வனேடியம் மூவாக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வனேடியம் செசுகியுவாக்சைடு , வனேடிக் ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1314-34-7 | |
பப்கெம் | 518710 |
வே.ந.வி.ப எண் | YW3050000 |
பண்புகள் | |
V2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 149.881 g/mol |
தோற்றம் | கருப்பு துகள் |
அடர்த்தி | 4.87 g/cm3 |
உருகுநிலை | 1,940 °C (3,520 °F; 2,210 K) |
other solvents-இல் கரைதிறன் | கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோண (karelianite), hR30 |
புறவெளித் தொகுதி | R-3c h, No. 167 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம் மூவாக்சைடு (Vanadium(III) oxide, வனேடியம்(III) ஆக்சைடு) என்பது V2O3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இது கருப்பு நிறம் கொண்டு திடரூபத்தில் காணப்படுகிறது. வனேடியம் ஐந்தாக்சைடு ஐதரசன் அல்லது மோனாக்சைடால் வனேடியம் மூவாக்சைடாக ஒடுக்கப்படுகிறது.[1][2] இந்த அடிப்படை ஆக்சைடு அமிலங்களில் கரைந்து மூவனேடிய அணைவுச் சேர்மங்களின் கரைசலைத் தருகிறது.[2] வனேடியம் மூவாக்சைடு V2O3 கொரண்டம் கட்டமைப்பில் காணப்படுகிறது. 160 பாகை கெல்வின் வெப்பநிலையில் நேர் காந்த ஆற்றலுக்கு எதிராக செயல்படுகிறது.[2] இந்த வெப்பநிலையில் இதனுடைய மின்கடத்தும் தன்மை திடீரென உலோகப் பண்பிலிருந்து மாற்றமடைகிறது.[3] காற்றில் படுமாறு திறந்து வைத்தால் இது படிபடியாக கருநீல நிற V2O4 ஆக மாறுகிறது[3]. இயற்கையில் இது அரிதான கார்லியனைட்டு தாதுவாகக் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1267.
- ↑ 2.0 2.1 2.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 3.0 3.1 E.M. Page, S.A.Wass (1994),Vanadium:Inorganic and Coordination chemistry, Encyclopedia of Inorganic Chemistry, John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0