ்நாட்டின் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஓதப்படுகின்றது.


2 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/2 மணவாள மாமுனிகள்


3 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/3

இராமானுசர்

இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத மதப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் எனப்படுவர்.


4 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/4

அனுமார்

அனுமன் ஒரு இந்துக் கடவுளாக வணங்கப்படுகிறார். வைணவ ஆலயங்களில் இவரது உருவச்சிலையைப் பார்க்கலாம். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தை வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர். இராமயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்ததாக கருதப்படுகிறது.


5 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/5

கருடாழ்வார்

இந்து சமயப் புராணங்களில் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.


6 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/6

நாரதர்

நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான ஞானிஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளிப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் இந்நூல் மிகவும் முக்கியமானது, காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்களே. நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு தம்புராவும் வைத்திருப்பார். நாராயண நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடுஇணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.


7 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/7

திருமகள்

இலக்குமி அல்லது பொதுவழக்கில் லட்சுமி இந்துக்களின் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப் படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, ருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு. செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.


8 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/8

ஆதிசேஷன்

ஆதிசேஷன்(சமஸ்கிருதம்:शेष, சேஷா) என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆதிசேசன் சிவபெருமானது கழுத்தில் ஆபரனமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரனாகவும் அறியப்படுகிறார்.

ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால் இராமபிரானாக அவதரித்த காலை, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.


9 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/9 ஆளவந்தார் நாதமுனிகளின் பேரன்; ஈசுவரமுனியின் மகன். இளமையில் 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டப்பட்டவர். ஆளவந்தார் இராமானுசரின் குரு. தென்மொழி வேதமாகிய திவ்வியப் பிரபந்தத்தின் மேன்மையைப் பரப்பியவர் இந்த இராமானுசர். இப்பணியால் 'இளையாழ்வார்' எனப் போற்றப்பட்டவர் இராமானுசர். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். நாதமுனிகள், தன் மகன் ஈசுரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி, வைணவத் திருமறையெழுத்துக் காப்புப் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டு நாதமுனிகள் திருநாடு சென்றார். அந்தப் பணியை உய்யக்கொண்டார், தன் மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுக் காலமானார்.

மணக்கால் நம்பி ஈசுவரமுனியின் மகனுக்கு முறைப்படி யமுனைத்துறைவன் எனப் பெயர்சூட்டி வாழ்த்தினார். யமுனைத்துறைவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துவந்தார். இந்த யமுனைத்துறைவன் தூதுவளைக் கீரையை விரும்பி உண்ணும் பழக்கம் உள்ளவர். ஆறுமாத காலம் மணக்கால் நம்பி தூதுவளைக் கீரையை யமுனைத்துறைவன் மடப்பள்ளிக்கு வழங்கிவிட்டு நிறுத்திக்கொண்டார். யமுனைத்துறைவன் நம்பியை அழைத்து, கீரை தரப் பொருள் வேண்டுமா என வினவினார். நம்பி தாம் கொள்ள வரவில்லை என்றும், கொடுக்க வந்துள்ளதாகவும் கூறினார். யமுனைத்துறைவன் தருமாறு வேண்ட நம்பி அவருக்குக் கீதை, திருவெழுத்து முதலானவற்றைப் புகட்டினார். பெற்றவர் ஆளவந்தார் ஆனார்.


10 கட்டுரை

[தொகு]

வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/10

மீராபாய்

மீரா (மீராபாய் கி.பி 1498 – கி.பி 1547) ஒரு வைணவ மத பக்தி பாடகர் ஆவார். இவர் கிருஷ்ணர் மீது தீவிர பற்று கொண்டவர். மீரா ராஜபுத்திரரின் இளவரசி ஆவர், இவர் தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.

பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பஜன்கள், இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் புகழ்பெற்றவை. இவர் குரு ரவிதாசரின் சீடராவார்.அரச குடும்பத்தைச் சார்ந்த இவர் வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப் பருவம் முதலே ஏற்பட்டது. தம் கருத்துகளை வட்டார மொழியான ‘பிரிஜ்’ மொழியில் பரப்பினார். பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும், நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் “செயல்” என்னும் கருத்தைப் பரப்பினார்.


பரிந்துரைகள்

[தொகு]
  1. ஆண்டாள்
  2. மணவாள மாமுனிகள்
  3. இராமானுசர்
  4. அனுமார்
  5. கருடன்
  6. நாரதர்
  7. திருமகள்
  8. ஆதிசேஷன்
  9. ஆளவந்தார்
  10. மீராபாய்
  11. நாதமுனிகள்